காலநதி என்ற ஓட்டத்தில்
கடல்கடந்து தனிமரம் வலையில்
காக்கா போல வாத்து என்று
கலாய்த்தாலும் !
கனிவுடன் வந்த என் தங்கையே!
கிராமத்துக்கருவாச்சி என்ற
காலையில் வரும் காப்பி போல
காலை வணக்கம் அண்ணா என்று
கனிவுடன் தனிமெயிலிலும்,
கடின வேலைப்பளுவிலும்
கலாய்க்கும் முகநூலிலும் ,
,கல்லாதமரமே !சினேஹாவிடம்
காதல்க்கவிதை எழுதிக்கொடுத்தாயா?
கல் போல இலக்கனவழு
கடந்து போன பாதையில்!
கவிதையில் வட்டக்கல் இன்னும்
காணாமல் போன உப்புமடச்சந்தியில் எழுதிய
கவிதை போல அண்ணா ,தங்கை என்ற
காக்கா என்று அடிக்கடி குதறும்
கடந்த நினைவுகள் போல இன்னும்
கவிதை எழுதுவோம் பூப்பூவாய்
கந்தக பூமியின் இனவெறி போல!
கலை என்றவள் காணாமல் போனாலும்!
கடம்பமரம் போல அன்பில்
கடல்கடந்த அண்ணா எப்போதும்
காத்து இருக்கின்றேன்! அன்புத்தங்கையே!
கடந்துவா பொதுவெளியில்!
கால்க்கட்டுக்கள் எல்லாம்
கன்னத்தில் பூசும் சந்தனம் போல
கதிரையில் இருந்து ஆட்சி செய்யும்
கலைமகள் போல நீ ஒரு
கவிதை கண்டு விரைந்துவா
கனத்த இதயத்துடன்
கவிதை தீட்டும் வெட்டியான்
கடல்கடந்த அண்ணா
களிப்புடன் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
என் வாசல் திறந்து இருக்கு
கட்டுப்பாடு இல்லாத பொதுத்தளத்தில்
கட்டுடைத்து அன்பில் வருவாய் என்ற
பாரிஸ்
சினேஹா மன்றம்;
படிக்காத அண்ணா
பட்டமரம்!
தனிப்பட்ட எண் எப்போதும் மாறாத பாச இணைப்பில்!
3 comments :
எனது பிறந்தநாள் வாழ்த்துக்களையும் இணைத்துக் கொள்ளுங்கள் நண்பரே
எயது வாழ்த்துகளும்... கருவாச்சிக்கு.
எங்கள் பிறந்தநாள் வாழ்த்துப் பூக்களும் பூங்கொத்தில்!!
Post a Comment