20 April 2013

அந்த நாள் ஞாபகம்-9


வணக்கம் உறவுகளே நலமா??
மீண்டும் தனிமரம் அந்தநாள் ஞாபகம் ஊடாக திரையரங்கில் தனியாக  சினிமாமீதான ஆர்வத்தில் எப்படி எல்லாம்! சீரழிந்தது, சிந்தித்தது? செயல்பட்டது .

என்பதை அசைபோடுகின்றேன் உங்களுடன் -பண்டாரவளை -நியூதியோலி.


.

எப்போதும் கடந்தகாலம் இனி மீண்டுவராது .என்றாலும் ரயிலின் பயணத்தில் மரங்கள் அசைந்தது என்ற கவிஞர் கற்பனை போல!

 நானும் இனவாத யுத்தம் கடந்து தனிப்பட்ட பொருளாதார தேடலில் விற்பனைப்பிரதிநிதியாக வேட்டி கட்டாமல் டை(கழுத்துப்பட்டி ) கட்டி முன்னம் புகையிலைக்கு பாணி போட்ட வேலையை விட்டுவிட்டு.)))))))   பன்நாட்டு கம்பனிக்கு எடுபிடியாக ஒவ்வொரு ஊர் விட்டு ஒவ்வொரு ஊர் சுற்ற ஆரம்பித்த நிலையில்.

இந்த தொழிலில் ஏற்பட்ட பதவி மாற்றத்தினால் போன இடம் தான் இந்த பண்டாரவளை!


நான் போகமுன்னமே இந்த ஊருக்கு போன என் கிராமத்தவர் கதையை நடுநிலையோடு வரலாற்றுத் தகவலுடன் பண்டாரவளை நகரின் மான்மியம் பற்றி வரலாற்றில் எழுதினால் .அதில் வடக்கில் பல தீவுகளில் ஒருதீவான என் கிராமத்தவர்கள் பொருளாதாரம் ஈட்ட இடம்பெயர்ந்து வாழ்ந்த நிலையும் ,பின் இனவாத யுத்தத்தின் பயனாக குடும்பத்தையும் பாதுக்காக்க  அழைத்து வந்து குடியேறி இந்த ஊரில் வாழ்ந்தவர்கள் ப்ல்ர். அவர்கள்  வந்த இடத்தில் பிழைக்க வந்து வெற்றிக்கொடிகட்டி குடும்பம் ,வியாபாரம் ,அரசியல் என்று ஆடைகட்டி அதில் தன் சுய கொளரவம் தொலைந்த  குடும்பஸ்தர் கதை எல்லாம் நிச்சயம் அச்சில்  ,இணையத்தில் வரலாம் ஆனால் அதுவருமா?? என்பதை காலத்தின் கையில் விட்டுவிட்டு §


இந்த நகரம் பல சிறப்புக்களையும் சில கரும்புள்ளிகளையும் கொண்ட நகரம். மூவின மக்களும் 'சேர்ந்து வாழும் இந்த ஊரிலும் விற்பனைப்பிரதிநிதியாக வலம் வந்த காலம் வசந்தகாலம் எனலாம் .

பல நட்புகளுடன் மலையகம் சுற்றும் சந்தர்பம் கிடைத்தது அத்தோடு இலங்கை வானொலியின் விளம்பர நிகழ்ச்சியான வர்த்தக(தென்றல் பின்நாட்களில்) வீதியுலா நிகழ்ச்சியும்.

 அன்பான அறிவிப்பாளர்களின் முகத்தினையும் நேரடியாக தரிசிக்கும் சூழல் கிடைத்தது. அவர்களின் நட்பு பின் இன்னொரு தேடலின் பக்கம் என்னையும் ஈர்த்தது .

அப்போது என்னோடு வந்த நட்பும் அந்த நண்பர்களின் காதல் கதையும் அதன் அரசியல் சூழலையும் ,இனிவரும் தொடரில் இன்னொரு வீதியுலா வரும் மலையகம் ஊடாக தனிமரம் வலையில் விரைவில்!


பண்டாரவளை திரையில் பார்த்த இந்தப்படம் என் ஞாபகத்தில் இன்னும்
ஒரு நினைவுச்சின்னம்!




தொடர் முன் பதிவை இங்கேயும் காணலாம்.http://www.thanimaram.org/2013/02/7_7281.html

4 comments :

MANO நாஞ்சில் மனோ said...

நாங்களும் உங்களோடு பயணிக்கிறோம் வாருங்கள்...!

Unknown said...

காலை வணக்கம்,நேசன்!நலமா?///அந்த நாள்........ஞாபகம்...நெஞ்சிலே வந்ததே............நண்பனே...........நண்பனே.........நண்பனே.............!!!!!!!!!!

தனிமரம் said...

நாங்களும் உங்களோடு பயணிக்கிறோம் வாருங்கள்...!

20 April 2013 17:26 //வாங்க மனோ அண்ணாச்சி ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

காலை வணக்கம்,நேசன்!நலமா?///அந்த நாள்........ஞாபகம்...நெஞ்சிலே வந்ததே............நண்பனே...........நண்பனே.........நண்பனே.............!!!!!!!!!!

20 April 2013 23:18 //வணக்கம் யோகா ஐயா நலம் !ம்ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.