26 March 2019

எதிர்பார்ப்பு!

சிலோனில் இருந்து பலகுரலில்
சிங்கை வீதிகளில் சிரித்து
சின்னவயது கங்காரு தேசத்தில்
சிந்திய நினைவழியாநாட்களில்
சிற்றின்பம் கண்டு !

சிரான்கூர் சாலைகளில்
சீக்கிரம் சாப்பிடும் இலண்டன்
சில வியாபாரம் செய்திகளுடன்,
சிந்தனை டென்மார்க்கில்!
சின்னத்தளபதி தெறியுடன்.
சிலகாலம் சிக்கனம் என்று
சிலபெயர் மாறி 
சிலோனிற்கு பிடிக்காத
சிற்றரசு பெரியாண்ணாவுடன்
சிரித்துக்கொண்டே முகநூலில்
சிறு விண்ணப்பம் நீண்டது அபினயம்!))
சின்னமச்சாள் வாழ்க்கைப்பட்ட
சிறந்தநாடு என்ற கனடிய மண்ணிலும்
சிரிக்கும் சில குயில்கள்
சின்னக்கைபேசியில்
சினிமா பாடலுடன்,
சிந்தனை என்னும் வானொலியோடு
சிலகவிதைகளும்,
சிந்திய கண்ணீர்த்துளிகளும்,
சிலருக்கு இன்னும் ,
சீர்கெட்ட ஈழத்து 
சிலுசிலு கதிரை போலத்தான்!
சீக்கிரமே கட்சி மாறும்
சிறந்த ஐநா விருந்து 
சீக்கீரம் கிட்டடும்!)))


சிந்திக்கின்றேன் காற்றலையில்
சில கவிதை தீட்ட!))

(யாவும் கற்பனை)



1 comment :

நான் said...

பாராட்டுக்குரிய படைப்பு.

வாழ்த்துகள்.