"தர்மம் தலைகாக்கும் என்பது ஆன்றோர் வாக்கு "அப்படித்தான் எண்ணி பலரும் விரும்பியோ ,விரும்பாமலோ ,இரக்கப்பட்டு ,பரிதாபப்பட்டு, அல்லது கழிவிரக்கத்தில் !
வீதியில் ,பேருந்தில் ,ரயிலில் நகரத்தில்,புறநகரில் என தர்மம் இடுவது நம் செயல்.
அந்தச் செயலைச் செய்து விட்டு தன் தன் கடமையில் நாம் போகின்றோம் .
ஆனால் நம்மிடம் தர்மம் பெற்றவர்கள் ஒரு சிலர் நாம் கொடுத்து பணத்தைக் கொண்டு என்ன செய்கின்றார்கள் ?என்பதை ஒரு சமூக சீர்திருத்த வாதிக்கலைஞன் பார்வையில் சொல்லும் குறும்படம் தான் .
நிம்மதி என்ன விலை என்ற நம்மவர் குறும்படம்.
கதை நெறியாள்கை என்று மிகவும் குறுகிய வளத்தினைக்கொண்டு நண்பர் S.மணிவண்ணன் இந்த குறும்படத்தினை நேர்த்தியாக சில பாத்திரப்படைப்பு மூலம் நெஞ்சில் பதியும் வண்ணம் நம் விழிகளுக்கு படைத்திருக்கின்றார்.
.உண்மையில் நிம்மதி என்ன விலைக்காக அவர் எவ்வளவு பொருளாதார,குடும்ப,பணிச்சுமைகளைத் தாண்டி ஒரு கலைஞனாக கஸ்ரப்பட்டு இருப்பார் என்பதை நன்கு அறிய முடியும் இந்தப்படத்தினை பார்வையிடுவதன் மூலம்.
நல்ல கலைஞனை வாழ்த்துவதுடன் நின்றுவிடாமல் ,ஊக்கம் கொடுத்து வளர்த்தும் விடவேண்டியது நம்மவர் கடமையாகும்.
நம்மவரிலும் எதிர்கால சிறந்த இயக்குனர்கள் இருக்கின்றார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.
அவரின் தேஞ்ச செருப்பு,மணல் வீடு ,,கேம் ஓவர் ,வரிசையில் மற்றொரு சிறந்த முயற்ச்சி இந்த நிம்மதி என்ன விலை .அதனைக் கண்டு களிக்க http://www.youtube.com/embed/aJQO1icpnDE
8 comments :
முதலில் S.மணிவண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
நன்றி... என்ன விலை என்று பார்க்கிறேன்...
நமக்கு விருப்பமான ஒரு விடயத்தைப் பகிர்ந்திருக்கிறீங்க.....
படம் பார்த்துவிட்டு வருகிறேன் அண்ணா
வணக்கம் நேசன்.
முக்கால்வாசிப் படம் பார்க்கேக்கை ஐயோ இதென்ன கொடுமை என அழுதேவிட்டேன் தெரியுமோ. கடைசி முடிவு... எனக்கு வந்த ஆத்திரத்தில அந்த ஆளையே பக்கத்தில குளத்தில தள்ளிக் கொண்டாலென்ன என இருந்தது...:( சிறப்பாக நடித்திருக்கிறார். இது நடிப்புக்கான விமர்சனம்.
அடுத்து அந்தக் கதை. சொல்ல வார்த்தை இல்லை. ஏனென்றால் நல்ல ஒரு சிந்தனை. முடிவுக்கு முன்னர்வரை தொடக்கத்தில் வந்த பரிதாபம் சற்றும் மாறுபட்டிடாமல் வெகு சாமர்த்தியமாகக் கொண்டு போய் எதிர்பாராதவிதமாக முடித்திருக்கிறார் கதாசிரியர். அருமை. தற்காலத்தில் அவசியம் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய நல்ல கதை.
எல்லாத்துக்கும் சிகரம் வைச்சாற்போல இருக்கிறது இயக்குனர் திறமை. அருமையாக மிக அற்புதமாக இயக்கியுள்ளார். இன்னும் கமெரா, இசை எல்லாமே மிகவும் நன்றாக இருக்கிறது. நல்லதொரு படைப்பு.
அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!
இதை இங்கு பகிர்ந்தமையால் நானும் பார்த்தேன். அவ்வகையில் உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் நேசன்!
முதலில் S.மணிவண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
நன்றி... என்ன விலை என்று பார்க்கிறேன்// நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துக்கும்!
நமக்கு விருப்பமான ஒரு விடயத்தைப் பகிர்ந்திருக்கிறீங்க.....
படம் பார்த்துவிட்டு வருகிறேன் அண்ணா
7 February 2013 20:33 //நன்றி ஆத்மா வருகைக்கும் கருத்துக்கும்.
வணக்கம் நேசன்.
முக்கால்வாசிப் படம் பார்க்கேக்கை ஐயோ இதென்ன கொடுமை என அழுதேவிட்டேன் தெரியுமோ. கடைசி முடிவு... எனக்கு வந்த ஆத்திரத்தில அந்த ஆளையே பக்கத்தில குளத்தில தள்ளிக் கொண்டாலென்ன என இருந்தது...:( சிறப்பாக நடித்திருக்கிறார். இது நடிப்புக்கான விமர்சனம்.
அடுத்து அந்தக் கதை. சொல்ல வார்த்தை இல்லை. ஏனென்றால் நல்ல ஒரு சிந்தனை. முடிவுக்கு முன்னர்வரை தொடக்கத்தில் வந்த பரிதாபம் சற்றும் மாறுபட்டிடாமல் வெகு சாமர்த்தியமாகக் கொண்டு போய் எதிர்பாராதவிதமாக முடித்திருக்கிறார் கதாசிரியர். அருமை. தற்காலத்தில் அவசியம் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய நல்ல கதை.
எல்லாத்துக்கும் சிகரம் வைச்சாற்போல இருக்கிறது இயக்குனர் திறமை. அருமையாக மிக அற்புதமாக இயக்கியுள்ளார். இன்னும் கமெரா, இசை எல்லாமே மிகவும் நன்றாக இருக்கிறது. நல்லதொரு படைப்பு.
அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!
இதை இங்கு பகிர்ந்தமையால் நானும் பார்த்தேன். அவ்வகையில் உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் நேசன்!//நன்றி இளமதி வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும்.
நன்றி நேசன்
நீங்கள் பதிவிட்டதினால் இன்னும் பலரை எமது படைப்பு சென்றடைந்திருக்கின்றது என்பது எனக்கு மகிழ்ச்சியைத்தருகின்றது, இதுவரை எனது படைப்புகள் அனைத்துக்கும் நல்ல விமர்சனங்களை தந்திருந்தீர்கள் இன்னும் பலரை பார்க்க வைத்தீர் எமது பயணத்தில் தனிமரமாக மட்டுமன்றி அதன் கிளைகளையும் சேர்த்துக்கொண்டு வருவது ஆனந்தமே நன்றி மணிவாணன்
வணக்கம்,நேசன்!பார்த்து விட்டு சொல்கிறேன்.
Post a Comment