20 May 2016

பிரார்த்திப்போம் !!நீயே எல்லாம்!!!

இலங்கேஸ்வரன் பூமியை
இடையில் வந்த
இங்கிலாந்து
இணைத்து வைத்து போனது!
இந்தாருங்கள்
இனி ஆளுங்கள் என்று!!
இனவாதக்கொள்கை மேலிட
இறையாண்மை  என்று தமிழ்பண்டிதர்
இஞ்சா போட !!!
இனங்களை  அழித்ததும்!
இலங்கை பாராளமன்ற எதிர்கட்சி பதவி
இது என்று வலம் வந்த காலம்
இறந்தகாலம்!

இதோ வெற்றுவிட்டோம்
இருதேசப்போரை
இன்றுடன் 7 ஆண்டு
இன்றைய எதிர்கட்சி தலைவர்
இப்போதும் இஞ்சா!

  இன்னும் தீர்வில்லை இன ஐக்கியம்!
இருந்தாலும் !வெளிநாடுகளுக்கு
இத்தனை கோடியில்
இந்தளவு வளர்ச்சி என்று
இயம்பி எழுந்தன கட்டிடங்கள்.
இன்றும் முன்னால் வேந்தன் போல
இரந்து நிற்கும்
இந்த உறவுகள் நிலையை என்னவென்பது?

இலங்கை நாட்டில்
இயற்க்கையின் சீற்றங்களும்,
இனியும் கையேந்தும்?
இருப்புக்களும் ! தமிழர் பூமியும்
இன்றும் புதைந்து போகும்
இரத்தக்கறைகள் !


இலத்திரனியல் ஊடகங்கள்
இருட்டடைப்பு செய்தாலும்!
இது நல்லாட்சி என்று
இனிப்புக்கொடுத்தோரும்
இன்னும் தேடிவரவில்லை
இருக்கின்றோம்
இழவுகள் விழுந்தாலும் !


இடம்பெயர்தோர் வலிகளை
இடர்பாட்டை இனிப்போக்கி
இருள் அகற்றி
இனிதே வாழ
இரக்கம் காட்டு
இறைவனே!
இதுதானே நம்வாழ்வு!

இன்னொரு நதிக்கடல்!!

இனியும் வேண்டாம்!

7 comments :

Ajai Sunilkar Joseph said...

வருத்தமான பதிவு...

கரந்தை ஜெயக்குமார் said...

வேதனைதான் நண்பரே

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

உங்களோடு சேர்ந்து நாங்களும் பிரார்த்திக்கிறோம்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

சோதனை மேல் சோதனை. உங்களுடன் நாங்களும் பிரார்த்தனையில் சேர்ந்துகொள்கிறோம்.

KILLERGEE Devakottai said...

வரிகள் முழுக்க முழுக்க வேதனையானவை நண்பரே
த.ம 3

”தளிர் சுரேஷ்” said...

சோதனைகளில் இருந்து மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன்!

putthan said...

இன்னொரு நந்திகடல் இனியும் வேண்டாம்.....