20 August 2012

உருகும் பிரெஞ்சுக்காரி -06

வழிநடத்துதல் .ஒரு பொறுப்பான செயல் எல்லாராலும் இது முடியாத காரியம் .

அரசியலில் தாய்மொழிக்கொள்கை கொண்டுவந்த பண்டாராநாயக்க தமிழ்மொழி அரச பாவனையை சீரழித்தது போல இருக்கக்கக்கூடாது வழிநடத்தல்.


கைகாட்டுவதைவிட கைத்தடியாக இருப்பது ஆன்மீக வழிநடத்தலில் பொறுப்பான காரியம்.

அப்படித்தான் அன்று அதிகாலையில் தாய்லாந்தில் விடியப்போகின்றது என்ற நினைப்பில் நாட்டை விட்டு வெளியேறிவர்கள்.ஜீவனும், ரவியும் .

ஐரோப்பா போகின்றோம் என்று தெரியும் எங்கே ?எப்படி ?என்று எதுவும் தெரியாமல்தான் வழிநடத்தி வந்த பிரயான முகவர் நகுலன் சகிதம் .தாய்லாந்தில் உள்நுழைந்தனர்.

.தாய்லாந்து தேசம் ஒரு அழகியபூமி. அன்பு மக்களின் உபசரிப்பு, கும்பிட்டு வரவேற்கும் உல்லாசபுரி

ஈழத்தின் வரலாற்றில் இந்த தேசம் பின்னால் சில தடங்களைப் பதிவு செய்து இருக்கின்றது ஏடுகளில்.ஆனால் சில பல இதயங்களில் மறக்கமுடியாத தேசம்.

.பிரயானிகள் வாசல் ஊடாக ரவியும் ,ஜீவனும் வெளியேறிய போது !நகுலன் இன்னும் பலரையும் அழைத்து வந்தார்.

பிரயான முகவர்கள் பலர் பல வழிகளில் பலரை ஒன்று சேர்த்து ஒருவரிடம் கையளித்து.குறிப்பிட்ட நபர்களை ஐரோப்பாவில் சேர்க்கச் சொல்லும் வழிமுறைக்கு ஒருவர் வழிகாட்டியாக வருவார்.

அவரை ஓட்டி என்று ஒரு வார்த்தையை குறியீட்டாக பயன்படுத்துவார்கள் .மலேசியத்தமிழில் .

இது ஒரு சிறப்பான வார்த்தை .

இன்னும் ஒரு இடத்தில் இதைச் சொல்லுவான் ஜீவன் என்பதை இப்போதைக்கு சொல்லிவைக்கின்றேன் ஆண்டாள் கூற்றைப்போல.

எல்லாருக்கும் இந்தப்பயணம் மனவலிகள் தரும் என்று அன்று தோன்றவில்லை 18 பேர் வெளியில் வந்த போது.
 நகுலன் எங்களை அழைத்து வந்தது நட்சத்திரவிடுதிக்கு. "இந்தா பாருங்கோ என் வேலை உங்களை இங்கு கொண்டுவந்து சேர்ப்பது மட்டும்தான் . இனி இன்னொரு நண்பர் தான் பொறுப்பு . உங்கள் பயணம் வெற்றியாக இருக்க என் வாழ்த்துக்கள் . யார் யார் அதிகமான டொலர் கொண்டந்தவர்கள் காசு எல்லாம் தாங்கோ நான் இங்க இருக்கும் நண்பருக்கு கொடுக்க வேண்டும் .. மிச்சம் போனபின் அங்கே கொடுங்கோ. எப்போதும் அவசரமும் பதட்டமும் இந்த பயணங்களில் இருக்கக்கூடாது. புதியவர்கள் சகபயனாளியோடு மனம்விட்டுப் பேசவேண்டும். ஊரில் எந்த இடம். கடைசியில் இருந்த இடம். போகும் நிலை எல்லாம். மெளனமாக இருந்தால் வெளிநாடு போய்விடலாம் என்ற எண்ணம் சில உயிர்கள் அனாதைப் பிணங்களாகப் போக காரணம் ஆகிவிடும் . அதைக் களைவது நட்பு ரீதியான சந்திப்புத்தான். சந்திக்கும் போது ஒளிவு மறைவு இல்லாமல் பேசவேண்டும்.வெளிநாட்டுக்கு பயணமுகவர் மூலம் வரும் போது . விற்பனை.வியாபாரத் தொழில் என்பதால் ஜீவனும் ரவியும் பேசுவது அரட்டை அரங்கம் போல... அன்று நகுலன் கூட வந்தவர்களில் யாழ்குடா நாட்டின் பல பாகத்தில் இருந்தும் வந்தவர்கள் .அதிகம் . இரண்டு திருகோணமலை நண்பர்கள் .சிலர் முன்னர் பலதடவை தாய்லாந்து வந்து பிரயாணம் கைகூடாத நிலையில் திரும்பியிருந்தவர்களும் அடக்கம். வேடிக்கை உலகில் விநோதங்கள் அதிகம் அதில் .! யுத்தம் என்ற அரக்கன் தமிழ்மீது போர் முரசு கொட்ட அந்த முரசுகொட்டும் முகமாக இருக்கும் இராணுவம் கொலைவெறியோடு அலையும் . ஆனால் இராணுவத்தில் சேர்ந்த பின் போர்களத்தின் நிஜங்கள் புரிந்துகொண்டால் புறமுகிட்டு ஓடுவது கோழை என்று புறநானூறு சொல்லும். என்றாலும் ஓடிவாரது உயிர் தப்ப. அப்படி எங்களோடு பயணித்த ஒரு இராணுவச் சிப்பாய் தான் நாமல்! நாமல் தமிழ் பேசுவான் சிறப்பாக தமிழ் பெயரில்தான் நாட்டைவிட்டு வந்தான் எங்களுடன்!

14 comments :

கவி அழகன் said...

Velinaadu pokum murai patri akku veru aanni vera solliyirukkinka.
Kadasila naamal ethirpaapai thuundukiraar

முற்றும் அறிந்த அதிரா said...

ஒரு மோர் கூலாத்தாங்கோ நேசன்:)... சின்ன வெங்காயமும் வெட்டிப் போட்டு:).

அழகாக நகருது தொடர்... அடுத்த ஈ புக் ரெடியாகிறது.......

ஹேமா said...

வாசிக்கிறேன் நேசன்....எங்கள் வாழ்வியைல்,இந்த அகதி வேஷமெல்லாம் அடுக்கடுக்காய் வரப்போகுது.ஆரையும் மிச்சம் விடாதேங்கோ நேசன்...!

ஹேமா said...

யாரோ யார் யாரோ....பாட்டும் ஆழ யோசிக்க வைக்கிறது !

Seeni said...

thodarkiren!

kavalaikalodu...

திண்டுக்கல் தனபாலன் said...

நன்றி... தொடருங்கள்... (3)

நெற்கொழுதாசன் said...

நாங்களும் இப்படித்தான் ஒரு வருடம் மலேசியாவில்,...........நிறைய வேதனைகள் ,சலிப்புக்கள் ம்ம்ம்ம் வாழ்த்துக்கள்
உருகும் பிரஞ்சுக்காரி 6_நினைவு மீட்டல்

தனிமரம் said...

Velinaadu pokum murai patri akku veru aanni vera solliyirukkinka.
Kadasila naamal ethirpaapai thuundukiraar// நன்றி கவிஅழகன் முதல் வருகைக்கு ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ ! நன்றி கருத்துக்கு.

தனிமரம் said...

ஒரு மோர் கூலாத்தாங்கோ நேசன்:)... சின்ன வெங்காயமும் வெட்டிப் போட்டு:).
//ஹீ நான் பால்க்கோப்பிதான் தருவேன் கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
அழகாக நகருது தொடர்... அடுத்த ஈ புக் ரெடியாகிறது......ஏன் இந்தக்கொலவெறி அதிரா!ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்..

20 August 2012 14:49

தனிமரம் said...

ஹேமா said.வாசிக்கிறேன் நேசன்....எங்கள் வாழ்வியைல்,இந்த அகதி வேஷமெல்லாம் அடுக்கடுக்காய் வரப்போகுது.ஆரையும் மிச்சம் விடாதேங்கோ நேசன்...!

20 August 2012 14:59 // வாங்க ஹேமா சொல்லவேண்டிதைச் சொல்லுவோம்!ம்ம்.தாயகத்துக்கு இனியும் பொறுக்க முடியாது இழப்புக்கள்§ம்ம்.

தனிமரம் said...

யாரோ யார் யாரோ....பாட்டும் ஆழ யோசிக்க வைக்கிறது !

20 August 2012 15:00 //ம்ம் யாசிப்புத்தானே! நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

thodarkiren!

kavalaikalodu//ம்ம் நன்றி சீனி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றி... தொடருங்கள்... (3)

20 August 2012 17:33 //நன்றி தனபாலன் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நெற்கொழுதாசன் said...
நாங்களும் இப்படித்தான் ஒரு வருடம் மலேசியாவில்,...........நிறைய வேதனைகள் ,சலிப்புக்கள் ம்ம்ம்ம் வாழ்த்துக்கள்
உருகும் பிரஞ்சுக்காரி 6_நினைவு மீட்டல்//ம்ம் ம்லேசியா !நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் நெற்கொழுதாசன்.ம்ம்ம்