07 September 2017

விழிகளில். வந்திடு கண்ணே விம்மலுடன்-14

இருமொழி பேசும் இனங்கள் வாழும் தேசத்தில் இன்றும் அரசியல் காரணங்களுக்காகவும் , பகிடிவதை, பாலியல் தீண்டல், பதவி சுகம், என்பவற்றுக்காய் இலங்கையில் பல்கலைக்கழகங்கள் அடிக்கடி இழுத்து மூடப்படுவதும் ,புதிய திட்டங்களுக்கு எதிர்ப்பு போராட்டங்கள்  என்று  வீதியில் போராடும் மாணவ சமூகம் என நாளாந்தம் பார்க்கும் அச்சில் வரும் ஊடகத்தின் ஒற்றைவரிச் செய்தியில் கடந்து போகின்றோம் நாம் பலர் .முன்னால் ஜனாதிபதியும், இன்நாள்  ஜனாதிபதியும் ஒரே கட்சி விழாவில் சந்திப்பது போல. !


படிக்கும் காலத்தில் ஏன் தேவையற்ற அரசியல் ? படிக்க வேண்டிய காலத்தில் படிப்புடன் மட்டும் செயல்ப்படவேண்டும் .மக்களுக்கு சேவை ,விளக்கம், விழிப்புணர்வு ,என்ற  புது இரத்தம் பாய்ச்சல் ஆயுத எழுத்துப்படம் போல ,ஜீ பட சரண்ராஜ் போலவோ இல்லை ,ஸ்டூடன் நம்பர்-1 போலவோ இரசித்துவிட்டு நகரும் செயல் இன்னும் தொடர்கின்றது ஒருபுறம் நம் நாட்டில் !


அதுவே உயர்கல்வியை புலம்பெயர் தேசத்தில் மேற்கொள்ளும் தருணங்களில் அந்தந்த நாட்டில் நிகழும் மாணவர்களுக்கிடையிலான போராட்டம் நிறவெறி, மதவெறி, போதைப்பொருட்கள் பழக்கத்தினால் நிகழும் வன்முறையின் போது உயர்கல்வி கற்கச்சென்றுவர்கள் பலரின்  உடல்கள் பெட்டியில் வந்த கதைகளும், உடலே கிடைக்காத கதைகளும் நாளேடுகளின் பக்கங்களில் வெளிச்சம் படும் போது !

குறிப்பிட்ட நாட்டின் தூதுவரை அழைத்து ஜனாதிபதி கண்டிப்பதும், பிரதமர்  ஆராய்க என்று அறிவுறுத்தல் சொல்வதுடனும், வெளியுறவுத்துறை அமைச்சர் விரைவில் நேரில் செல்வார் விசாரணையை துரியப்படுத்த என்ற ஊடக அறிக்கையுடனும் தேசத்தை அடங்கிவிடுவார்கள் ஆட்சியாளர்களும் ,அன்னிய தேசத்து கல்வித்துறை விளம்பர முகவர்களும் .

ஆனாலும் மாணவர்களின் எதிர்கால தேடலுக்கு உத்தரவாதம் எதையும் பல பல்கலைக்கழகங்கள் வழங்குவதில்லை என்பதும் மறைக்கமுடியாத உலகச்செய்திகள் என்றால் மிகையில்லை


வெளிநாட்டுக்கல்வி மேற்படிப்பின் போது பல்கலைக்கழங்களில் கிடைக்கும்  பல நல்ல நட்புக்கள்  காலநதியில் இல்லறத்தில் இணைந்த கதைகள் எல்லாம் இந்திய வரலாற்றில் காந்தி குடும்பத்தில் இன்னும் முடிவில்லா பந்தம் போல இலங்கையிலும் மேல் நாட்டு மருமகள் இருப்பது சாதாரணவிடயம் .இதை எல்லாம் சொல்ல அடிப்படை  அறிவு மட்டும் போதும் நிலாந்தன்  .

நான் யாரையும் குழப்பவாதியாக மாற்ற நினைக்கவில்லை

அரசியல் என்று வரும் போது இங்கே தனிமரமாக இருப்பவர்கள் மீது எதிர்க்கட்சிகள் சாணி பூசுவது அவர்கள் மீது மட்டுமல்ல அவர்களின் குடும்பத்தார்கள் மீதும் தான் .இது மறைந்த அனுரா பண்டார நாயக்கவுக்கும்  பொருத்தம், இன்றைய பாராளமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவுக்கும் பொருந்தும், அயல்தேச ராகுல் காந்திக்கும் பொருந்தும் ஒரு அலங்கார ஆடை .

அவர்களின் தனிப்பட்ட விடயங்களை எல்லாம் பொதுவெளியில் இழுத்து குளிர்காய்வது தானே இன்றைய ஊடக அழகு .அதனை நான் விரும்புவன் அல்ல !


இது போலத்தான் மேற்படிப்பு படிப்பதுடன் ,சாருமதியை எப்படியும் கைபிடிக்கும் ஆர்வத்தில் லித்துனியா போக ஆசைப்பட்ட உன் அண்ணா கமலேஷ்சின் ஆசைக்கு !நல்லாட்சியில் அமைச்சராக இருந்து கொண்டே இனவாத செயலைத்தூண்டி விடும் அமைச்சர் போல அல்ல நான்!

 உன் தந்தையையிடம் கமலேஸ் பயணத்தை தடுக்கும் படிகொம்பு சீவி விடவில்லை .

காரணம் இங்கே என்றும் இனச்சமத்துவக்கனவு கண்ணுக்கெட்டிய தூரம் வரை  இன்னும் கடக்க வேண்டிய நீண்ட தொடுவானம்

இன்று வியாபாரத்தில் பிரகாசிக்கும் நாம் நாளைய மீண்டும் முன்னைய  83 கலவரம் போலவோ ,மாவனல்ல தீவைப்பு சம்பவம் , அளுத்கம  தீவைப்பு போல எங்கேயும் எதுவும் நடக்க எப்போதும் சாத்தியம் இருக்கு!

 மதவெறி என்பது ஒரு அலங்கார கோஷம் அதன் வீரியம் ஆப்கானிஸ்த்தான் முதல் ஈராக் வரை இன்னும் தீராத உலக அரசியல் மச்சான்

இந்த உயர்கல்வி என்ற போர்வையில் கமலேஸ் வெளிநாடு செல்வது உயிருக்கு உத்தரவாதம்கிடைக்கும்  ஒரு செயல் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கு.

 நீ அப்பாவுக்கு துணையாக வியாபாரத்தில் சேர்து இருக்கலாம் தானேஇன்று நம்மில் பல குடும்பத்தில் ,பலர் பலதேசத்தில் தானே பிரிந்து வாழ்கின்றார்கள் ரஜனிமுருகன் படம் போல !

 எங்களின் பிரிவின் பின்னே நீண்ட அரசியல் வழுக்கள் இருக்கின்றது ,குடும்ப சிதைவுகள் பற்றி நாளைய சமூகத்துக்கும் சொல்லவேண்டிய பல கடமை இருக்கு !
 

என்ன இருந்தாலும் யாழவன் அண்ணா உங்களுடன் வாதாடி வெல்ல முடியாது? பல ஊர் பார்த்த உங்களின் வியாபாரத்திறமை போல பேச்சு வித்தையை சில ஊடகம் கேட்டு இருக்கும் இந்த மலைகளில் ஒரு மரக்கிளையில் வாழும் கிளிகள்

நீங்களும் வெளிநாடு போகும் எண்ணம் இருக்கா அண்ணா


"நாளைய அரசியல் 
நள்ளிரவில் கைதுசெய்தி போல 
நான் அறியேன் !நல்லதம்பி பெற்ற
நடுப்பிள்ளைக்கும் நடுகல் நடுவேனோ?
நானும் ஒரு காகித ஓடத்தில்
நாடோடிகள் போல 
நாட்டைவிட்டு தொலைவேனோ?
நம்கையில் ஏதுமில்லை நண்பா!"


இது எந்த வானொலி நிகழ்ச்சிக்கு அனுப்பும் கவிதை அண்ணா ?  

இனித்தான் சிந்திக்கனும்! இன்று பண்டாரவளைக்கு போறன். அங்கே ஊவாசமூக வானொலிப்பக்கமும் போகலாம் சிலநேரத்தில் .
அங்கே என் நட்புத்தோழியை மீண்டும் சந்திக்கலாம் உன்னைப்பார்த்த கண்கள் இன்னும் தூங்கவில்லை என்ற ரோஜாவனம் படப்பாடல் போல  மீண்டும் சந்தித்தால் சிந்து பாடலாம்  சினிமா பாடல்



  உங்களுக்கு நக்கல் அதிகம் என்றாலும்!இருந்தாலும் பனங்கொட்டைக்கு திமிர் அதிகம் தான் வாழ வந்த ஊரில்)) டேய் நீ பிரதேசவாதம் தூண்டும் ஒரு துரோகி !!




தொடரும்!

4 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

தனிப்பட்ட விடயங்களை எல்லாம் பொதுவெளியில் இழுத்து குளிர்காய்வது தானே இன்றைய ஊடக அழகு

உண்மை

Angel said...

நேசன் பதிவில் விசாரித்ததற்கு நன்றி .ஹொலிடேஸ் முடிஞ்சாச்சு கொஞ்சம் வேலை பிசி அதான் புது பதிவுகள் போடல்லை ..நீங்க வீட்ல அனைவரும் நலமா .பிரியன் ஸ்கூல் போக ஆரம்பிச்சிட்டாரா .

Angel said...

மாணவர்கள் அரசியல் என அனைத்திலும் தங்கள் ஆதங்கத்தை கூறியுள்ளீர்கள் ..உண்மைதான் தனிமனித தாக்குதல் சிலர் அறியாமல் செய்யும் தவறு :( எப்போ புரிந்துகொள்வார்களோ

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

நேசன்.. நீங்க ஏன் ஒரு அரசியல் வாதியாகக்கூடாது? என் வோட் உங்களுக்கே கிடைக்கும்.. எலக்‌ஷனில் நில்லுங்கோ:)