24 May 2016

யா+---சிக்-கும் .. ஏ-தி---லி! 10


முன்னே இங்கு யாசித்து- http://www.thanimaram.org/2016/05/9.html


இனி .. ஏதிலி தொடர....

 திமிரில் அழிவேன் என்றால்!
திமிர் பிடித்த ஆலமரமாக
திரிவேன் உயிர்ப்பில்! அப்போது உன் ஆசையை
திரியில் ஒளிரும்  விளக்காய்!!!!
திரித்து விடு மரத்தில்
தீயாக சுடர்விடுவேன்!
                                      (  யாதவன் நாட்குறிப்பில்)




தமிழ் சினிமாவில் வில்லங்களிடம் இருந்து தப்ப ஹீரோ, ஹீரோயினி ஓடுவது போல நினைச்சு ஏன் நீ ஓடிவரக்கூடாது யாழினி ரயிலைப்பிடிக்க!  பஸ்சில் இருந்து இறங்கியதும் எதிரே பாரிஸ் பக்கம் பயணிக்கும் ரயிலைக் கண்டதும் ஓட நினைத்தவனை பார்த்து! நில்லு யாதவன் என்ற யாழினியின் கூற்று மேலே பதில் தந்தான் யாதவன்!

உனக்கு எப்போதும் சினிமா மோகம் தான் !!உன்னைச்சின்ன வயதில் ஊர் சுற்றவிட்டது பிழையாப்போச்சு!என் மாமா உன்னை நல்லா வளர்கவில்லை பொன்மனச்செல்வன் பட விஜய்காந்து போல! என்னால் உன்னைப்போல ஓட முடியாது! மெதுவாக நடந்து அடுத்த ரயிலைப்பிடிப்பம் யாதவன் என்று கெஞ்சும் இவள் முகத்தை எப்போதும் ரசிக்கலாம் சினேஹா முகம் போல என்று சொல்லத்தான் நினைக்கின்றேன் பாடல் போல சொல்ல நினைத்தாலும் மெளனம் பேசியது பட ஹீரோ போல அமைதியாக இருந்தான்!





 .உன்னால் ஒரு ரயிலை தவறவிட்டாச்சு! அடுத்த ரயில் இன்னும் 15 நிமிடம் காத்து இருக்கனும் ரயில் தரிப்பிடத்தில் யாழினி.

 இந்த 15 நிமிடத்தால் ஒரு குடியும் மூழ்கிப்போகாது யாதவன் ரயிலைப்பிடிக்க ஓடும் போது எதிர்பாரத விபத்து நேர்ந்தால் பாதிப்படைவது நீ மட்டுமல்ல ,இந்த ரயில் போக்குவரத்தும் தான்!


 இல்லை யாழினி இப்படி ஓடுவதிலும் ஹிக் இருக்கு வேதம் படத்தில் அர்ஜீன் ஓ அன்பே நீ குட்டிப்புயல் பாட்டுக்கு ஓடுவது போல)))!

 உன்னை சுட்டு இருக்கனும்டா!


அதுசரி ஊரில் உயிரைக்காப்பாற்ற ஓடினம் !இப்ப பொருளாதாரத்தைக் காக்க ஓடுகின்றம்.


 இடையில் இப்ப இயற்க்கையின் பிடியில் இருந்து தப்ப ஓடுகின்றம்!




 ஒடுவதே வாழ்க்கையாகிப்போச்சு!


 வேலைக்கு தாமதம் ஆகும் என்று தெரிந்தால் ஏன் முன்கூட்டியே கோயிலில் இருந்து வெளியில் வந்திருக்கக்கூடாது ,,?,

எனக்கு நீ என்னோடு வருவாய் என தெரியாதே !

என் நேரம் எப்போதும் ஒரே மாதிரித்தான் !

.சரி வேலைக்கு தாமதம் என்றால் ஒரு கைபேசி  அழைப்பில் முதலாளிக்கு சொல்வது தானே பணிக்கு வரத்தாமதம் என்று வானொலி நேரடி நிகழ்ச்சி தாமதமாகும் போது இடைவிடாத இசை ஒலிப்பது போல  ! நான் எந்த தடங்களையும் தாண்டி எப்போதும் வேலைக்கு முன்கூட்டிப்போவது தான் என் வாடிக்கை  யாழினி!



அதனால் உனக்கு என்ன தங்கப்பரிசா கிடைக்கப்போகுது !நிச்சயம் இல்லை !!ஆனால் பதட்டம் இல்லாமல் சமையலில் கவனம் செலுத்த முடியும் .அடுப்பு வெக்கை ஒருபுறம் ,அடுத்தடுத்து வரும் சாப்பாட்டு  ஆடர்  ஒழுங்காக போக நம் திறமை முக்கியம்!

 அது சரி நீ எப்போதும் முன் எச்சரிக்கை வாதிதான்! ஆனால் எப்படி இல்லறத் தேர்வில் கோட்டை விட்டாய் ?,என்னை பாரிசில்  தவிக்கவிட்டு இன்னொருத்தியை இலங்கையில் தாரமாக ஏற்றாய் மனைவி என்று  முதல்மரியாதை ஹீரோ போல!



யாழினியின் பேச்சைக்கேட்டு திகைத்து நின்றான் யாதவன்! உண்மை சொல்லவா யாழினி!  எல்லாம் உன்னால் தானடி !என் கனவு ,என் கற்பனை .என்,ஆசைக்கு எல்லாம் தீயிட்ட  நீ தமிழில் வந்த தெலுங்கு மொழிப்பட யாருக்கு மாப்பிள்ளை யாரோ ரம்யாகிருஸ்ணன் போல நீயடி என்று சொல்ல ஆசை !


ஆனாலும் உறவுகள், பாசம் என்னை சிறைப்பறவை போல சிந்திக்க வைக்கின்றது! ஆனாலும் நான் சிரிக்கின்றேன்! சிரிப்பு வருது சிரிப்பு வருது சித்தப்பு  பொற்காலம் பட பாடல்  போல  உன் போல பட்டதாரி நான்  இல்லைத்தானே! உன் பார்வையில் ஏதிலி  தோற்றவன் என்றாலும் என் பாதையில் பயணிக்கின்றேன்!

 யாரிடமும் லைக்கு வேண்டாத முகநூல் நட்பு போல!

கோட்டைவிட்டது என் காதல் அல்ல உன் பட்டதாரி திமிர்!அதை உன் அப்பன் அறிவான் !அவன் தானே என்னிடம் கேட்டான்! என்னிடம் என் மகளை வரம் கேட்க உனக்கு என்ன தகுதி இருக்கு பிரெஞ்சில் என்று ?,

 இன்று சொல்லவா என்னிடம் ஒரு சுய  தொழில் இருக்கு!இன்று  அடியவன் வழிகாட்ட என் குரு மேற்பார்வை செய்ய எத்தனை பேரை பாத யாத்திரையில் வழிநடத்துக்கின்றோம் ஆன்மீகத்தில்! அதுமட்டுமா! என் முகநூல் நட்புக்கள் .,.நம் தாயக உறவுகள் எப்படா நண்பனே  வருவாய் மீண்டும் நம் கலையகம் போல என அந்தமான் காதலி பட ஹீரோ போல என்று என் பால்ய காலம் எல்லாம் உங்க அப்பனுக்கும் ,உனக்கும் திமிர் பிடித்தவன் இவன் என்றால் நான் எப்போதும் புரியாத புதிர்தான்!


 ஆனால் நானும் படிச்சவன் என்பதை இப்ப புரியும் உன் நிலையை நான்  புரியும் போது! உன்னை நினைத்து பட  லைலா போல தான் ஆனாலும் !ரயில்கள் எப்போதும் யாருக்காவும் காத்து இருப்பதில்லை. உனக்கு தெரியுமா?, ரயில்களில் கூட ஆயிரம் அழகு இருக்கு! சாதரண ரயில், அதிகூடிய வேக ரயில், மின்னல் ரயில் இன்னும் பலதை இந்த பாரிஸ் ரயில் அறியும்!



 நீ அறிவியோ நான் அறியேன்! ஆனால் நான் ஓடுவேன்!! இது திமிர் அல்ல தன்நம்மிக்கை  உங்க அப்பன் என்னை இதே  போல ஒரு ரயில் தரிப்பிடத்தில் தானே என் முகத்தில் சந்தணம் போல வசை மொழி புரிந்தான்!



ஹீ அப்போதும் சிரிச்சேன் !இப்போதும் சிரிக்கின்றேன் !!ஏனா இந்த சினேஹா போனால் என்ன இன்னொரு திவ்வியா என நம் சினிமா மாறிக்கொண்டே போகும் [[





தொடரும்!

4 comments :

MANO நாஞ்சில் மனோ said...

அதுசரி ஊரில் உயிரைக்காப்பாற்ற ஓடினம் !இப்ப பொருளாதாரத்தைக் காக்க ஓடுகின்றம்.


இடையில் இப்ப இயற்க்கையின் பிடியில் இருந்து தப்ப ஓடுகின்றம்!//

வேற வழியே இல்லை, வாழ்க்கை என்பது ஓட்டம்தான் நிற்காத ஓட்டம்தான்...பலவிதங்களில் ஓடவேண்டும்.

Ajai Sunilkar Joseph said...

காணொளி புரியவே இல்லை...
சரி சரி ஆகட்டும்...
தொடருங்கள் நண்பரே....

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

திரைப்பட கதையை உதாரணமாகக் கூறி சொல்ல வந்ததை விளக்குவது உங்களுக்கே உரித்தான சிறப்பான நடை . தொடர்கிறேன்

KILLERGEE Devakottai said...


பதிவை ரசித்தேன் நண்பரே காணொளி தெலு(ங்)கு பாடலையும் அருமை.
தமிழ் மணம் 3