30 July 2013

என் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-16


காதலில் சுயநலம் என்றால் ஒருவனின்
காதல் தோற்கும் !அதுவே பொதுநலம்
காதல் எனில் பிறருக்கு நீ ஆலமரம்!
காதலில் தனிமரங்கள் தோற்கலாம்
கடந்து வந்தாள் பொதுநலத்தில்
காட்டினைப்போல ஆலமரமாக
கண் முன்னே வலம் வரலாம்
காதலுக்கு முன் தனிமரமா?
கடவுளுக்கும் நிழல்கொடுக்கும் ஆலமரமா??
கடற்கரையில் நிற்கும் நண்பனே 
கனத்த நிலையில் நல்லாசிந்தி!
  


காதலினால் கடமையை மறக்கலாமா உன் எதிர்காலத்திற்காக உன் உடன் பிறப்புக்களின் எதிர்காலத்தை நினைக்காமல் சுயநலவாதிபோல  இருந்தால் சுற்றம் உன்னைத்தூற்றும் !

உற்ற நண்பர்களுக்கு உன்னை எடுத்துக்காட்ட என்ன சிறப்பு இருக்கும் ?இது எல்லாம் ஜோசிச்சியா மச்சான் ?

என்று காதலின் செய்தி சொன்ன பாபு வைப்பார்த்துக் கேட்டான் சேகர்.

உங்க அப்பா ,அம்மா ,உன்னை மூத்த பையன் என்று வைத்திருக்கும் கனவுகள் ,கற்பனைக்கள் விருச்ச மரம் போல !உயர்ந்து உவகைகொடுக்க வேண்டும் அதைவிடுத்து முள்ளு முருக்கை போல வெறும் பொன்னுருக்குக்கு மட்டும் முன் நிறுத்தும்  மரமாகாத !

அந்த மரத்தை  வெட்ட காதல் என்ற கவ்வாத்துக்கத்தியை அவர்கள் கையில் கொடுக்கப்போறீயா ?

உன்னை அண்ணாவென்று அன்போடு அழைக்கும் அன்புத்தங்கச்சி சங்கவிக்கு எப்படி ஒரு முன்மாதிரி அண்ணாவாக இருக்கப்போறாய் ?

உன்  தம்பி அவன் எனக்கும் தம்பிதான் விமலன் .அவனுக்கு எப்படி ஒரு நல்ல வழிகாட்டியாய் இருக்கப்போறாய் ?

இந்த உறவுகளைக்கடந்து உன் தந்தை அடிக்கடி டாடி டாடி என்று நீ  பாசம் பொழிவாயே !அந்த சிறப்புமிக்க புகைப்பட கலைஞன் தன் பொருளாதார பின்னடைவுகள் ,தனிப்பட்ட தோல்விகள் ,இருந்தாலும் இந்த பதுளையை ஊரைவிட்டு வெளியில் குடும்பமாக உங்களைவிட்டுப் பிரிந்து போய் சம்பாதிக்க நினைக்காதவர் !

எத்தனை துயரத்திலும் ,உங்களுக்கு வறுமையின் நிறம் சிவப்பு என்ற பக்கத்தை புரட்டிக்காட்டாதவர் !

அவரை எப்படி எதிர்கொள்வாய் ?எல்லாவற்றையும் விட தன் குடும்பம் என்ற லயச்சிறையில் குலதெய்வம் போல கொழுந்துக்கூடை சுமக்கும் மம்மியின் மனசை எப்படி எதிர்கொள்வாய் ?

என்னைவிடு எனக்கு பின்புலம் இருக்கு நான் பெட்டிக்கடை வைத்து என்றாலும் ,பிழைத்துக்கொள்வேன்  போற இடத்தில் !

ஆனால் உன்னால் என்ன செய்ய முடியும் ?

நீண்ட பல தலைமுறை இந்த பூமியில் பரதேசிகள் போல வந்து பண்படுத்தினாலும் இந்த பூமியில் சொந்த மக்கள் இல்லை என்று பிரிவினை செய்த வரலாறு அதில் இருந்து பிரிந்து வந்து பொருளாதாரத்தில் முன்னேற நினைக்க முடியாதளவு விழிப்புணர்வு இங்கு பலருக்கு கிடைக்கவில்லை !

இதை அரசியல்வாதிகளும் செய்யவில்லை காரணம் தம் இருப்பு மலையக அரசியலில் சந்தி சிரிக்குமோ என்ற உட்பயம்!

அப்படியான சூழலில் வளந்த உன்னை
கொழும்புக்கு முதலில் தனிய அனுப்பும் போது உன் டாடி என்னிடம் என்ன சொன்னார் தெரியுமா?

என்மகன் எந்த நேரத்தில் வழிதவற நினைத்தாலும் அவனுக்கு நீ நிழல்கொடுக்கும் மரமாக இருந்து நல்வழி காட்டு !

நான் உன் பிடிவாதம் ,நேர் போக்கு , நடுநிலமை எல்லாம் அறிந்தவன் .உன்னையும் என் மூத்தவன் போல நினைக்கின்றேன் !

வயசுப்பொடியனுக்கு நான் அப்பாவாக இருந்து சொன்னால் சிலவிடயங்கள் புரியாது !


அவங்கட சுதந்திரத்தைப் பறிப்பதாக நினைப்பாங்க.

நல்ல நண்பர்கள் தான் வழிகாட்டவேண்டும் வீழ்ந்து போகாமல் இருக்க !அதன் அர்த்தம் என்ன மச்சான்?
தொடரும்......

6 comments :

MANO நாஞ்சில் மனோ said...

நல்ல வழிகாட்டி நண்பர்கள் இருக்கக் பெற்றவன் கொடுத்து வச்சவன்...! ஆனாலும் இந்த காதல் பொல்லாதது ஆச்சே...?!

திண்டுக்கல் தனபாலன் said...

/// காதலில் சுயநலம் என்றால் ஒருவனின்
காதல் தோற்கும்...! அதுவே பொதுநலம்
காதல் எனில் பிறருக்கு நீ ஆலமரம்...! ///

இவை சாதாரண வரிகளாக தோன்றவில்லை... அனுபவ வரிகள் (எனது வாழ்விலும்)...

வாழ்த்துக்கள்... தொடர்கிறேன்...

செங்கோவி said...

காதல்ல இறங்குனப்புறம் நண்பன் பேச்சு தலைக்குள் ஏறுமா?#பால் கோப்பி!

தனிமரம் said...

நல்ல வழிகாட்டி நண்பர்கள் இருக்கக் பெற்றவன் கொடுத்து வச்சவன்...! ஆனாலும் இந்த காதல் பொல்லாதது ஆச்சே...?!//வாங்க மனோ அண்ணாச்சி ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ.ம்ம் காதல் ஒரு பொல்லாத நிலைமாற்றம்! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் .

தனிமரம் said...

காதலில் சுயநலம் என்றால் ஒருவனின்
காதல் தோற்கும்...! அதுவே பொதுநலம்
காதல் எனில் பிறருக்கு நீ ஆலமரம்...! ///

இவை சாதாரண வரிகளாக தோன்றவில்லை... அனுபவ வரிகள் (எனது வாழ்விலும்)...

வாழ்த்துக்கள்... தொடர்கிறேன்.// நன்றி தனபாலன் சார் வருகைக்கும் வாழ்த்துக்கும்...

30 July 2013 18:55 Delete

தனிமரம் said...

காதல்ல இறங்குனப்புறம் நண்பன் பேச்சு தலைக்குள் ஏறுமா?#பால் கோப்பி!// வாங்க செங்கோவி ஐயா நலம் தானே?! காதல் வந்தாலே நண்பன் கதி நடுத்தெருதான்!ம்ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.