வணக்கம் உறவுகளே நலம் தானே? ஒரு சிறிய இடைவேளையின் பின் இணையத்தின் உதவியுடன் உங்களை நாடி வருகின்றேன்))))
ஆன்மீகப்பக்கம் அதிகம் ஒதுங்கியதால் கூகில் ஆண்டவர் அனுப்பி இருந்த தனிப்பட்ட தனிமரம் வலைக்கான புதிப்பித்தல் கட்டணத்தைப்பற்றிய சுற்று நிரூபம் பற்றி அதிகம் சிந்திக்கவில்லை .
வங்கியில் பணம் இருந்தும் அவர்களின் புதிய பட்டுவாடா நடைமுறை தெளிவின்மையால் தனிமரம் டைமன் இழக்க வேண்டிய நிலை)))) வாடகை வீட்டுக்கு வாடகைப்பணம் கொடுக்காவிட்டால் வீட்டைவிட்டு எழும்பச்சொல்வது இயல்பு தானே?))) அதனால் என்ன இருக்கவே இருக்கு தெய்வம் தந்த திண்ணைவீடு )))மீண்டும் டைமன் வாங்கும் வரை இந்தமுகவரியில் தனிமரம் குடியிருக்கும்.http://nesan-kalaisiva.blogspot.fr/2016/11/6!
தொழில்நுட்ப மாற்றம் சிந்தனைக்கு ஒத்துழைக்கவில்லை .அதனால் மகா ஜனங்களே இதுவரை தனிமரம் என்ற வலை மீண்டும் அடியேன் தொடங்கிய ஆரம்பகால சுயமுகவரி வலைப்பதிவாக சில காலம் இனித் தொடரும் உத்தேசத்துடன் உங்களையும் இனித்தொல்லை கொடுக்க கோதாவில் குதிக்கின்றேன் !
கல்லெறி என்றாலும் சொல் எறி என்றாலும் வலையுறவுகளை மறக்கமுடியாது)))) !
ஆரம்ப காலத்தில் வலையில் இருந்தவர்களை இப்போது அதிகம் முகநூலில் கலாய்ப்பது
கொஞ்சம் இன்பம் என்றாலும் !
வலை போல மகிழ்ச்சி முகநூலில் இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.
இனிமேல் தனிமரம் அவ்வளவுதானா ?என்போருக்கு எந்த தடைகளையும் தாண்டும் சக்தியை சினேஹா சிறப்பாக வழிகாட்டுவாள் என்ற நம்பிக்கையுடன் தனிமரம் நானும் காத்தே இருக்கின்றேன்)))) http://nesan-kalaisiva.blogspot.fr/2016/11/6.html!
சென்னைக்கு திடீர் என்று ஆன்மீகப்பயணம் வந்ததும் ,வரும் வழி எங்கும் பார்த்த காட்சிகளும் ,கதைகளும் இனி உங்களுடன் தொடர்ந்து பேசலாம் பிரார்த்தம் இருக்கும் போதெல்லாம் என்ற நம்பிக்கையுடன்!
உங்களுடன்,
தனிமரம்.
2 comments :
அருமை
மீண்டும் வந்தாச்சு! ஓ அதான் இத்தனை நாள் காணலையா? மீண்டும் அதே முகவரி ஆனால் தளத்தின் வடிவமைப்பு சற்று மாறியுள்ளதோ??!!
ஹப்பா மீண்டும் சினேகா!! இப்பத்தான் நேசன்!! அஹஹ் தொடர்கிறோம்
Post a Comment