09 June 2016

யாசிக்கும் --- ஏ--தி--லி---12


முன்னம் இங்கே ஏதிலி கதை-http://www.thanimaram.org/2016/05/11.html

இனி.....
  சிலைகள் சிதைந்து போவது
சில வரலாறு போல
சில நேரத்தில் நீயும்
சிங்காரி சிதைந்தாய்
சிக்கினால் சினேஹா
சில வலிகள் போக்க
சிந்திப்பேனா
சிலோன் போன பின்
சில கதை வரலாம்!

    (யாதவன் நாட்குறிப்பில்)
இனி...



வியாபாரம் என்பது  பன்டைய காலம் முதல் தொடரும் ஒரு பண்டமாற்று எனலாம்! கு.பா ராஜகோபலனின் பெட்டிக்கடை நாராயணன் கவிதை போல ஆனால் காதலும் வியாபாரமா ???

நிச்சயம் கலியாணம் ஒரு வியாபாரம் போலத்தான் !இருப்பவன் சீதனம்/வரதட்சனை  என்று அள்ளிக்கொடுக்கின்றான் தேர்தல் வேட்பாளர் போல  சீதனம்  விரும்பியவன் இலவசத்தை வரவேற்கும் மக்கள் போல வாங்கிக்கொள்கின்றான்  வருவது வரை இலாபம் என்று ஊழல் செய்யும் மந்திரி போல சீதனம் வேண்டாம் என்றால் ஏதோ சர்வதேச யுத்தமீறலை திசை திருப்ப உள்நாட்டு விசாரணைக்கு மட்டும் தலையாட்டும் இலங்கை அரசு போல வினோதமாக பார்க்க வேண்டியிருக்கு யாழினி!


 நிச்சயம் எங்க வம்சம் சூரிய வம்சம் படம்போல இல்லை !ஆனால் ஆனந்தம் படம் போல !!திருப்பதி ஸ்டோர்தான் !!!வியாபாரத்தில்

பெட்டிக்கடையில் தொடங்கிய தாத்தாவின் கடின உழைப்புக்கும் ,அவரின் வாரிசுகள் நிறுவாகத்திறனுக்கும்  இடையில் காலமாற்றம் மட்டுமல்ல, இலங்கை ஆட்சியின் இனவாத செயல்பாடுகளும் முட்டுக்கட்டை போட்டதை முன்னம் எழுதிய கதைகள் போல நீ அறிந்து கொள்ள சந்தர்ப்பம் இல்லை !

இன்றை தலைமுறைக்கு இணையம் தானே இன்னொரு உலகம் நான் உலகம் சுற்றும்  வாலிபன் போல நாடுகள் சுற்றவில்லை !பல ஊர்கள் சுற்றிய வியாபார பரதேசி !

நம் முன்னவர்கள் நாட்டு நடப்பை பத்திரிக்கையிலும், வானொலி கேட்டும்  அறிந்து  கதைகள் எல்லாம் பழங்கதை போல இருக்கலாம்!  முகத்தார்வீடு நாடகம் போல !



ஆனால் சிரிமா ஆட்சியில் இலங்கைப்பொருளாதாரம் வளர்ச்சிகண்டதை நம்ப மறுப்போர் போல உன் தந்தைக்கும் .எனக்கும் இடையில் தாய்மாமன் படம் போலவோ இல்லை  எம்டன்மகன் பரத் போலவோ  மருமகன் என முன்விரோதம் ஏதும்மில்லை !


!இது என்ன இலங்கை அரசியல்க்கட்சிகள் போலவா ?ஆட்சியில்  இருக்கும் போது தமிழர் பிரட்சனைக்கு தீர்வு கிடைக்கும் இது நல்லாட்சி என்பது போலவும் !


பின் வாக்கு வங்கிநோக்கி புலிகள் இன்னும் வாழ்கின்றனர் அதனை முறியடிப்பேன் என்று மக்களை இனவாத நிலையில் வைத்து இருப்பது போல அல்ல !




 வாழ்க்கை ஒரு முறைதான் தவமாய்த் தவமிருந்து  படம் போல! என் தந்தை வலி நான் அறிவேன்!  படிச்சபுள்ள மீட் மை சன் என்று என் தந்தை எத்தனை வியாபார கம்பனிகளுக்கு  என்னை தயாரிப்பாளர் வாரிசு சினிமாவில் ஹீரோவாக வருவது போல  என் கதை தொடங்கும் நேரம் இது  என  கதை எல்லாம் இன்னும் எழுதவில்லை தொடராக முகநூலில்[[[.அதுக்கு நேரமும் இல்லை இப்போது!


என் கனவு உன்னோடு !உயிரோடு உயிராக ,காதலுடன் ,என்றும் அன்புடன் ,டூயட்,எனக்  காத்திருந்தேன் !காலம் எல்லாம்  மெட்டி ஒலி காற்றோடு என்ற பாடல் போல நீ வருவாய் என ,கவிதை பாடும் அலைகள் போல என் பொண்டாட்டி ,பட்டதாரி எம்மா நீயா அரசாங்கம் . மாயமோகினி. சின்னத்தாயி,என் இனிய பொன்நிலாவே ,என் உயிர் நீதானே !என் காதல்  கண்மணி,உனக்காக ஒரு ரோஜா ,உன்னுடன் ,பொன்மனி அவள் கண்மணி போல அல்ல !


அன்புள்ள காதலி ,என் சினேகிதியே !ஆசைக்கிளியே கோபமா ?
என்று எல்லாம் பாடல் புனையக்காத்து இருந்தேன் !


நீயோ கண் இருந்தும் குருடி போல சுள்ளான் ,போக்கிரி ,திருட்டுப்பயல்  ,திமிர் ,படிக்காதவன் ,கோவில்களை  ,மலையூர்மம்பட்டியான்,பொல்லாதவன் ,காதல்க்கிறுக்கன், காதல் எப் எம்,இரவுப்பாடகன் ,நடிகன் , தப்புத்தாளங்கள் ,போல என்னைவிட்டுப் போனாயா யாழினி?



நான் என்ன நடிகனா வேஷம் போட?, இல்லை  இலங்கை அச்சு ஊடகம் லேக்கவுஸ்  பிரதம ஆசிரியர் போலவா ஆட்சிக்கு வக்காலத்து வாங்க ?,எத்தனை தரம் உன்னிடம் பேச ஆசைப்பட்டு இந்த ரயில்த் தரிப்பிடம்,பாடசாலை,வேலைபழகும் இடம் ,என ஓடி ஓடி வந்தேன்  அன்றைய ஜப்பானில் கல்யானராமன் போல ))) ஆஹா வந்திருச்சு என்று!


 இன்று இப்படி எல்லாம் உருகும் பிரெஞ்சுக்காதலியாக நீ  இருப்பாய் என்று அன்றே மனம் சொல்லியது நிஜம் !


ஆனால் இதய வெடிப்புக்கள் ஒன்னும் கொஸ்கமுவ இரானுவக் கிடங்கு வெடி விபத்துப்போல பாரிய சேதமல்ல காரணம் பொதுவெளி அரசியல்  என்றும் போல சொல்ல மாட்டேன் !


ஏன் தெரியுமா ??

இன்னும் உனக்கு நல்லது நடக்க வேண்டும் என்றுதான்  பிரார்த்திக்கின்றேன் !இயற்க்கையின் தீர்ப்புக்கு நாம் எல்லாம் தலை வணங்க வேண்டும்!

 ஆனாலும் இயற்கை படம் போல அல்ல கொஸ்கமுக  வெடி விபத்து  உள்ளக திட்ட மிட்ட நாடகம் போலத்தான் நீயும் அன்று என்னைப்பிரிந்து லண்டன் போனாய்!

இல்லை என்று  உன் நெஞ்சைத்தொட்டு  சொல் !இந்தநிமிடம் வரை என் குரு போட்ட மந்திரிச்ச மாலையும் சரி நானும் சரி.   அறுவடை நாள் நாயகியும் ஏன் இப்படியான கதையை மீட்டவா!அன்றை அடுத்த நிகழ்வு பற்றி!



தொடரும்....





4 comments :

ஸ்ரீராம். said...

ம்ம்ம்....

KILLERGEE Devakottai said...

தொடர்கிறேன் நண்பா...
த.ம. 3

கரந்தை ஜெயக்குமார் said...

தொடர்கிறேன் நண்பரே

”தளிர் சுரேஷ்” said...

பொருத்தமான படங்களோடு தொடர் சுவாரஸ்யம்! தொடர்கிறேன்!