25 August 2015

தொக்கி நிக்கும் தொடர்பு!

தொலைந்து போனேன்  என்று
தொடர் எழுத ஆசை கொண்டேன்!
தொடர்கின்றார்கள் இன்னும்
தொலைதூரப் புலியோ ,,?,
தொடாதே! முக்கிய
தொலை தூர அழைப்புக்களை.
தொட்டுப்பார்க்கும் புலனாய்வு கூட்டம்.
தொலைபேசி அடித்து உதைத்து
தொங்குது அங்கே!!


தொடர்ந்தும் வரும் உள் அழைப்பு
தெமலத என்று எனக்கு புரியாத
தொல் மொழியாம் நீ அறிவியோ,,?,
தொடராதே என்னை!
தொடர் எழுதுகின்றேன்!


தொலைநகலில் தகவல் அனுப்பு
தொலைந்த காதலியை தேடும்
தொலைந்தவன் என்று !


தொட்டுச்செல்ல இது என்ன
தென்னிந்திய இந்து ராம் பேட்டியா??
தொலைக்காட்சியில் பார்க்க!
தொலைந்தவர்கள் விடயம் வராது!
தொலைந்து போ நீயும் உன் அழைப்பும்.
தொக்கி நிக்கும் !!அவலத்துடன்
தொலைதூர ஏதிலி!
தொடர்பு தொலைந்தாலும்
தொடரும் தேடல்.

....

யாவும் கற்பனை.

தெமல -தமிழா என்று சிங்களத்தில் கேட்பது விசாரணை போல!

15 comments :

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ஒரு புறம் அங்கதம், மறு புறம் கவிதை. உள்ளூடே நகைச்சுவை.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ஒரு புறம் அங்கதம், மறு புறம் கவிதை. உள்ளூடே நகைச்சுவை.

கரந்தை ஜெயக்குமார் said...

தொடர்பு தொலைந்தாலும்
தொடரும் தேடல்.

தேடல் வெற்றி பெறட்டும்
தம +1

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

தேடல் குணம் கொண்டவர்தான் படைப்பாளியாக முடியும்.கவிதை கற்பனை என்றாலும் உண்மைகள் பல ஒளிந்து கிடக்கின்றன
வாழ்த்துக்கள்

Thulasidharan V Thillaiakathu said...

அருமையாக உண்மைகளினூடே பயணிக்கும் தேடல் கவிதை ...

ஸ்ரீராம். said...

ரசித்தேன்.

”தளிர் சுரேஷ்” said...

நல்லதொரு தேடல்! அருமை!

KILLERGEE Devakottai said...


அருமையான சொல்லாடல் கவிதை
தமிழ் மணம் 4

Unknown said...

தேடல்தான் மனித வளர்சிக்கு ஆதாரம்!

Unknown said...

எமக்குள்ளே எந்நேரமும் ஒலித்து ஓலமிடும் அவலங்கள் யார் அறிவார்.. திரும்பிப் பார்க்க வைக்கும் சிந்தனைகள் உங்கள் தேடல்களாக...அருமை தம்பி!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அண்ணா
நிஜத்தின் தேடல் நன்றாக உள்ளது.த.ம 6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கரூர்பூபகீதன் said...

வணக்கம் ஐயா!! தங்கள் தளத்திற்கு புதியவன் இன்றுதான் வந்தேன் வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியதற்கும் என் தளத்தில் முதல் நபராக பின்னுட்டம் இட்டு சிறப்பித்ததற்கும் நன்றிகள் பல ஐயா!!!

இனி தொடர்ந்து வருவேன்
அன்புடன் கரூர்பூபகீதன் நன்றி!?!

சென்னை பித்தன் said...

நன்று

putthan said...

எனது புளொக்கை வலைச்சரத்தில் இவ்வாரம் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள்....நான் ஒரு சிறந்த எழுத்தாளன் என்று சொல்ல முடியாது....எனது அனுபவங்களையும்,எண்ணங்களையும் எனது தமிழில் கிறுக்குகின்றேன்..வாசகர்கள் என்னை ஏற்றுகொண்டுள்ளார்கள் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து கிறுக்குகின்றேன்...மீண்டும் நன்றிகள்


நட்புடன் புத்தன்...(ஆர்.ஆர்...இ.இரத்தினசீலன்)

G.M Balasubramaniam said...

என்னதான் கவிதையை ரசிக்க நினைத்தாலும் உடே இருக்கும் ஒரு சோக கீதம் புலனாகிறது. இந்த ஏதிலி என்னும் வார்த்தையை அடிக்கடி உபயோகிக்கிறீர்கள். புரிவதில்லை. ஒரு மகிழ்ச்சியான பதிவு எழுத வேண்டுகிறேன் கற்பனைக்குப் பஞ்சம் இல்லை என்றே தோன்றுகிற்து,