27 September 2017

காற்றில் வந்த கவிதை- 24

http://www.thanimaram.com/2017/09/23.html
-----------------------------------------------



தணிக்கை!தேசத்தில் தவன்றவன்

தனியுரிமை என்னும் உயிர் 
தாலாட்ட தட்டிவிட்டு
தன்நேசிப்பு சுயநலத்தில்
தாண்டிக்குளம் கடந்தவன்!
தம்பலகாமத்தில் தயிர்விற்றவன்!
தட்டிவானில் தண்ணிதெளித்து
 தடுப்புச் சுவர் தாண்டாதவன்
தண்டனையின் போதும்
தன் சொந்தங்கள் தேடி
தடுப்புச்சுவர் தாண்டாவதன்!
தனியே உன்னைத்தேடி 
தாய்லாந்து ஊடாக
தனித்து வந்தவன்.
தலபடம் உன்னைத்தேடி போல
தன்  காதலை நீதானா நீனாதான என
தாளம்மீட்டியபோது  
தடம் மாற்றிய ரயில் போல
தட்டிச்சென்றாயே ?
தறுதலை என்று 
தந்தை சொன்னாரோ ?
தகுதி ஏது  ?
தனிக்கணக்கில் சொத்து  என்ன இருக்கு ?
தாரம்  என்று என்னை நாடிவர? என்று 
தாழ்த்திப்பேசிய பொழுதும் என்னிடம்!
தன்நிலை தவறாத 
தன்நம்பிக்கை கொண்டவன்!
தடி போல பலருக்கும் கைகொடுக்கின்றேன்
தள்ளாடும் காலத்திலும்,
தத்துவம்சி வாழும் மலைக்கு 
தனிவரம் யாசித்துக்கேட்டு 
தன்னையே உருக்கி!  
உன்னைப் பெற்ற தந்தையும்  
உருகி  தளர்ந்து வரும் பொழுதுகளில் எல்லாம்!
உன்னைபோல ஒருவன் 
உதறிய தவற்றை  /





உணர்ந்த /தெளிந்த தயக்கம் இன்றி 
உண்மை யாசிப்பில் கைகொடுக்கின்றேன்! நீ 
தட்டிவிட்ட, உன்னைத்தேடி ஒரு
தாலிவரம் விரைவில் வரட்டும்
தவிக்கும் ஏதிலி!



தகப்பன் சாமியான கதை
தட்டிவிடும் ஆசையில்!
தனித்தொடராக இணையத்தில்!
தனி ஒருவன்  போல உன்னைத்தேடி
தனிச்சுவையில் 
தவிடு மாட்டுக்கும் ,
தக்காளி வியாபாரத்திலும் 
தனி ஆவர்த்தனம் செய்யும் ஒரு 
தனவந்தன் ஒருவன்
 தனித்தீவில் உன்னைத்தேடி
 தற்பெருமைபேசியது கேட்டு
தானம் கொடுக்கின்றேன்  
தண்ணீரில் ஒரு சிந்தனையை








(யாவும் கற்பனை)
  தத்துவம்சி- சபரிமலை ஐய்யப்பனுக்கு இன்னொரு பெயர்!
தாண்டிக்குளம்- வவுனியாவில் இருக்கும் ஒரு ஊர்  இராணுவத்தின் கட்டுப்பாட்டு பிரதேசமாக யுத்தகாலத்தில் பிரபல்யமான எல்லை!

தம்பலகாமம்-திருகோணமலை போகும் வழியில் இராணுவ சோதனைச்சாவடி மன்னம்பிட்டி கடந்தால் வரும் ஒரு ஊர்!

தகப்பன்சாமி- சபரிமலை ஐய்யப்பனுக்கு புனிதமாலை அணிந்தவர்கள்  தந்தையை விழிக்கும் சொல்!
பிரசாந்த் நடித்த சினிமா படமும் ஒன்று இருக்குன்றது தகப்பன்சாமி என்று! ராஜ்கிரன் பிரதான வேடத்தில் தோன்றிய ஒரு படம்!

தவிடு-நெல்லில் இருந்து கிடைக்கும் ஒரு வெளியீடு ! மாட்டுக்கு கொடுத்தால் அதிகம் பால்தரும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை முன்னொரு காலத்தில்!



5 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை நண்பரே

Thulasidharan V Thillaiakathu said...

நன்றாக இருக்கிறது வரிகள் நேசன்!!

விளக்கக் குறிப்புகளும் அறிந்தோம் குறிப்பாக ஊரின் பெயர்...

பாடல் அருமை எத்தனைமுறை கேட்டாலும் அலுக்காத பாடல்!!!

KILLERGEE Devakottai said...

ஸூப்பர் நண்பரே...

வலிப்போக்கன் said...

அருமை

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

ஆஹா அத்தனையும் அருமையாக இருக்கு நேசன், அதிலும் முதலாவது சூப்பர்.. முதல் வரியிலேயே எழுத்துப்பிழை இருக்கு திருத்துங்கோ.. அது “தணிக்கை”.. என வரும்..

அடுத்து “தடுப்புச் சுவர் தாண்டாதவன்”.. இதையும் திருத்துங்கோ..