11 September 2017

காற்றில் வந்த கவிதைகள்-22

http://www.thanimaram.com/2017/08/21.html

-----------------------------------------


-------------------------------------
இதிகாசங்களில் எல்லாம்
இன்னும் இறந்து போகாத
இனிய தமிழ்வார்த்தை!
இவளை அன்றி வேற ஒருத்தியை
இதயத்தில், இல்லறத்தில்,
இப்பூமியில் !இடைவிடாத
இன்னிசை போல,
இடக்கர் அடக்கர் போல 
இதயவீணை போல மீட்டும் ஆசையில்
இருகரங்கள்  நீட்டுவது போல  ஆசையில்




இந்திரனின் அழகு போல
இரங்கி வாங்கிய  ஒருதலைக்காதல் 
இராவணனின்  தங்கை மூக்கறுப்பு போல 
கர்ணனின் கவசம் போல 
இனியும் வரும் 
இலங்கை ஆட்சியின் 
இறக்குமதி யாப்பு போல ,
இதோ  நாட்கூலிச் சம்பளம் அதிகரிக்கும்  இவ்வாரத்தில் என்ற
இறுக்கிக்கட்டிய 
இடையில் தொங்கும் 
இந்தியசாக்குப் படங்கில்
இன்னொரு முடிச்சும் !



இறைவனிடம் வேண்டி !!இணையத்தில் இருக்கும்
இங்கிலாந்து பதிவருக்கு,
இனியும் ஒரு 
இளங்கிளி இணைந்திட வேண்டும்
இராஜபக்‌ஷவின் புதல்வர் போல
இன்னும் தனிமரமாக 
இந்த ஹசின் மீதான ஒரு தலைக்காதல்
இறக்கி வைக்கும் கரகம் போல!
இந்தவார குங்குமம்  கொடுத்து 
இணைத்த நட்புக்கும் 
இடைவெளிகள் இன்னும் ஒரு தலைக்காதல் .
இதைத்தான் அன்றே !
இதன் மேலீட்டினால்  மடலேறுதல் என்றும்
இலக்கியம் சொல்லியதை 
இளைய தலைமுறைக்கும்
இருத்திச்சொல்லவேண்டும்!


 
இப்போது பிசி பிசி என்று ஓடும்
இன்றைய நவீனக்காதல்
இன்னும் இன்னும் ஒரு தலைக்காதலாக
இதயங்களில் என்றும் வாழும்
இனிய கனவு ஈழம் என்ற
இத்தேசக்காதல்!
இக்கலியுகத்தில் என்றடைவோம் 
இதுதான் ஒரு தலைக்காதலோ




(குறிப்பு- படங்கு- சனல் நூல்ச்சாக்கினை  நீளமாக விரித்தல். இன்றும் மலையகத்தில் கொழுந்து எடுக்கும் போது இடையில் அணியும் ஆடை .)



நன்றி உயிரோசை நிகழ்ச்சியில் ஒலித்த கவிதை. நன்றி சாந்தி.

4 comments :

K. ASOKAN said...

பாடலும் பதிவும் அருமையாக இருக்கிறது

M0HAM3D said...

அருமை நண்பரே

Thulasidharan V Thillaiakathu said...

நேசன்...கவிதை நல்லா இருக்கு ஆனால் காதல் கவிதையிலும் அரசியலா ஹாஹாஹாஹாஹா

படங்கு பொருள் அறிந்து கொண்டோம்...நன்றி நேசன்

KILLERGEE Devakottai said...

கவிதை அருமை இந்தப்பாடல் பலமுறை கேட்டு ரசித்து இருக்கிறேன் நண்பரே ஸூப்பர்