"பிடிவாதமும் பிடிப்பும் பிடித்தவர்களிடம்
பிறந்துவிட்டாள் பின் தொலையும்
பிறந்த நட்பு என்பது போல "
,மிரூனாவும் அழைப்பினைத் துண்டித்த பின் சேகர் அமைதியாக அடுத்த கிளாஸ் வைன் சுவைத்த படியே பாபுவுக்கு அழைப்பு எடுத்தான் .
அவனோ அந்த நேரம் நல்ல உறக்கத்தில் இருந்தான் கடமையில் இருந்து நித்திரைகொள்ளும் எல்லைக்காவல் ஆமிக்காரன் போல இடைவிடாத இசைபோல தொடர்ந்து ஒலித்த அழைப்பின் ஒலிகேட்டு கைபேசியின் அழைப்பை உள்வாங்கினான் தூக்கக் கலக்கத்தில் பாபு.
டேய் பாபு நான் சேகர் .
சொல்லு மச்சான் ?மிரூனாவோடு பேசினீயா ?
ம்ம் விளக்கமாக பேச முன் போனை வைத்துவிட்டாள்.
அப்படி என்ன தாண்டா உங்களுக்குள் பிரச்சனை ?
நான் நேரில் இல்லை நாட்டில் என்னால் வெளிநாட்டில் இருந்து தொலைபேசியிலும் ,ஸ்கைப்பிலும் ,தான் பேச முடியும் .
இங்க இருந்து எடுக்கும் தொலைபேசிக்கு செலவாகும் ஈரோவின் பெறுமதி புரியுமா உங்களுக்கு?
நாங்கள் நல்ல உடுப்பு, நல்ல சாப்பாடு வேண்டவே கணக்குப் பார்த்து மிச்சம் பிடித்துத்துத்தான் தொலைபேசி அட்டையே வாங்குகின்றோம் இலங்கைக்கு அழைப்பு எடுக்க.
அந்த தொலைபேசி அட்டையதில் இருக்கும் அழைப்பு மணித்துளிகள் எங்கள் வேர்வைத்துளிகள் மட்டுமல்ல ,ஆசைப்பட்டதை விட்டுக்கொடுத்த தியாகம் போலத்தான் .
இது எல்லாம் அழைப்பு எடுக்கவில்லை வெளிநாடுப்போன பின் பழையதை மறந்துவிட்டான் ,தலைக்கனம் என்று ஆயிரம் குத்தல்கள் சொல்லும் பலரிடம் ,முகநூலில் தூங்குகின்றான் எந்த நேரமும் என்று சொல்பவர்கள் சிலருக்கும் எங்க புரியும் அதில் செலவில்லாமல் செய்தி பகிரும் வித்தை ,விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் நல்லதும் இருக்கு, கெட்டதும் இருக்கு!
ஆனால் ஆரும் தொலைபேசி எடுத்தால் அன்பாக சுகமாக இருக்கின்றியா ?சாப்பிட்டாயா ?நல்லா தூங்கினியா ??என்று ஒரு வார்த்தை கேட்கமாட்டாங்கள் நம்ம நிலை யாருக்குடா புரியும்? உங்க சின்னச்சின்ன பிரச்சனைக்கு எல்லாம் நாம டென்சன் ஆகணும் ?
நீங்கள் நிம்மதியா தூங்குவீங்க இல்ல?
சாரிடா சேகர் .
"உண்ணை அதிகம் கடமைப்படுத்துகின்றேன் இல்ல "விடு மச்சான் இந்த பொம்பளைங்களே இப்படித்தான் !
ஏன் ?எதற்கு கோபிக்கின்றாங்க? என்று புரியுதே இல்லை !
அதுசரி அப்படிப்புரிந்தாள் அவன் ஞானி மச்சான் .
என்னடா சாப்பிட்டாய் என்ன வழமையான ரொட்டிதான் .
ஓ அப்படியா ?அந்த ரொட்டியின் சுவை இன்னும் வாயில் ஊறுகின்றது பனைமரத்தில் ஊரும் கள்ளைப்போல அதுவும் உங்க அம்மாவின் கைப்பக்குவம் தனித்துவம் மச்சான்.
சேகர் நீ என்ன சாப்பிட்டாய் ?
இன்னும் இல்ல மச்சான் இப்ப தான் வைன் குடிக்கின்றேன் !
குளிரூட்டியில் நேற்று வெச்ச குத்தரிச்சோறும் ,ஆட்டுக்கறியும் இருக்கு எடுத்து மிக்ரோனில் சூடாக்கினால் ரூபவாஹினியில் வரும் மகி நூடில்ஸ் விளம்பரம் போல சாப்பாடு தயார்.
என்ன வாழ்க்கை எனடா ?
இதுதான் மச்சி வெளிநாட்டு வாழ்க்கை .
இப்ப மிரூனாவுடன் ஐராங்கனி இருப்பாள் தானே ?
அவள் நம்பர் சொல்லு ?
ஐராங்கனி !!!!
வேண்டாம் மச்சான் சேகர் நீ திருப்பியும் அவள்கூட பேசுறது அழகில்ல !
அவளைப் பொறுத்தவரையில் நீயும் ஒரு தமிழன் துரோகிதான் !
தெரியும் மச்சான் .
அவளுக்கு என்னை முழுமையாக தெரியாது ?
நானும் சொல்லவிரும்பியது இல்லை .
நேரம் வரும் போது அவளுக்கு சொல்லுகின்றேன் என்று நானும் பாரிஸ் வந்து இந்த 2010 ஆண்டுடன் 7 வருடம் ஓடிவிட்டது அதை அவளுக்கு சொல்லவே இல்லை!
6 comments :
// விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் நல்லதும் இருக்கு, கெட்டதும் இருக்கு... //
தொடர்கிறேன்...
// நேரம் வரும் போது அவளுக்கு சொல்லுகின்றேன் என்று நானும் பாரிஸ் வந்து இந்த 2010 ஆண்டுடன் 7 வருடம் ஓடிவிட்டது அதை அவளுக்கு சொல்லவே இல்லை! //
சீக்கிரம் சொல்லுங்க..
ஏன்,எதற்குக் கோபிக்கிறாங்க என்று புரியுதே இல்ல மச்சான்!///புரிஞ்சா நீங்க முழு மனிசன்,ராசா!!!
விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் நல்லதும் இருக்கு, கெட்டதும் இருக்கு... //
தொடர்கிறேன்...
1 July 2013 17:36 Delete//நிஜம் தான் தனபாலன் சார் !நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.
நேரம் வரும் போது அவளுக்கு சொல்லுகின்றேன் என்று நானும் பாரிஸ் வந்து இந்த 2010 ஆண்டுடன் 7 வருடம் ஓடிவிட்டது அதை அவளுக்கு சொல்லவே இல்லை! //
சீக்கிரம் சொல்லுங்க..//ம்ம் முயற்ச்சிக்கின்றேன் நன்றி சங்கவி சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.
ஏன்,எதற்குக் கோபிக்கிறாங்க என்று புரியுதே இல்ல மச்சான்!///புரிஞ்சா நீங்க முழு மனிசன்,ராசா!!!
2 July 2013 09:15 Delete//அப்படியா யோகா ஐயா.ஹீஈஈஈ!நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.
Post a Comment