07 May 2016

யாசிக்கும் ஏ-தி-லி--9

முன்னம் இங்கே-http://www.thanimaram.org/2016_04_01_archive.html
இனி....

விதி என்பது என் வாழ்வில்
விடுதலை அல்லாத சிறை!
விரும்பியவள் கேட்டாள்
விலை போல பட்டம்
விரும்பி ஏற்க இது என்ன
விடுதலைப்போரா!

                    (   யாதவன் நாட்குறிப்பில்)

காத்து இருந்தேன் தனியே எதிர்பார்த்து இருந்தேன் என்ற ராசாமகன் படப்பாடல் போலவோ இல்லை,  உனை  எதிர்பார்த்திருந்தேன்  தென்றலிடம் கேட்டேன்  என்ற வனஜா கிரிஜா படப்பாடல் போல அல்ல பார்த்துப்பார்த்து கண்கள் பூத்திருப்பேன் என்ற நீ வருவாய் என  படப்பாடல் போலும் அல்ல பஸ்சுக்கு காத்திருக்கும் யாதவன் நிலை !இது 12 பி படம் போலவும் அல்ல இந்த வீதியூடாக  பஸ் சில நேரத்தில் குறித்த நேரத்துக்கு வரும் பலசமயத்தில் வராமலும் போகும் என்பதை நன்கு அறிவான் யாதவன்.


 ஆனால் யாழினிக்கு ஈழத் தமிழருக்கு தீர்வுத்திட்டம் வரும் என்று காத்து இருக்கும் கூத்தணி போலத்தான் பஸ்சுக்கு காத்து இருக்கும் நிலை !

என்ன யாதவன் இன்னும் பஸ் வரல? வரும் ஆனா வராது என்று வடிவேல் போலச் சொன்னால் இருக்கும் கோபத்தில் இன்னும் நன்மொழிகள் கேட்க நேரிடலாம் என்பதால் இப்ப வந்திடும் என்று பாரதிகண்ணம்மா படத்தில் விஜய்குமார் ரயில் நிலையத்தில் காத்து இருப்பது போல நம்பிக்கையூட்டினான் யாதவன்.

உள்ளே வெளியே படம் போல யாதவனுக்கும் வேலைக்கு செல்ல வேண்டிய பதட்டம் என்றாலும் பஸ் நிறுத்தத்தில் தனியே யாழினியை விட்டுச்செல்ல தன்மானம் இடம்கொடுக்கவில்லை .பல்வேறு இன இளைஞர்கள் வீதியால் போகும் இடம் நாகரிம்மற்ற வார்த்தைகள் நன்கு உதிரும் கார்கால பனித்துளிகள் போல .

செல்லம்மா பாட்டி நம்பித்தானே யாழினியை என்னோடு அனுப்பிவைத்தா. இந்த நேரத்தில் முகம்சுழிக்கும் வண்ணம் ஏதும் நடக்கக்கூடாது என்பதால் பொறுமையாக பஸ் வருகின்றா என்று வீதியை நோக்கினான் என்றும் அன்புடன் படத்தில் முரளி  சித்தாராவீட்டை நோக்குவது போல.

 எப்ப இந்தியா பயணம் யாதவன் என்று யாழினி கேட்டதும் தான் பஸ்சுக்கு காத்து இருக்கும் நேரத்தினை நோக்கினான் யாதவன் இன்னும் 7 நிமிடங்கள் காட்டியது திரைப்பலகை .

எப்போதும் போவது போல தை முதல் வாரத்தில் போக இருக்கின்றேன் யாழினி .நானும் உன்னோடு வரவா இந்தியாவுக்கு இந்த இயந்திரமான உலகத்தில் இருந்து கொஞ்சம் விடுபடணும் போல இருக்கு .


வேலையில் விடுமுறைகிடைக்கும் போது வீட்டிற்கு வந்தால் முன்னர் போல சந்தோஸம் இல்லை .

தமிழ்ச் சினிமாவில்  வரும் அமெரிக்கா மாப்பிள்ளை நிலை போல இது பட்டதாரி மாப்பிள்ளை, இது லண்டன் மாப்பிள்ளை என்று ஒரே கலியாணப் பேச்சுத்தான் .


என் நிம்மதியே கொட்டுப்போச்சு காதலே நிம்மதி பட ராதிகா போல.தனியாக  மனம்விட்டுப்பேச இப்ப யாரும் இல்லாத என் சுயநிலையை  நினைக்கும் போது வாழ்க்கையில் வெறுப்பாக இருக்கு.

 உனக்கு என்ன சந்தோஸமாக இருக்கின்றாய் யாதவன் .ஏன் இப்படி பைத்தியமானே நான் பையத்தியமானே கடல்ப்பூக்கள் பாடல் போல  ஏன் இந்த மயக்கம் இப்படி உன்னோடு நடுவீதியில் நின்று புலம்பும் இந்த நிலை எதுவும் புரியல எனக்கு!

முதலில் மன தைரியம் முக்கியம் யாழினி. மனதை  தளரவிடாத விழியில் வழியும் கண்ணீரைத்துடை முதலில்.

 யாராவது பார்த்தால் நான் பேச நினைப்பதெல்லாம் மோகினி நிலை போலகிவிடும் .

நேசிப்பு என்பது யாசிப்பு போல யார்? யாரை ,ஏன் ?எப்படி நேசிப்பது என்பது முன்வினைப்பயன்.

 எதிர்ப்பார்ப்புக்களும் கனவுகளும் எல்லாருக்கும் நிறைவேறுவதில்லை யாழினி.

நீ என்னோடு வருகின்றேன் என்று இப்ப சொல்லும் போது கேட்க சுகமான சுமைகள் போல ஆனால் நான் போவது ஆன்மீகப்பயணம் குருவுடன் சேர்ந்து  கூட்டத்தை வழிநடத்த உதவியாகத்தான்  எப்போதும் என்னை நம்பும் அவரை விட்டுப்பிரிய மாட்டேன் கட்சிமாறும் சட்டமன்ற உறுப்பினர் போல !

உன்னை அழைத்துப்போக தயாராக இருக்கின்றேன் .ஆனால் தனியாக அல்ல! உனக்குப் பிடித்தஒரு துணையைத் தேடிய பின் என்னோடு வா!  தமிழகம். கேரளா எல்லாம் நிச்சயம் நீ பார்க்க வேண்டிய ஆலயங்கள் எல்லாம் சுற்றிக்காட்டுவேன்!ஏன் தெரியுமா ,,?,ஏதிலி யாசிப்பு  பொய்முகம் அல்ல! இது உன்னை குத்திக்காட்டுகின்றேன் என்று நினைக்காத படிக்காதவன்  நான் ஏதிலி என்றுதானே நீ என் காதலை புரிந்துகொள்ளவில்லை ?



தொடரும்....

2 comments :

Nagendra Bharathi said...

அருமை

Thulasidharan V Thillaiakathu said...

அடடா யாதவனின் காதலைப் புரிந்து கொள்ளவில்லையா யாழினி....புரிந்து கொள்ள வைத்து விடுங்கள் சோகம் வேண்டாம்....சரி தமிழ்நாட்டிற்கு வருகையா நேசன்? சொல்லுங்கள் வந்தால்...