25 August 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி -08

புலப்பெயர்தல் ,புலம்பெயர் இலக்கியம் என்று அதிகம் பேசப்பட்டது 1990 இன் பிற்பகுதியில். வெளிநாடு என்ற சொல்லை தவிர்த்து. தனித்துவம் மிக்கதாக இந்த வார்த்தையை முன்னீடு செய்தவர்களில் ஒருவர் எஸ்.பொ அதன் தாக்கம் வாதங்கள் ,பிரதிவாதங்கள் எல்லாம் தாயகத்தில் மல்லிகை ஜீவா,செங்கை ஆழியான் ,செ.யோகநாதன் என முட்டி மோதியது காலத்தால் மறக்க முடியாது ஏடுகளில்.

அனல் கக்கிய வார்த்தைகள் எல்லாம் சொல்ல மறந்த கதையில்லை. ஆனால் சொல்லாத கதைகள் பலதைச் சொல்லும் புலம்பெயர் சமூகம்.

காரணம் சுதந்திரம் என்ன என்பதை அனுபவிக்கும் போது இருட்டடைப்பும் ,வாய்ப்பூட்டும் ,துப்பாக்கி முனையில் மூச்சுக்காற்று போய் விடும் என்ற பயமும் ,மார்ச்சியம் என்றும் நாட்டுப்பற்றும் சொல்லிக்கொண்டு இனவாதம் உயிர் எடுக்கும் பிணம் விழும் நாட்டில் இல்லாத சுதந்திர தேசத்தில் சுதந்திரமான விடயங்களை பேசக்கூடிய சூழலில் வாழ்தல் என்பது வரலாற்றில் வாழ்தல் எஸ்.பொ போல சேமிக்க வேண்டிய நூல்.

அது போல சொல்லாத விடயங்கள் சொல்லுவது எழுத்தாணி பிடிபோர் கடமை..வலிகள் அழுவது /ஒப்பாரி என்றால் நான் அதுகடந்து வந்தவன்.


மரம் பட்டுப்போனாலும் மரத்தின் வேரில் ஈரம் இருக்கும். அன்பில் கிளறிப்பாருங்கள் அடியில் ஜீவன் இருக்கும் .

"டேய் என்ன எழுதுகின்றாய் ரவி .தூக்கம் வருகின்றது படுக்கப்போறன் "

"நீ படு ஜீவன் எனக்கு இந்த தாய்லாந்து பார்த்துக்கொண்டே இருக்கலாம் இரவில் .அப்படி ஒரு அழகு"

ம்ம் ஏன் தாய்லாந்து மங்கைகளும் அழகுதான் மச்சான்.

அதுசரி உனக்கு முதுகில் ஆமி அடித்தாலும் மூளையில் அடிக்கவில்லை என்னதுக்கு என்று தெரியுமா ?

மூளையில்லை உனக்கு என்று அவனுங்களுக்கும் தெரியும் போல.ஹீ ஹீ

போட லூசு விசர்க்கதை கதைக்கின்றாய்.!!!

உனக்கு நெஞ்சு முடியில் தீபம் ஏற்றியவன் கைவிரலில், தங்க மோதிரம் போடவில்லை. எஸ்லோன் பைப்பில் சாமரம் வீசவில்லை,ஆணி புடுங்கும் சுத்தி வைத்து கைநகவிரல் மீது நர்த்தனம் ஆடவில்லை ,சப்பாத்துக்காலினால் மொழிக்கட்டில் மிதியடி மிதிக்கவில்லை .உண்மை சொல்லு குண்டு எப்படி வந்தது என்று அதுதான் இந்த பஸ்சில் கூட எழுதுகின்றாய் நாட்குறிப்பு ரவி!.

மச்சான் எழுதிவைப்பம் யார்கையில் சேரும் போதும் சரி இப்படி ஒரு அனுபவமா என்று படிக்கட்டும் வழிப்போக்கன் என் உயிர் இல்லாவிட்டாலும்.

கவலைப்படாத சிறையில் இருந்து வெளியில் விட்ட கடவுள் நம்மை தெருவில் அநாதைப்பிணம் போல விடமாட்டார் .


போதிமரத்தில் சரி ஒரு இடம் தருவார்.

அதுவும் சரிதான் மச்சான் ரவி.

ஜீவன் கடவுள் என்னையும் உன்னையும் ஏன் ஒரே ஊரில் பிறக்கவைத்தார்? ஒரே வேலையில் சேரவைத்தார் எல்லாம் விதிப்பயன்.


நீ சிறையில் பாண் சாப்பிட்டிய இல்லைவரும் பேப்பர்களில் ,
பணபடித்தாயா ?இப்படிப் பேசுகின்றாய் .

விதி என்று!

விதிதான் உன்னையும், என்னையும் தாய்லாந்து வீதியில் இப்படி ஓடும் பஸ்சில் கதைபேசவைக்குது.

ஜீவன் .இந்த நேரம் சாலிக்கா இருந்தால் எப்படி இருக்கும்.

அடச்சீ! என்னைப்பக்கத்தில் வைத்துக்கொண்டோ டூயட் பாடுவாய்!
ஏன் அவளோடு பக்கத்தில் இருந்து படம் பார்த்த நீ பேசாத நல்லவன் போல .என்னையும் அவளையும் குறுகுறு என்றே பார்த்து எங்க ரெண்டு பேரையும் கொஞ்சம் கொஞ்சிப்பேச விடாத துரோகிடா நீ . வீட்டில் இருந்து பேசு அது என்ன சினிமா அரங்கில் வந்து பேசுவது. நான் படம் பார்க்கும் போது நீங்க என்னை இம்சை செய்தால் எப்படி இருக்கும் . பொறாமைடா உனக்கு நீ நித்திரைகொள் ஜீவன் அப்படித்தான் அன்று இருந்தான் .!!! தொடரும்!!!! பண-வேதம் ஓதுவது போல சகோதரமொழி  சிங்களத்தில்.

12 comments :

Rasan said...

இன்று தான் படித்தேன்.
//அது போல சொல்லாத விடயங்கள் சொல்லுவது எழுத்தாணி பிடிபோர் கடமை..வலிகள் அழுவது /ஒப்பாரி என்றால் நான் அதுகடந்து வந்தவன். மரம் பட்டுப்போனாலும் மரத்தின் வேரில் ஈரம் இருக்கும். அன்பில் கிளறிப்பாருங்கள் அடியில் ஜீவன் இருக்கும் . //அருமையான வரிகள்.

தொடருங்கள்.

Rasan said...

முந்தவைகளை படிக்கவில்லை படித்து விட்டு வருகிறேன்.

தனிமரம் said...

வாங்க ராசன் ஒரு பால்க்கோப்பி முதலில் குடியுங்கோ தொடரில் முதலில் வந்து இருக்கும் உறவு இல்லையா!ம்ம்

தனிமரம் said...

முந்தவைகளை படிக்கவில்லை படித்து விட்டு வருகிறேன்.//ம்ம் வாங்க ராசன் காத்து இருக்கும் தனிமரம்!ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!ம்ம்

கவி அழகன் said...

Kadumaiyaana sithiraivathaikalai ethir kondu vanthaalum kala kalap kathaikkiraarkal nanparkal

ஹேமா said...

மரம் பட்டுப்போனாலும் மரத்தின் வேரில் ஈரம் இருக்கும். அன்பில் கிளறிப்பாருங்கள் அடியில் ஜீவன் இருக்கும்.......இதைவிட என சொல்லக் கிடக்கு நேசன் !

ஹேமா said...

விதி வலியது...சுதந்திரமில்லா ஊரில பிறந்ததே பெரிய பாவம்...அதைக் கதையாய் சொல்லி அழுவது பெரிய பாவம்

ஹேமா said...

கொஞ்சம் காதலும் கலந்து குரல் தருகிறாள் பிரெஞ்சுக்காதலி.தொடருங்கள் நேசன் !

Yoga.S. said...

காலை வணக்கம்,நேசன்!வலி கொடியது,எத்தனை ஆண்டுகள் சென்றாலும்.....................................!ம்ம்ம்ம்!

திண்டுக்கல் தனபாலன் said...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

(இதற்கு முந்தைய பதிவும் படிக்காததால் + தமிழ் பதிவர்கள் திருவிழாவிற்கு சென்றதால், கருத்திட தாமதம்)

பகிர்வுக்கு நன்றி...

Seeni said...

mmmm
thodarum...

நெற்கொழுதாசன் said...

உனக்கு நெஞ்சு முடியில் தீபம் ஏற்றியவன் கைவிரலில், தங்க மோதிரம் போடவில்லை. எஸ்லோன் பைப்பில் சாமரம் வீசவில்லை,ஆணி புடுங்கும் சுத்தி வைத்து கைநகவிரல் மீது நர்த்தனம் ஆடவில்லை ,சப்பாத்துக்காலினால் மொழிக்கட்டில் மிதியடி மிதிக்கவில்லை .
இன்னும் வலிக்கிறது யாருக்கு தெரியும் ................கேட்டால் உனக்கென்ன வெளிநாடு ம்ம்ம்மம்ம்மம்ம்ம்ம் போட்டு தாக்குங்க