23 April 2013

வரலாற்றில் வாழ்தல் ஒரு பார்வை!!!!!!

"படுதுயர் மறந்தொரு ஒட்டகம் மீதினில்
பயணம் செய்யும் பரதேசியாகவே
வடுபுண் தடவிட விரல்தொடு தழும்பினில்
விழிநீர் நிரம்பிய பயணியாய் நானும்!"
      (எஸ்.பொ )

ஈழத்து இலக்கிய வானத்தைப்பார்க் ஆசைப்படும் சாதாரண வாசகர்களை கடந்து ஈழத்து இலக்கிய கர்த்தாக்களின் தத்துவச்செருக்கு என்ன என்பதை தேடும் பலரும் வாசிக்க வேண்டிய ஒரு தகவல் களஞ்சியம் தான் வரலாற்றில் வாழ்தல் என்ற  எஸ்.பொ .வின்  குறிப்புக்கள் அடங்கிய நீண்ட வாழ்க்கையின் சில சில விடயங்களை தொட்டுச் செல்லும் கட்டுரைத் தொகுதி!

வாசிப்பு பிரியர்களுக்கு இந்த 
எஸ்.பொ ஈழத்து இலக்கிய வானில் ஒரு வணங்கா முடி  என்பதை நன்கு அறிவார்கள் .

என்றாலும் அந்த எஸ்.பொவின் அனுபவத்தின் ஊடாக யாழ் மேட்டுக்குடி பண்டிதர்களின் வாழ்பிடி அரசியல் ஆதிக்கம் ,அவர்களின் உள்குத்து என்பதில் தொடங்கி  !

அவரின் அகன்ற பார்வையூடாக ஈழத்து இலக்கிய குஞ்சம் கட்ட ஆசைப்பட்டதும் அதன் மூலம் என்ன என்ன சவால்களை சந்தித்தார் ?என்பதை தன் கூற்றாக சொல்லும் இந்த நூல்த் தொகுதி இரண்டு பாகம் கொண்டது .

மித்திரா வெளியீடாக வந்து நீண்டகாலமான இந்த தொகுதி கடந்த ஆண்டு. வசந்தகாலத்தில் சென்னையில் உலாச் சென்ற போது வாங்கியது .

இதுவரை வாசித்த
நூல்களில் என் நேரத்தினை பாரிசில் வாழ்வில் அதிகம் கொள்ளை கொண்டது. இது .

இலக்கிய தேடல் இருக்கும் எந்த வாசகனும் கடந்த காலத்தில் தம் கைக்கு கிடைக்க முடியாமல் போன யுத்த அவலம் ஒருபுறம், ஈழத்து பண்டிதர்களின் இருட்டடைப்பு ஒருபுறம், என்ற வட்டம் கடந்து பொக்கிசமாக சேமிக்க வேண்டியது!

தன் பிறப்போடு தொடங்கி தன் வாழ்க்கைச் சூழ்நிலை அப்போதைய யாழ்ப்பாணத்து ஆதிக்க வெறியினரின் வாழ்வியலில் தொடங்கி அதன் ஊடாக இலங்கையில் ஆழும்கட்சியாக வரும் ஜக்கிய தேசிக்கட்சி ,மற்றும் சுதந்திரக்கட்சி ,அதன் கூட்டணியான இடதுசாரி மார்க்கிய வாழ்பிடிகள் என அரசியல் நகர்வுகள் ஒருபுறம் ,தமிழரசுக்கட்சி மற்றும் கூட்டணி என்போரின் தூர நோக்கு என்ற போர்வையின் பின் தன் வீட்டு இலாபம் அறிந்த சாமானியன் பார்வை அதன் ஊடாக இலக்கியப் பிரவேச   ஆசை .

அப்போதைய அவரின் வருகையை ஏற்றியும்  ,தூற்றியும் ,பேசியவர்களின் இலக்கியப்படைப்புக்கள்.

 அதன் ஆழுமை என்பனவற்றின் ஊடாக ஒரு படைப்பாளி எப்படி நடுநிலமையோடு தன் கணிப்புக்களை விதந்துரைக்கவேண்டும் என்பதை விமர்சனப்பார்வையூடாக விதம்பி நிற்கும் இந்த நூலில் .

நாம் ஒருவரின் 71 வருட வாழ்வின் தத்துவங்கள் ,பிடிமானங்கள், பிடிவாதங்கள் ,இழப்புக்கள் ,பெற்றவை ,குடும்ப நிலை ,அரசியல், சமய ,சமூக ,நாட்டின் மறைக்கப்பட்ட வரலாற்றித்
தகவல் என எதிர்கால வாசகனுக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும் இந்த நூலில் !

என்னைக்கவர்ந்த இந்த வரிகளை மீண்டும் ஒரு வாசகனாக என் வலையில் சேமிக்கின்றேன் !

"படுதுயர் மறந்தொரு ஒட்டகம் மீதினில்
பயணம் செய்யும் பரதேசியாகவே
வடுபுண் தடவிட விரல்தொடு தழும்பினில்
விழிநீர் நிரம்பிய பயணியாய் நானும்!"!

தொடரும்!!!!!!

15 comments :

நெற்கொழுதாசன் said...

வாழ்த்துக்கள் தனிமரம் மிக தேவையான ஒரு பதிவு தொடராக தொடரட்டும்.கற்றவர்களால் புறக்கணிக்கப்பட்ட பல படைப்பாளிகள் இலைமறை காயாக எமது சமூகத்தில்,அவர்களையும் தொட்டு செல்லுங்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

நாம் ஒருவரின் 71 வருட வாழ்வின் தத்துவங்கள் ,பிடிமானங்கள், பிடிவாதங்கள் ,இழப்புக்கள் ,பெற்றவை ,குடும்ப நிலை ,அரசியல், சமய ,சமூக ,நாட்டின் மறைக்கப்பட்ட வரலாற்றித்
தகவல் என எதிர்கால வாசகனுக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும் இந்த நூலில் !

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான கட்டுரைத் தொகுதியின்... நூலைப் பற்றிய உங்களின் விமர்சனப் பார்வை அபாரம்... மேலும் விரிவாக தொடரவும்...

இளமதி said...

உண்மைதான் நேசன். தங்கள் வாழ்காலத்தையே இப்படி அற்பணிப்பாகியவர்கள் இலைமறை காயாகைப்போவது வருத்தமானதே.
தொடருங்கள்...

பூ விழி said...

நல்ல இருக்கு உங்க விமர்சனம் விருப்பமான நூல் என்றும் மனதில் இடம் பிடித்து விடும்

reverienreality said...

கட்டுரைத் தொகுதி கிடைத்தால் வாசிக்க வேணும் நேசரே...

இன்று சாருவின் ஒரு சாக்கடையை வாசித்துக்கொண்டிருக்கிறேன்...அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கும் என்பதை சொல்ல தேவை இல்லை...:)

தனிமரம் said...

வாழ்த்துக்கள் தனிமரம் மிக தேவையான ஒரு பதிவு தொடராக தொடரட்டும்.கற்றவர்களால் புறக்கணிக்கப்பட்ட பல படைப்பாளிகள் இலைமறை காயாக எமது சமூகத்தில்,அவர்களையும் தொட்டு செல்லுங்கள்.

23 April 2013 15:37வாங்க நெற்கொழுதாசன் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நாம் ஒருவரின் 71 வருட வாழ்வின் தத்துவங்கள் ,பிடிமானங்கள், பிடிவாதங்கள் ,இழப்புக்கள் ,பெற்றவை ,குடும்ப நிலை ,அரசியல், சமய ,சமூக ,நாட்டின் மறைக்கப்பட்ட வரலாற்றித்
தகவல் என எதிர்கால வாசகனுக்கும் எடுத்துக்காட்டாக இருக்கும் இந்த நூலில் !

23 April 2013 16:14 //.நன்றி மனோ அண்ணாச்சி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

சிறப்பான கட்டுரைத் தொகுதியின்... நூலைப் பற்றிய உங்களின் விமர்சனப் பார்வை அபாரம்... மேலும் விரிவாக தொடரவும்...

23 April 2013 17:53 /.நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

உண்மைதான் நேசன். தங்கள் வாழ்காலத்தையே இப்படி அற்பணிப்பாகியவர்கள் இலைமறை காயாகைப்போவது வருத்தமானதே.
தொடருங்கள்...//.நன்றி இளமதி வருகைக்கும் கருத்துரைக்கும்

24 April 2013 10:44

தனிமரம் said...

நல்ல இருக்கு உங்க விமர்சனம் விருப்பமான நூல் என்றும் மனதில் இடம் பிடித்து விடும்//நன்றி பூவிழி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

கட்டுரைத் தொகுதி கிடைத்தால் வாசிக்க வேணும் நேசரே...

இன்று சாருவின் ஒரு சாக்கடையை வாசித்துக்கொண்டிருக்கிறேன்...அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கும் என்பதை சொல்ல தேவை இல்லை...:)

24 April 2013 05:05 //நிச்சயம் இது விசித்திரமான நூல் ரெவெரி! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

Unknown said...

இரவு வணக்கம்,நேசன்!அந்தக் காலத்தில் வாசித்தது,எஸ்.பொ எழுத்துக்கள்.உங்களுக்குக் கிடைத்திருக்கிறது சென்னையில் பொக்கிஷம்!

S.டினேஷ்சாந்த் said...

நல்லதொரு பகிர்வு நண்பரே.எஸ்.பொ எனக்கு புதியவர்.ம்ம் இணையத்தில் இவரது நூல்களை தேடி வாசிக்கும் ஆர்வத்தை உங்கள் பதிவு உருவாக்கியிருக்கின்றது.

இராய செல்லப்பா said...

எஸ்.பொ.வின் நூல்களை இன்னும் முறையாக நான் வாசிக்கும் வாய்ப்பு கிட்டவில்லை. இனி தேடிப் பிடித்து வாசிப்பேன். தொடர்ந்து இதுபோன்ற விமர்சனங்களை வரவேற்கிறேன்.