19 February 2013

விழியில் வலி தந்தவனே-7




இனவாத ஆட்சியினர் சமாதான நாடகத்தில் நடித்துக்கொண்டே முக்கிய போராளிகளின் செயல்பாட்டை கட்டுப்படுத்துக்கின்ற செயல் பாட்டில் மும்மரமாக ஆழ ஊடுருவும் படையினர் மூலம் ஆங்கங்கே பல இடங்களில் கிளைமோர் தாக்குதல் நடத்துகின்ற நிலையை கண்டிக்க வேண்டியவர்கள் .பல கதைகள் பேசிக்கொண்டு இருந்த நிலையை பார்த்துக்கொண்டு இருக்கும் நம் மக்கள் !உழவு இயந்திரத்தில் வரும் போது மிக அவதானமாக பாதையோரம் விழியினை கூர்மையாக்கி  தொலைநோக்குவது இயல்பான ஒன்று.

 அப்படித்தான் ரகுவும் உழவு இயந்திரத்தினைச் செலுத்திய வண்ணம் வீதியை நோட்டம் இட்ட போது! பூலான் தேவியின் வரலாற்றில் வரும் சாம்பல் பள்ளத்தாக்கு கதை படித்ததில் பிடித்தது போல 
ஒரு சாம்பல் நிற டீ சேர்ட்டும் கறுப்பு பாவாடையையும் அணிந்த ஒரு  வன்னிமயில் குடையுடன் சுகிவீட்டு  கேட்டை திறந்து கொண்டு உள்ளே சென்றால்!

 உள்ளே செல்லும் போது வீதியை ஒரு முறை முன் எச்சரிக்கையில் அவளும் ஒரு சிறையில் பூத்த சின்னமலர் போல நோக்கினாள்.

ரகுவும் அப்போது கிட்ட வந்துவிட்டான். அது சுகிதான்! ரகுவை ஏறிட்டு பார்த்தாள்!


.ரகு அவளை கவனித்தாலும் கவனிக்காதது போல  உழவு இயந்திரத்தை ஓட்டிக்கொண்டு சென்றான்.

ஆனால் சிறிது தூரம் போய் திரும்பி பார்த்தான் போகும் பாதை சரிதானா? என்பது போல சுகி அப்போது பார்த்துக்கொண்டு இருப்பது தெரிந்தது.விழியில் வலி தந்தவனே என்பது போல

அடுத்த நாள் பாடசாலையில் 
"நில்லுங்க ரகு உங்களிடம் கதைக்கணும் "இம்முறை சுகியின் தோழிகள் யாரையும் காணவில்லை. அவள்தான் அவன் எதிரே நின்றுகொண்டு இருந்தாள்.ஒற்றை ரோஜா போல

ஏன் ரகு என்னை பிடிக்கலை என்று சொல்லுறீங்க ?பார்த்தால் கூட பார்காதது கண்ணெதிரே தோன்றினால் பிரசாந்த்  போல போறீங்க உங்களை எனக்கு நல்லா பிடிக்கும். பைத்தியம் ஆனேன் ரகு !
நல்லா யோசிச்சு ஒரு பதிலை சொல்லுங்க என்று அழுதுகொண்டே போய்விட்டாள்.!

விழியில் வந்தவள் வழியில் அழுகின்றாள்
வில்லங்கம் காதல்  விடலைப் பருவத்தில்
விவசாயி மகன் இவன் அவள் 
வீட்டில்
விசயம் தெரிந்தால் வீட்டோ போல
விரைந்து வரும் வெளிக்கிடு
விடுதலைக்கு !

ரகு தன் மனசாட்சியை தானே கேட்டுக்கொண்டான் உண்மையிலே இவள் என்னை விரும்புகின்றாள் தான் போல. !

அப்படி என்னில் என்ன இருக்கு பெண்கள் பார்த்ததும் மயங்கிவிழும் அளவுக்கு நான் பிரசாந்த் போல மன்மதனும் இல்லை, வசதிகள் படைத்த அம்பானியின் வாரிசு இளைஞனும் இல்லை ,படிப்பில் ஸ்டூடன் நம்பர் வன் போலவும் இல்லை.!

ஆனாலும் ஒரு பெண் என்னைக் காதலிக்கின்றாள் அதுவும் மிகவும் அழகான செவ்வரளிப்பூப்போல ஒரு பெண்.


இதுதான் உண்மையான அன்பு என்பதா?ஒருவேளை நான் இதை மிஸ்பண்ணுகின்றேனோ?

ரகுவிற்கு அவளது காதலை ஏற்க தடையாக இருக்கும் ஒரே ஒரு காரணி அவள் குடும்பப்பின்னனி மட்டுமே அரசியலே.. அதன் சூழல்!



ரகுவிற்கு பிடித்தமான ஒருவிடயம் புரூஸ்லி போல கராத்தே அதை முறைப்படி கற்றுவருபவன்.வாரத்தில் இரண்டு நாட்கள் பாடசாலை பொதுவிளையாட்டு மைதானத்தில் நடக்கும் கராத்தே வகுப்பில் தவராமல் கலந்துகொள்வான்.அதில் கலந்து கொள்ளாவிட்டால் மற்றவர்கள் சிரிப்பார்கள் பயந்தவன் உயிர் வாழமாட்டான் என்று  !!என்றாலும் இந்த வன்னி பூமியில் கராத்தே உயிர் காக்கும் சில நேரங்களில் இனவாதிகளின் வக்கிரகத்தில் இருந்து என்பதை ஈழம் பதிவு செய்து இருப்பதையும் மறந்தவன் இல்லை ரகு!!!

 தொடரும்.........

6 comments :

கவியாழி said...

உண்மை
கதை நன்றாய் உள்ளது தொடருங்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

அரசியல் வந்து ஒரு இடைஞ்சலாப் போச்சே...

செங்கோவி said...

வஞ்சியா..வஞ்சக அரசியலா?........பார்ப்போம்!

தனிமரம் said...

உண்மை
கதை நன்றாய் உள்ளது தொடருங்கள்//வாங்க கவியாழி ஐயா முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

அரசியல் வந்து ஒரு இடைஞ்சலாப் போச்சே...//ம்ம் நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துக்கும்

தனிமரம் said...

வஞ்சியா..வஞ்சக அரசியலா?........பார்ப்போம்!//ம்ம் நன்றி செங்கோவி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்!