27 August 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி -09

அகதிகளுக்கான உயர்ஸ்தானிகள் ஆலயம்,அகதிகள் புணர்வாழ்வு ,வெளிநாட்டு அமைச்சு எல்லாம் என்ன அறிக்கை விட்டாலும்.

யுத்தம் தந்த பாடத்தில் உயிரைக்காவிக்கொண்டு உள்நாட்டைவிட்டு ஐரோப்பாவுக்கும் ,ஆஸ்ரேலியாவுக்கும்,கனடாவுக்கும் போகப்போறன் என்று பயணமுகவரிடம் பணம் கொடுத்துவிட்டு பாதிவாழ்வு தொலைத்தவர்கள் முகம் பேசமறுக்கின்றோம் பொதுவில்!

பட்டப்படிப்பு படித்தவன் ஆமி பிடிப்பான் என்ற பயத்தில் காணியும் ,வீடும் வித்து மூதத்தவன் ஒரு பொடியன் உயிர்வாழட்டும் என்று தாய்நாட்டைவிட்டு ஓட்டி அனுப்பின தாய்.

என்ற பிள்ளை வெளிநாட்டுக்குப் போனவன் இதுவரை ஒரு தகவல் இல்லை .என்ற கடவுளே" நீ கல்நெஞ்சுக்காரன் என்று புலம்பும் தாய் கண்ணீர் புரியுமா ?பயணமுகவர்களுக்கு .

இல்லை தான் பயணமுகவரிடம் ஏமாந்துவிட்டேன் என்று தன் உறவுகளிடன் உண்மை சொல்ல முடியாத தாழ்வு மனம் படைத்தவன். முகம் தொலைந்தவர்கள் பட்டியலில் இருக்கும் நிலை பேசமறுக்கின்றது ஊடகம்.

.நடிகருக்கு பால் ஊத்தும் கூட்டம் எல்லாம் பக்கத்துவீட்டுப் பொடியன் சேர்ந்து படித்தவன். இப்போது உயிரோடு இருக்கின்றானா ?என்பதைக் கூட சிந்திக்கும் மனம் இல்லை.

காலம் யுத்தம் மூலம் தந்தது மனதினை வக்கிரம் ஆக்கும் வார்த்தைகளும் ,ஒடிப்போகும் கிளுகிளு செய்தியும் சொல்லும் இணையத்தையும் அன்றி வேற என்ன???

ராகுல் காந்திக்கும் ஜமேக்கா காதலியும் சாட்டில் சல்லாபிக்கின்றார்களா ?என்றும் நாமலும் அசினும் பிசினில் என்று போடும் ஊடகம்.

சொந்த நாட்டில் இருக்கமுடியாத நிலையில் வெளிநாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் ஈழத்துக்குடிமக்கள் தவிக்கும் தாய்லாந்தில்,மலேசியாவில்,ஆப்பிரிக்க நாடுகளில் அதுவும் கெமரூன் நாடுகளில் பயணமுகவர் மூலம் ஐரோப்பா போக,கனடா போக என காத்திருந்து கதறியவர்கள் கதை எல்லாம் மகுடம் ஏறாது திரட்டியில் .


ஆனால் முகம் தொலைந்தவர்கள் மனம் நொந்தவர்கள் ,மனப்பிறல்வு எல்லாம் பேசமறுக்கும் அரசியல் விமர்சர்கள்.

ஒரு கணனிகிடைத்தால் அடுத்த யுத்தம் வரும் என்று சங்கூதும் சானக்கியர்களும், அதிகாரசபை என்று ஆலவட்டம் பிடிப்பவர்களும் முதலில் இந்த ஏதிலிகளை கரை சேர்ப்பார்களா ?? தீர்வுத்திட்டம் கேட்கும் குரல்கள் எல்லாம் இவர்களுக்கும் தீர்வு சொல்வார்களா ?
செடில்க்காவடி தூக்கும் அயல்நாட்டு ஊடகம் எல்லாம் அகதியின் வலி என்ன சூப்பர் சிங்கரில் அழுவது மட்டும் தானா ? ஒப்பாரியாக சிறையில் இருந்தும் சித்திரவதையும் பார்த்திருந்தால் புரிந்து இருக்கும் புலம்பெயர ஈழத்தவன் பட்டவலிகள். இது எல்லாம் புரியாது இத்தாலியில் இருந்து இந்திரா குடும்பத்துக்கு வந்த காதலிக்கு,! . அப்படித்தான் அன்று எங்களுக்கு ஓட்டியாக தாய்லாந்து வாசி சகிதம் அவருக்கு உதவிக்கு வந்தவர் . சேகர். யாழ்ப்பாணம் ஆமியின் கட்டுப்பாட்டில் விழுந்த வருடத்தில் வெளிநாட்டுக்கு போகப் போனார் எங்கள் கிராமத்தில் இருந்து. அவரை 2001 இல் இப்படி ஓட்டியாக சந்திப்பேன் என்று நானும் நினைக்கவில்லை . ஜீவன் யாழ்தேவியில் தூங்குவது போல காலை நீட்டித் தூங்கிய்போது சேகர் முன் கதை கொடுத்தேன். சேகர் அண்ணா எப்படி இந்த ஓட்டிவேலைக்கு வந்தீங்க ?ஊரில் உங்க அம்மா எத்தனையிடம் எல்லாம் தேடுவா . ஏன் இப்படி தோற்றம் எல்லாம் மாற்றி? என்னாச்சு ?சொல்ல விரும்பினால் சொல்லுங்க! ரவிக்கு என்னைத் தெரிந்து இருக்கின்றதே . ம்ம் எப்படி மறக்க முடியும் கிளாலிக்கடல் ஒன்றாகத்தானே தாண்டிவந்தோம் . என்ன சொல்ல வாழ்க்கைப்பாதையே வெளிநாட்டுக்கு வெளிக்கிட்டு மாறிப்போச்சு. எனக்கே என்ன நடந்தது என்று தெரியவில்லை.!!!  தொடரும்...................

16 comments :

Angel said...

உண்மையில் இந்த ஊடகங்களின் சில செய்திகள் படிக்கும்போது எனக்கு மிகுந்த வெறுப்பையும் கோபத்தையுமே வரவைக்கும் நேசன் ,,இது சரியான சாட்டையடி பதிவு ...அதே நேரம் வலியும் வேதனையும் அனுபவிதோர் /அனுபவிப்போருக்குதான் தெரியும்

Seeni said...

sako!

kavalaiyodu-
naanum ungaloda payanikkiren!

Yoga.S. said...

காலை வணக்கம் நேசன்!சாட்டையடிப் பதிவு/பகிர்வு சம்பந்தப்பட்ட எல்லோருக்குமே!இன்னமும் மனிதர்?!களாக சமூகத்தில் உலா வரும் பிசாசுகள்!

ஹேமா said...

நேசன் இரவே வாசித்தேன்.நாங்கள் பட்ட....படும் பாட்டை பாடலாகவே தந்திருக்கிறீர்கள்.இவையெல்லாம் நம் எதிர்காலத்துக்கான பதிவே தவிர....கருத்தாக எதைச் சொல்ல இருக்கு ?!

ஹேமா said...

ஊரில் எங்கள் வீட்டில் 21 வயதுக்காரன் இப்போதும் அவுஸ்திரேலியாவுக்கு படகில் போகிறேன் என்று புறப்படுகிறான்.வெளிநாடா வேண்டாம் ஊரிலேயே இரு என்று சொல்ல முடியாத நிலை.ஊரில் இருந்துதான் அவர்களின் எதிர்காலம் என்ன ?மற்றைய நாடுகளில் அகதிப் பதிவுகளைக் குறைத்து வருகிறார்கள்.தரகுப் பணமும் அதிகம்.வாயை மூடிக்கொண்டு ஒன்றும் சொல்லமுடியாமல் தவிக்கிறோம் !

தனிமரம் said...

உண்மையில் இந்த ஊடகங்களின் சில செய்திகள் படிக்கும்போது எனக்கு மிகுந்த வெறுப்பையும் கோபத்தையுமே வரவைக்கும் நேசன் ,,இது சரியான சாட்டையடி பதிவு ...அதே நேரம் வலியும் வேதனையும் அனுபவிதோர் /அனுபவிப்போருக்குதான் தெரியும்

27 August 2012 13:39// வாங்க அஞ்சலின் முதல் பால்க்கோப்பி உங்களுக்குத்தான் .கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

தனிமரம் said...

sako!

kavalaiyodu-
naanum ungaloda payanikkiren!

27 August 2012 22:11 // நன்றி சீனி அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

காலை வணக்கம் நேசன்!சாட்டையடிப் பதிவு/பகிர்வு சம்பந்தப்பட்ட எல்லோருக்குமே!இன்னமும் மனிதர்?!களாக சமூகத்தில் உலா வரும் பிசாசுகள்!// மாலை வணக்கம் யோகா ஐயா. நலம்தானே!நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நேசன் இரவே வாசித்தேன்.நாங்கள் பட்ட....படும் பாட்டை பாடலாகவே தந்திருக்கிறீர்கள்.இவையெல்லாம் நம் எதிர்காலத்துக்கான பதிவே தவிர....கருத்தாக எதைச் சொல்ல இருக்கு ?!//ம்ம் பதிவு செய்வோம் ஹேமா!ம்ம்

தனிமரம் said...

ஊரில் எங்கள் வீட்டில் 21 வயதுக்காரன் இப்போதும் அவுஸ்திரேலியாவுக்கு படகில் போகிறேன் என்று புறப்படுகிறான்.வெளிநாடா வேண்டாம் ஊரிலேயே இரு என்று சொல்ல முடியாத நிலை.ஊரில் இருந்துதான் அவர்களின் எதிர்காலம் என்ன ?மற்றைய நாடுகளில் அகதிப் பதிவுகளைக் குறைத்து வருகிறார்கள்.தரகுப் பணமும் அதிகம்.வாயை மூடிக்கொண்டு ஒன்றும் சொல்லமுடியாமல் தவிக்கிறோம் !

28 August 2012 03:05 //ம்ம் என்ன செய்வது! நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும்.

நெற்கொழுதாசன் said...

வாழ்த்துக்கள் கதைக்குள் பாத்திரங்களை உள்வாங்கும் விதம் அருமையாக உள்ளது நிகழ்கால சம்பவங்களின் தொகுப்பாக எழுகிறது
மன்னித்துவிடுங்க,கொஞ்சம் இடைவேளிவிளுந்துவிட்டது வரவுக்கு,இனிமேல் எனக்குதான் பால்கோப்பி

K said...

ஆணித்தரமான கருத்துக்களை உங்கள் பாணியில் எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள் நேசன் அண்ணா!

முற்றும் அறிந்த அதிரா said...

உண்மைதான் நேசன்ன்ன்.. நம் நாட்டு நிலைமையை என்னவெனச் சொல்வது...

தொடருங்கோ... பால் கோப்பி எனக்கு வேண்டாம்:).

தனிமரம் said...

வாழ்த்துக்கள் கதைக்குள் பாத்திரங்களை உள்வாங்கும் விதம் அருமையாக உள்ளது நிகழ்கால சம்பவங்களின் தொகுப்பாக எழுகிறது
மன்னித்துவிடுங்க,கொஞ்சம் இடைவேளிவிளுந்துவிட்டது வரவுக்கு,இனிமேல் எனக்குதான் பால்கோப்பி//நன்றி நெற்கொழுதாசன் வருகைக்கும் கருத்துரைக்கும் நேரம் கிடைக்கும் போது கருத்தோடு வாங்க ஏன் மன்னிப்பு எல்லாம் வேண்டி நண்பா!

தனிமரம் said...

ஆணித்தரமான கருத்துக்களை உங்கள் பாணியில் எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள் நேசன் அண்ணா!

28 August 2012 23:43 //நன்றி மணிசார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

உண்மைதான் நேசன்ன்ன்.. நம் நாட்டு நிலைமையை என்னவெனச் சொல்வது...

தொடருங்கோ... பால் கோப்பி எனக்கு வேண்டாம்:).// நன்றி அதிரா வருகைக்கும் கருத்துரைக்கும்.வீட்டுக்கு வந்தால் முதலில் பால்க்கோப்பித்தான் !ஹீ