04 April 2013

அரியாசனம் ஏறும் தனிமரம்!!!!!!!அடகொக்கா மக்கா ஹீ!

வணக்கம் உறவுகளே எல்லோரும் நலம் தானே??? 

வலைப்பதிவு என்ற எழுத்துலகில் வலம் வரும் பதிவாளர்கள், பதிவாளினிகள் எல்லாருக்கும் இருக்கும் ஆசைதான் எல்லோரும் தம் பகிர்வை படிக்கவேண்டும் நிறை ,குறைகளை தொட்டுச் சொல்லவேண்டும், தட்டிக்கொடுக்க வேண்டும் என்றும் !



 ஆனால் அந்த தென்றல் அப்படி எளிதில் இந்த பதிவுலகத்தில் எல்லாருக்கும் கிடைப்பது இல்லை என்பது என் அனுபவம் . 


என்றாலும் முயற்ச்சி திருவினையாக்கும் என்பதுக்கு இணங்க எனக்கும் ஆரம்பத்தில் தெரியாத, பலவிடயங்களை இந்த பதிவுலகம் கற்றுக்கொடுத்து இருக்கு . அதிக நட்புக்கள் இப்போது எனக்கு இருப்பது இந்த வலைமூலம் என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி 


. இந்த மூன்று வருட தனிமையை போக்கியது இங்குதான் .அதிக சண்டை ,விவாதம் வெட்டிப்பேச்சு என்று நானும் பலருடன் பழகியது ,பின் பிரிந்தது ,வெறுத்தது ,ஒதுங்கியது ,என்றெல்லாம் கடந்து என் எழுத்து ஆர்வத்திற்கு பலர் தோள் கொடுத்த உறவுகளுக்கு நன்றி சொல்லும் ஒரு பொதுத்தளமாக வரும் வார் 8/4/13 வலைச்சர ஆசிரியர் பதவியை அலங்கரிக்க அன்பு நண்பர் தமிழ்வாசி அவர்கள் அழைத்து இருக்கின்றார்!



 கிடைக்கும் வாய்ப்புக்கள் எல்லாம் என் எழுத்துப்பணியை மெருக்கூட்ட கிடைத்த சந்தர்ப்பமாக கருதி . என் பணியை வரும் 8/ 4/2013 தொடக்கம் ஒரு வாரம் உங்களுடன் நான் படித்ததில் பிடித்தது ,பழகிய ,பிடித்த தெரிந்த ,தெளிந்த ,பதிவுலக ஜாம்பாவாங்கள் பற்றிய என் கரித்துப்பகிர்வை உங்களுடன் அசைப்போடப்போறன்! 


எல்லாரும் எப்போதும் போல அன்பும் ,ஆதரவும் ,தருவீர்கள் என்ற நம்பிக்கையில் அரியாசனம் ஏறப்போரேன்.! 

வரும் வாரம் வலைச்சரத்தில் சந்திப்போம் எனதருமை உறவுகளே !!! நேரம் கிடைக்கும் போது ஒரு தரிசனம் காணுங்கள் தனிமரத்திற்கு தார்மீக ஆதரவு தந்து. 


நட்புடன் தனிமரம் 
தியாகராஜா சிவநேசன்!
பாரிஸ்.

8 comments :

இளமதி said...

அருமை!. வாழ்த்துக்கள் நேசன்...:)

எங்கள் அன்பும் ,ஆதரவும் எப்போதும் உங்களுக்கு உண்டு.
ஏறுங்கள் உங்கள் படிகளில்... அமருங்கள் அந்த அரியாசனத்தில்...
நடக்கட்டும் உங்கள் அரசாட்சி...

மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள் நேசன்!!!

Seeni said...

vaazhthukkal sako

பால கணேஷ் said...

தனிமரத்துக்கு ஆதரவு தராமல் மற்ற மரங்களான எம்மால் இருந்துவிட இயலுமா நேசன்? அமர்க்களப்படுத்துங்க. வர்ற வாரம் நடக்கப்போற உங்க ராஜ்யத்துல நானும் தவறாம வந்திருந்து கைதட்டி உற்சாகப்படுத்துறேன். சரிதானே..! ஆசிரியராக அரியணை ஏறவிருக்கும் உங்களை மனம் நிறைய மகிழ்வோட வாழ்த்தறேன் தம்பி!

பூ விழி said...

அந்த தென்றல் அப்படி எளிதில் இந்த பதிவுலகத்தில் எல்லாருக்கும் கிடைப்பது இல்லை என்பது என் அனுபவம் .//

ஆம நானும் நினைத்ததுண்டு ஆனால் முயற்சி மட்டுமே பாதை வகுக்கும் என்று புரிந்து கொண்டேன் தனிமரம்ஆசிரியர் பொறுப்பில் பூத்து குலுங்க வாழ்த்துகள்

Yoga.S. said...

காலை வணக்கம்,நேசன்!நலமா?///அருமையான அங்கீகரிக்கப்பட்ட ஒரு வாய்ப்பு!வாய்ப்பை நன்கு பயன்படுத்துங்கள்,உறவுகள் கூட இருப்போம்!

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா... பாடல்களுடன் அசத்த அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...

அம்பாளடியாள் said...

வாழ்த்துக்கள் அசத்துங்கள் சகோதரா எங்கள் ஆதரவு அது எப்போதும் உங்களுக்கு உண்டு .நன்றி மிக்க நன்றி எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஒன்றைத் தேர்வு செய்து போட்டுள்ளீர்கள் .பாசப் பறவைகள் இப் படத்தைப் பல முறை போட்டுப் போட்டு பார்த்துள்ளேன் கூடவே பந்தம் சிவாஜியின் நடிப்பு இன்னும்
கண்ணுக்குள் நிற்கின்றது .

K.s.s.Rajh said...

வாழ்த்துக்கள் பாஸ்