பதிவுலகில் சக பதிவாளர் நண்பர்கள் தளத்தின் ஓனர் இப்படி தனிமரம் பற்றி தன் கருத்தினை எழுத்தில் வடிக்கின்றார் !
ஒரு தொடர் எழுதுவது என்பது இலகுவானது இல்லை அதைவிட அந்த தொடர் பலரைக் கவரவும் வேண்டும் சிலவேளை 800 பேரும் படிப்பார்கள் 80 பேரும் படிப்பார்கள் ஆனால் ஹிட்ஸ் என்ற மாயயை தாண்டினால் மட்டுமே பல தொடர்களை எழுதமுடியும் என்பது என் கருத்து.
தனிமரம் நேசன் அண்ணாவின் பல தொடர்கள் அவரது எழுத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி செல்கின்றன தொடர்ந்தும் பல தரமான படைப்புக்களை அவர் தரவேண்டும் என்பது ஒரு வாசகனாக என் விருப்பம்.
பதிவுலகில் நான் பார்த்த பதிவர்களில் தொடர்கள் எழுதுபவர்களில் செங்கோவி அண்ணுக்கு அடுத்தாக நேசன் அண்ணாவை வகைப்படுத்லாம். செங்கோவி அண்ணாவின் ”மன்மத லீலை”என்ற தொடருக்கு நிகராக பதிவுலகில் இதுவரை எந்த ஒரு தொடரையும் நான் படிக்கவில்லை
நேசன்னாவின் தொடர்களில் உள்ள குறை சுவாரஸ்யம் குறைவாக இருக்கும் ஒரு விடயத்தை சுருக்கமாக கூறமாட்டார்.அதனால் தான் சுவாரஸ்யம் குறைவாக இருப்பதை போல எனக்குத்தோன்றுகின்றது.எனவே ஒரு சின்னவிடயத்தையும் இழுத்து நீளமாக குறிப்பிடாமல் சுருக்கமாக சொன்னால் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து.
அவர் எழுதும் அடுத்த தொடர் சிறப்பாக அமைய வாழ்த்துகின்றேன். அடுத்த முறை நேசன்ணாவின் இந்த தொடரைப்போல பதிவுலகில் நான்னொரு தொடரையும் படிக்கவில்லை என்று சொல்லும் அளவுக்கு அமையவேண்டும் என்பது ஒரு வாசகனாக என் விருப்பம் மீண்டும் வாழ்த்துக்கள் நேசண்ணா.
அத்துடன் பல தொடர்களை எழுதிய நேசன்னாவுக்கு. ஒரு சகபதிவர் என்ற முறையில் ஒரு விருதையும் வழங்குகின்றேன் ஆமா விருது கொடுக்க நீ என்ன பெரிய அப்பாடக்கரா என்று பலர் கேட்கலாம் ஆனால் நான் ரசிக்கும் ஒருவிடயத்தை ஒருவர் செய்யும் போது அதுக்கு என்னால் ஆன ஒரு சின்ன அங்கிகாரம் இந்த விருது.”தொடர் நாயகன்” என்ற இந்த விருதை தனிமரம் அவர்களுக்கு வழங்குகின்றேன் வாழ்த்துக்கள் பாஸ்
9 comments :
ராஜ் சொன்னது நிஜந்தான்!ஒரு தொடர் எழுதறது ஒண்ணும் சுலபமான விஷயுமில்ல... பல தொடர்களை ரசிக்கற மாதிரி எழுதியிருக்கற உங்களுக்கு தகுதியான விருது தான் தந்திருக்கார். இன்னும் நிறையப் பேரின் அன்பில் நனைய, விருதுகள் பெற என் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் நேசன்!
மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
படைப்புகளும் விருதுகளும் தொடரட்டும்
விருதுக்கும், ராஜாவின் கருத்துக்கும் வாழ்த்துக்கள்
//ஹிட்ஸ் என்ற மாயயை தாண்டினால் மட்டுமே பல தொடர்களை எழுதமுடியும் என்பது என் கருத்து.//
மிகச் சரியான கருத்து.
நேசனின் எழுத்துக்களில் தனித்துவம் உள்ளதை மறுக்க முடியாது
விருதிற்கு வாழ்த்துக்கள்.
தொடரில்... எத்தனை படங்கள், பாடல் வரிகள்... (வலிகளை மறைக்க)
தொடரை தொடர வாழ்த்துக்கள்...
விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்...
மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்
அருமையான,பொருத்தமான பட்டம்,ராஜ்!நேசனுக்கு வாழ்த்துக்கள்!விருது வழங்கிக் கௌரவித்த உங்களுக்கும் நன்றிகள்!
வாழ்த்துக்கள் விருது வழங்கியவருக்கும் பெற்றுக்கொண்டவருக்கும்.
ஒரு பொருத்தமான விருதை பொருத்தமானவருக்கு வழங்கிய திருப்த்தி
அனைவருக்கும் நன்றி நண்பர்களே
Post a Comment