வணக்கம் உறவுகளே. மீண்டும் ஒரு சிறிய இடைவெளியின் பின் தனிமரம் உங்களை நாடி சிறகுவிரிக்கின்றேன் .)))
பொருளாதார தேடல், ஆன்மீகத்தேடல் என்று சிலமாதங்கள் தனிமரம் வலைக்கு ஓய்வு கொடுத்தாலும் மீண்டும் எனக்குள் தோன்றும் எழுத்து ஆர்வத்துக்கு மடைதிறந்த வெள்ளம் போல தனிமரம் என்ற வலையில் நீர் பாய்ச்சும் ஆசையில் .ஏதிலியும் இணையத்தில் கிறுக்கப்போகின்றேன்.!
எப்போதும் போல உங்களின் அன்பும் ,ஆசீர்வாதமும் தொடரும் என்ற நம்பிக்கையில் தனிமரம்.
—-
கவிதை—1
—-
கலைந்தும் கலையாத
காலைத்தூக்கத்திலும்
கடகடவென ஓடும்
கண்டி ரயில் போல
காதலியே உன் நினைவுகளும்
கண்ணைச்செம்புகின்றது!
—-
என்னையும் வெறுமையாக்கி
என்றும் இலங்கையின்
எதிர்கட்சி போல
எல்லாமும் தூற்றுதல்
எடுத்த சபதம் போல!
எப்போதும் சுடலையில்
எரிக்கின்றாய் உன்னையே
என்றும் நேசிக்கின்றேன் என்ற
ஏதோ வார்த்தையில்!
ஏதிலியும் புலம்புகின்றேன்!
(யாவும் கற்பனை)
———
இன்றைய திருமணத்திற்கு நிச்சயம் அந்த முகம் வரும் இந்தமுகமும் வரும் என்ற எதிர்பார்ப்பில் நீ வருவாய் படத்தில் தேவயானி போல அதனால் ....
விரைவில்
இனியும்
14 comments :
ஆ...சினேஹா கவிதை சூப்பர் 😁
வருக நண்பரே வருக
வாங்கய்யா வாங்க... எங்கே சுத்தினாலும் இங்கே தான் வரணும்...!
தொடருங்க...!
வாங்க நேசன் :) மீண்டும் சினேகாவின் கவிதையோடு உங்களை பார்ப்பதில் மகிழ்ச்சி :)
அந்த பச்சை பூவை அதான் முதல் கமெண்ட் போட்டவரை எங்கியோ பார்த்த நினைவு :))
// ஜெய்லானி said...
ஆ...சினேஹா கவிதை சூப்பர் 😁//
வாவ்வ்வ்வ்வ்வ் இவர் எங்கோ காணாமலே போய் விட்டார் எண்டெல்லோ நினைச்சிருந்தோம்ம்.. வாங்கோ ஜெய் நலம்தானே...
வாங்கோ நேசன்.. நீங்க புளொக்கை மறந்தாலும் ஸ்நேகாவை மறக்கமாட்டீங்களே:)..
எனக்கு வலையும், சினேஹாவும் இரு கண்கள் போல ஆதிரா!)))
அவர் இந்த உலகில் தான் வலம் வருகின்றார்!)))
நன்றி அஞ்சலின்.
நன்றி டிடி.
நன்றி குருவே )))வருகைக்கு ,பாராட்டுக்கும்.
நன்றி கரந்தை ஐயா!
Post a Comment