26 February 2016

யாசிக்கும் ஏதிலி -1

அறிமுகம் இங்கே --http://www.thanimaram.org/2016/02/blog-post_24.html


யாசிப்பும் வியாபாரம் எனில்
யான் யாதுமற்ற அகதி!
யவன தேசமும்
யாத்திரை போவேன்
யாசித்த கர்மவினை தீர்க்க!

              (யாதவன் நாட்குறிப்பில் .. )



கார்கால மழையின் சிறப்பை குறுந்தொகை சொல்லியது ஒரு வரலாறு என்றால்! மாரிகால மழையின் துயரை தமிழக சென்னைவாசிகளும் ,புறநகர் வாசிகளும் அனுபவித்த அவலத்தை  தடுப்பதுக்கு எந்த மக்கள் தலைவர்களும் இதயபூர்வமாக முன்னேற்பாடு பற்றி அனுகியிருந்தால் இந்த மலிவு ஸ்டிர்க்கர் விளம்பரம் எல்லாம் தோன்றியிருக்குமா ??

அதனை சமூக வலைத்தளங்களில் கழுவி ஊத்தும் நிலை தோன்றியிருக்குமா ?ஊடகங்கள் எல்லாம் தனக்கு பிடித்தவர்களின் பின்னே தள்ளாடுது ? என்று பாரிசின் மையப்பகுதியில் இயங்கும் தனியார் பிரெஞ்சு உணவகத்தில் தலைமைச் சமையளார் பணி முடிந்து வழமை போல வெளியில் வந்த  யாதவன் பேச்சை உடன் வந்த குணா கேட்டுக்கொண்டு வந்தான்



.சக நண்பனாக உன்னைநினைத்து பட ரமேஸ்க்கண்ணா போல  இதை எல்லாம் பொதுவில் பேசினால் முகநூலில் பிளாக் செய்யும் தந்திரம் சிலருக்கு புரிவதில்லை !

வீனாக மனதை பதட்டநிலையில் வைத்து இருக்கும் செயல் தேவைதானா மச்சான் குணா??

சமூகப்போராளி என்றால் யாதவன் அடுத்த சூடான செய்தி வரும் வரை களத்தில் நின்று போராட வேணும் அதுதான் இப்ப பெஷன் !

என்னமோ போடா மாதவா போல எனக்கு இந்தக்களம் எல்லாம் புதுசு .

இனவாத யுத்தகளம் எத்தனை சூடான செய்தி தந்து இருக்கும் நம்தேசத்தில் .

எல்லாம் இழந்து போனபின் இப்ப சமூகத்தளத்தில் வேஷம் கட்டி ஆவது ஒன்றும்மில்லை குணா .


அப்படிச்சொல்லாத  எகிப்து நாட்டில் ஆட்சிமாற்றத்துக்கு அடித்தளமிட்டதே சமூகவலைத்தளங்கள் தான் !

மறந்துவிடாத அது நன்கு மறக்கவில்லை குணா ஆனால் இன்றும் சிரியா பற்றி எந்த ஊடகமும் நடுநிலைமையுடன் பேச மறுப்பது ,அங்கு நிகழும் மரணங்களை வெளிப்படுத்தாமை எதனால் ? நமக்கு வந்தால் இரத்தம் மற்றவர்களுக்கு சட்னியா!மனித உரிமை என்ற போர்வையில்!!!

இப்படித்தானே ஈழத்திலும் பல லட்சம் மக்கள்  அன்று அழிக்கப்பட்டனர் யுத்த வெறியில்.

அந்த நேரம் இந்த சமூக வலைத்தளம் எல்லாம் வரவுமில்லை ,இப்போது போல பிரபல்யம்மாகவும்மில்லை ,அந்த துயரத்தில் இன்னும் விடுபடாத பலரின் கதைகள் எல்லாம் அறியாது.

 சிலர் முகநூலில் போலி வீரனாக பொங்கி ஆவது ஒறும்மில்லை .

அதுசரிதான் ஆமா இப்ப நீ இப்படியே கோயிலுக்கு போகப்போறியா ??

ஓம் வேலைக்களைப்பு இல்லையா ??

குணா எனக்கு  என் குரு நம்பிக்கையுடன் தரும் கடமையை செய்யவேண்டும்.

 அதுக்காக உடல்க்களைப்பு என்று சாட்டுச்சொல்லி ஒதுங்ககூடாது.

 சரி சரி நீதான் அடுத்த குருசாமி என்று அங்கே சிலர் கிண்டல் பண்ணுவதை நான் அறிவேன் !

மச்சாம் தனக்கு முன்னுரிமை கிடைக்கவில்லை என்று ஆற்றாமையில் சிலர் அரசியலில் சாணி போல ஆன்மீகத்திலும் சந்தனம் பூசுவது இயல்பு.

 இது எல்லாம் பார்த்தால் பொது அரசியலில் வரமுடியாது நல்லாட்சி என்ற கூட்டத்தில்.

இதைப்பார் குணா காலதேவன் போடும் கணக்கு எப்படியோ தெரியாது ??

ஆனாலும் குரு ஆசியும் ,மணிகண்டன் அருளும் இருந்தால் !இதுதான் உன் பாதை என்று விதியாக அமைந்தால் குருப்பதவி ஏற்றுக்கொள்வேன் !

எதோ ஒரு திறமை என்னிடம் இருப்பதால் தானே என்னைத்தேடி பதவி வருகின்றது ?எல்லாருக்கும் எல்லாம் வாய்ப்பதில்லை!  எத்தனையோ காவடி தூக்கிவிட்டேன் தலைமைப்பதவி என்ற பொறுப்பில் ! என்பதை நீ அறிவாய் தானே குணா??

இன்னும் யாசிப்போம்........

16 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

யாருமே எங்களை
மனிதர் எனக் கூறவில்லை

இதுதானே உலகம்
வேதனையான உலகம்
தொடருங்கள்நண்பரே
தம +1

வைசாலி செல்வம் said...

அருமை ஐயா..தொடருங்கள்..

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

எங்கெங்கோ சுற்றிக் கடைசியில் வயிற்றில் கத்தியைச் செருகியதுபோல் ஒரு கவிதையைத் தந்து விட்டீர்களே அய்யா! அது யார் எழுதியது? தம2

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

ஆகா..முதலில் காணப்பட்டது, இப்போது தமிழ்மணத்தைக் காணவில்லையே? ஏன்..?

கரூர்பூபகீதன் said...

படித்துகொண்டே வந்தேன் -வந்தால் இறுதியில் பகீர் கவிதை நெஞ்சை பிசைகிறது -விடாமல் தொடர்கிறேன் சகோ!

KILLERGEE Devakottai said...

முடிவில் வேதனையைத் தந்தது நண்பரே
த.ம-2

திண்டுக்கல் தனபாலன் said...

ம்ம்ம்...

”தளிர் சுரேஷ்” said...

அருமை! தொடர்கிறேன்!

”தளிர் சுரேஷ்” said...

அருமை! தொடர்கிறேன்!

Yarlpavanan said...

அருமையான தொடர்

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
படித்த போது வேதனையான விடயந்தான்.. சொல்லிய விதம் நன்று தொடருங்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

MANO நாஞ்சில் மனோ said...

அழுதழுது கண்ணில் நீர் வற்றியதுதான் மிச்சம், வேறென்னத்தை சொல்ல !

அன்னபூரணி அதிரா:) said...

அரசியல் படிக்க விருப்பமில்லை எனக்கு, அதனால பஜ்ஜி எடுத்திட்டுப் போறேன்ன்:)

Anonymous said...

வாசித்தேன் சகோதரா முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்.
எனக்கு சிறுகதைகள் வாசிப்பதில் ஆர்வமில்லை.
10-12 வயதிலிருந்து விழுந்து விழுந்து வாசித்தவள் தான்.
ஏனோ புரியவில்லை. மன்னிக்கவும் .
முயற்சிக்கிறேன். வாசித்தால் நிச்சயம் கருத்திடுவேன்.

Thulasidharan V Thillaiakathu said...

வேதனையான விசயம்...முடிவில்....தொடர்கின்றோம்

Ajai Sunilkar Joseph said...

கடைசி கொடுக்கப்பட்டுள்ள
புகைப்பட கவிதை நெஞ்சில்
ஈட்டி பாய்ந்தாற் போல நட்பே...