05 October 2018

தலைமுறை மாற்றம் தன்நம்பிக்கை ஊற்று!

ஈழத்தில் இருந்தும், இலங்கையில் இருந்தும் பல குறும்படங்கள் வெளியாகிக்கொண்டு இருக்கும் நம்பிக்கைக் காலம் இது .என்றாலும் இனவாத/மதவாத/பிரதேசவாத போட்டிகளுக்கும்,பொறாமைகளுக்கும் இடையே ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பவை குறிப்பிட்ட சில படைப்புக்கள் என்பது ஒன்றும் புதியவிடியம் இல்லை எம்மவர்களிடம்

ஒரு சிலதூரநோக்கு  சிந்தனைகள் அத்தி பூத்தாற்போல ஒருவருக்கு மட்டுமே வயப்படும் . அந்த கருவினை சொழிமையுடன், திரைப்படுத்துவது என்பது மிகவும் கடினமான பணி !அதுவும்  பெண் என்பவளின் திரைப்பயணம் ஈழத்து சினிமாவில் நிறைய தடைகளைத்தாண்டி வெளிவருவது என்பது தலைமுறைமாற்றம்

குறும்படத்துறையில் சாதனைகள் என்பது ஆத்மபூர்வமான நட்புகளின் அன்புக்கரத்தினால் மட்டுமே! வெட்டி ஒட்டும் பூச்செடி போல துளிர்க்கமுடியும் !அதுவும் தலைமுறை மாற்றம் என்பது வடகிழக்கில் மட்டும்மல்ல சகோதரமொழி சிங்கள இனத்திலும் துளிர்க்க வேண்டும்  விரைவில்.மொழிகள் கடந்து ஈழத்திலும், இலங்கையிலும்  இவற்றை பார்த்து வளர்ந்தவர்களில் தனிமரமும் ஒருவன்.))). 

ஈழத்தின் வடக்கு பேச்சு வழக்கு என்பது தனித்துவம்மிக்கது! அதை தென்னாலி பட இந்திய சினிமாவின் சாயலில் திரைக்கதையை  நீர்பாச்சாது சாதாரண வடக்குமக்களின் யதார்த்த உலகை நிஜமுகத்துடன் பதிவு செய்வது வரவேற்கப்படவேண்டியவிடயம்.


 சொல்ல வருவதை காட்சிகளின் பேச்சு மொழிகளில் ஊடாக தலைமுறை மாற்றம் நிதர்சனத்தினை தீப்பிழம்பு போல கொதிக்கின்றது  . 

இயக்குனர் புதிய தலைமுறையாளர் என்பதால் உசுப்பேத்தும் ஆர்வம் இல்லை என்றாலும் நம்பிக்கைதானே வாழ்க்கை !ஒவ்வொரு புக்களுமே சொல்கிறதே சினேகா பாட்டு போல தேர்ந்து எடுத்த நட்சத்திரங்கள் இன்னும் தலைமுறையை அழகுபடுத்தியிருக்கின்றார்கள்.

கதையின் கருவை சிதைக்காது , ஆர்ப்பாட்டம் இல்லாத இசை  அழகே அழகுஇயற்க்கை காட்சி ஒளிப்பதிவு மீண்டும் வேலிகள் தாண்டாத ஈழத்தின் குறும்பு ஆனந்தம்  போல இடையிடையே இயக்குனரின் நம்மூர் வானொலிகளின் இன்றைய முகத்திரையையும் சற்றே விளாசியிருப்பதையும் பாராட்ட வேண்டும்  ஐஸ் சூப்பும் வானொலி நேயர் தனிமரம்!)))





என்ன ?தனிமரம் தலைமுறை மாற்றம் என்று புகழ்கின்றதே என்று நீங்கள் சிந்திப்பது புரிகின்றது.!

ஓம் இன்று இணையத்தில் வெளியாகி இருக்கும் தலைமுறை மாற்றம் குறும்படத்தினை காணும் வரம் பெற்றேன். அந்த மகிழ்ச்சியை வலையில் உங்களுடன் கொண்டாடுகின்றேன்

வாருங்கள் சேர்ந்தே காட்சியை காணுவோம்!அதுக்கு முன் வானொலி விளம்பரம் போல)))

படக்குழுவினர்களுக்கு அன்பான ,நேசமான, தங்கப்பதக்க வாழ்த்துக்கள் அள்ளி இறைக்க ஆசை .என்றாலும்! ஏதிலியின் அன்பு வாழ்த்துக்களே தகரக்கேட்டுக்களை தாக்கி ஈழத்து சினிமா வரலாற்றில் இன்னும் இயக்குனர் சாதனை புரிய ஆசிகளும் ,பாராட்டுக்களும்!)))))




படத்தினை பார்வைக்கு தொடுத்த முன்னால் நண்பர்கள் வலைப்பதிவரும்(கிஸ் ராஜ்) /வளர்ந்து வரும் ஈழத்து குறும்பட பன்முகநட்சத்திரம் அன்புத்தம்பி ராஜ் அவர்களுக்கும் நன்றிகள்!

------------------------------------

படத்தினை காண இங்கே அழுத்தவும்!





4 comments :

KILLERGEE Devakottai said...

இணையம் பிரச்சனை குறும்படம் பிறகு காண்பேன்.

கரந்தை ஜெயக்குமார் said...

இதோ காணொலியினைக் காணச் செல்கிறேன் நண்பரே

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

அந்த மாட்டு வண்டில் படம் எப்படி எடுத்தீங்க நேசன்? நான் முன்பு நெட்டில் தேடினேன் இப்படிக் கிடைக்கவில்லை.

ஓ ராஜ் இன் படமோ.. நேரமுள்ளபோது பார்த்து மகிழ்கிறேன்.. அறிமுகப்படுத்தி விட்டமைக்கு நன்றி.

இந்த ஊர் வெளிநாட்டு மாப்பிள்ளைகளுக்கு மட்டும்.. நல்லாயிருக்கு ஹா ஹா ஹா..

putthan said...

அருமையான குறும்படம் இணைப்பிற்க்கு நன்றிகள்