http://www.thanimaram.com/2018/04/36.html
-----------------------------------------------------------------------!
புதுக்கதை எழுத வந்தேன்
-----------------------------------------------------------------------!
புதுக்கதை எழுத வந்தேன்
புத்தியில்லாதவன் என்று
புலம்பெயர்தேசத்தில்
புறக்கணித்தவளே!
புதுமை என்று
புணர்ந்தவை எல்லாம்
புரியாத புதிர் போலத்தான்,
புன்னகை தேசப்பட நாயகியே!
புத்துப்பாடகன் போல
புக்கவிதை எழுதவும்
புத்தன் தேச
புலமை அரசியலும்
புதுமைப்பட்டம் பெற்றவன்.
புதைந்து போகமாட்டேன்
புறப்பட்டு வருகின்ற ரயிலில்
புதுக்காதலனைக் காண இன்னும்
புதினம் அறியும் ஆவலுடன்
புறக்கோட்டைவாசி இவன்!
(யாவும் கற்பனை)
////
மனங்கள் புரிந்துகொள்ளும் என்று
மகனே நானும் ,மடுமாதாவிடமும்,
மலையரசனிடமும்
மனதார கேட்டேன்!
மலையிறங்கி வருவானோ?
மலைகளில் தொலைந்தவன்!
மறுபடியும்
மகிழ்ச்சியுடன் வந்திடுவானோ?
மதிக்கும் தேசத்திற்கு?
மருகின்றேன் மகனே என்ற
மாமானாரும்!
(யாவும் கற்பனை)/////
-----------------------------
நேசம் என்னும்
நேற்றைய மாற்றத்தின்
நேரடிகாரணி நீதானே!
நேரில் தந்தேன்
நேசிக்கின்றேன் என்ற
நேயர்விருப்ப இசைப்பேழையை,
நேற்றைய காற்றில் பறக்கவிட்டாய்,
நேரடியாகச் சொல்?
நேசத்தின் விளக்கம் ஏது?
நேசனின் கவிதையிலும்
நேரச்சிக்கல்.
நேற்றும் இணையம்
நேசநாட்டுப்போரினால்
நேரடிப்பாதிப்பு என்றதை
நேரியகுளம் வீதியில் பார்த்தவளே!
நேசமணிபொண்ணையா வீட்டில்
நேவியுடன் இருந்த
நேரடிச்சாட்சிகள் இன்றும்
நேசநாட்டில் வாழ்வதாக
நேற்றும் யாரோ சொன்னார்கள்
நேரம்கிடைத்தால் வந்துவிடு
நேரலையில் என்றும்
நேசத்துடன் !
நேற்றும் இன்றும் நாளை காட்சி
நேரத்துடன் தொடங்கிவிடும்
நேரடி விவாதம்! இது
நேயர்களின் தேடலில்
நேற்றுத்தொலைத்த நேசிப்பு!
நீங்காத நினைவுகள்.
நியூ இயர் என்று
நீ தந்த நீலக்கலர் டெனிம் டவுசர்
நிரஞ்சனாஸ் கடையில்,
நீலக்கட்சிக்காரனுக்கு
நிம்மதிதானே என்று
நீட்டி முழங்கிய உன்
நீலேற்ப மலர் போன்ற
நின் வதனம் தேடியே!
நீண்ட யாத்திரை
நிகழ்காலத்தில்,
நினைத்து நினைத்து,
நீலக்குயிலும் நிறுத்தியதடி அன்பினை
நீலக்கட்சியில் சேர்ந்த
நீயும் ஒரு அரசியல்துரோகி என்ற
நீண்ட கடிதம் இன்னும் நினைவில்!
(யாவும் கற்பனை)
(--/
4 comments :
இரசிக்க வைத்தன நண்பரே
அருமையான கவிதைகள்
தொடருங்கள்
https://plus.google.com/u/0/communities/110989462720435185590
அருமை
ரசித்தேன் நண்பரே
தொடருங்கள் நண்பரே
Post a Comment