10 May 2020

கவிதையும் காணமும்.

இருதயம் இன்னும் கேட்டது
இரட்டை  இலைபோல
இலங்கை  எதிர்க்கட்சிபதவிபோல
இப்போதைய
இளசுகளின் பேட்டை போல
இன்னும்  விசுவாசம் போல
இருக்கும்  சினேஹா
இறுதியில்  வந்த  கேரளா புயல்போல
இருந்த  மண்ணையும் 
இகழ்ந்துபோனது !
இப்போதும்  நிஜம்என்று
இன்னுமா  நம்பவில்லை!
இதோ  இலங்கைச்சாமிகளும்
இலண்டன்  சாமிகளும்
இன்னும்  கனடாசாமிகளும்
இவ்வழி  வராதகதை  எல்லாம்
இப்பாதம்  நடந்தகதை
இனியும்தொடரும்!
இவன்  இன்னும்
இலங்கைத்  தேயிலைத்தொழிலாளியின்
இன்றைய  வருமானம்1000
இன்னும்  கிட்டாத  நிலா
இதயநிலா  இசைக்குழுவில் 
இருக்கின்றேன்! 
இதயம்தொலைத்து
இலங்கைச்சிறையில்!


(யாவும்கற்பனை)
----------//

-------------------------------------------------------------------------------------------------------------------------
அன்று   ஒரு  காலம்
ஆயிரம் தனிக்கை!
ஆயிரம்ரூபாய்  என்பது
அடுத்த  வீட்டில்கூட
அன்புடன்  கேட்டால்
ஆமிக்கு  கப்பம்  என்ற
அன்றாடபிழைப்பு!
ஆனாலும்,அன்பும்
ஆழ்ந்த நேசிப்பும்,
ஆயிரம்  வெற்றிலைசிரிக்கும்
அப்ப  வெற்றிவிழா!
அது ஒருகாலம்!
ஆயிரம்  ஈரோவில்
அவள்  தந்தைகேட்டான்?
அப்பனே  உனக்கு
அடிமாடுபோல  உழைக்க
ஆம்பாளைத்தகுதி?
அந்த  மாத்தயாவுக்கு
அக்கனம் இருக்கோ?
அய்யோடா  எவன் 
அப்போது  ஜீனஸ்பட 
அப்பத்தா கேட்டசுருட்டு
அப்போதெல்லாம்
அக்குறணை  தயாரிப்புஆச்சே!))
அடேய்  ரஜனிமகளுக்கும்
அடுத்த  தாரம்  கலியாணம்
ஆசியுடன் நடந்ததாமே
அப்ப அந்த அடுத்த
ஆவல்த் தொடர்யாரைநோக்கி
அய்யோ  தனிமரத்தில்
ஆயிரம்  பாடல்  முகவரிக்கு
அன்பான  நட்பு  நீயாச்சே!))
ஆதலால்  இன்னும் 
அழைப்பில்  வருவாய்  என்ற
ஆழ்ந்த  மகிழ்ச்சியில்
அன்பானவேடதாரி!))

(யாவும்கற்பனை)

4 comments :

KILLERGEE Devakottai said...

இரசித்தேன் நண்பரே அருமை.

putthan said...

"இலங்கைத் தேயிலைத்தொழிலாளியின்
இன்றைய வருமானம்1000"

இன்னும் தொடருமா
இந்த ஏக்கம்

தனிமரம் said...

இரசித்தேன் நண்பரே அருமை./நன்றி கில்லர்ஜீ வருகைக்கும், கருத்துரைக்கும்.

தனிமரம் said...

இலங்கைத் தேயிலைத்தொழிலாளியின்
இன்றைய வருமானம்1000"

இன்னும் தொடருமா
இந்த ஏக்கம்/முடிவில்லாத சோகம் தான்!/நன்றி புத்தன் வருகைக்கும் கருத்துரைக்கும்.