வாங்க எப்படி இருக்கின்றீங்க
வாசலில் வரவேற்று
வாரியணைத்தார்!
வாசல்ப்படி மிதிக்காதே என்றவர்!
வா ஒரு வைன்குடிக்கலாம்!
வழமைக்கு மாறாக!
வாழ்ந்துகெட்டவர்,
வார்த்தையின்றி
வாடு வதைக்கண்டேன்!
வரலாற்றில் வாழ்ந்த தலைமுறை!
வாகனம் ஓட்டனும்
வண்ண நிறவைன் வேண்டாம்!
வழகத்திற்கு மாறாக
வரட்டாம் அம்மா!
வளர்ந்திட்டான் உன்
வாரிசு, அப்படியே
வாழையடி வாழைபோல
வார்த்தைகள் குளறுது!
வாரயிறுதி எப்படி?
வாராளாம் இவ்வார
வசந்த காலத்தில் யாரு?
வாழத்தெரியாதவள்!
வாசலில் ஒருவெண்ணிலா போல,
வல்லரசு காணாத கொர்னாவில்
வாசலில் கோலம் போட்டவள்!
வசியக்காரி என்றாயே!))
வார்த்தையற்று போனாயோ?
வலையில் வருடும்
வார்த்தைகளில் நீயிறைத்த
வசைவுகள் எல்லாம்
வாசித்தேன் ஓய்வில்!
வாழ வேண்டியவர்கள்,
வாஸ்துசாஸ்திரத்தில்,
வாரிக்குட்டியூர் போல
வாழ் விழந்த காணங்கள் எல்லாம்
வானொலியில் ஒலிக்காத பாடல்கள் போல
வாழ்த்துவது போல தூற்றிய
வாஞ்சிநாதன்அரசியல்!
வசதி வந்தபின் வந்த,
வடக்கு கூத்தணி சசிகலா போல
வடமராட்சியின்உதயம் போல
வாரியணைப்பது போல
வண்ணம் கொண்ட வைன்,
வாடும் பூப்போல
வாட்டிய பன்றியிலும்
வாசணை கருகியதுபோல
வாய்ச்சாடல் போல
வாக்காளர்பட்டியல் போல
வருவாய்கேட்டவள்!
வாடியமுகம் காண
வழிகாட்டும் குருப்போலவும்
வாஞ்சையும் ஒருபுறம்
வாலோடு வந்தது கோபம்!
வாங்க போகலாம்!ம்ம்
வாரயிறுதி முடிகின்றது,
வறுத்தெடுத்தவளுக்கு!
வாய்விட்டும் சொல்லாதகாதல்
வாராயோ தோழி பாடல் போல!
வடகம்போல
வாடியவள் முகம் பார்த்தால்!
வாழ்கின்றாய்போல?
வா ஒருகாப்பி குடிக்கலாம் என்பாளோ?
வாசனையில் நீயும் ஒரு
வாய்க்கால் போல,
வானவேடிக்கை பட்டாசுபடம் போல
வாழ்த்து மழை வரமுன்!
வந்துவிட்டேன்!
வாடிக்கிடந்தது!
வாசிக்காத நாவல்மரம் போல
வாழ்க்கைப்பட்ட வைன் போத்தல்
வடிவாகச் சிரித்தது!
( யாவும்கற்பனை))))
4 comments :
வணக்கம்
அண்ணா
கால முகந்து பதிவை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி
வணக்கம்
அண்ணா
கால முகந்து பதிவை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி/வாங்க ரூபன் நலமா? முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்.
//வாங்க எப்படி இருக்கின்றீங்க
வாசலில் வரவேற்று
வாரியணைத்தார்!
வாசல்ப்படி மிதிக்காதே என்றவர்!//
ஹா ஹா ஹா ஆரம்பம் அட்டகாசம்.. ரசித்த வரிகள்.
பாட்டு சூப்பர்....
ஹா ஹா ஹா ஆரம்பம் அட்டகாசம்.. ரசித்த வரிகள்.
பாட்டு சூப்பர்..../நன்றி வருகைக்கும், ரசிப்புக்கும் அதிரா!
Post a Comment