30 March 2014

இது கதைபோல ஒரு இளிப்பூ )))))))))-2

இங்கு முதல் -http://www.thanimaram.org/2014/03/blog-post.html
இனி........................

இப்படியே இருந்து
இளமையை வீணாக்காதே.
இந்தா குடி !


இலங்கையின் ஆட்சியில்
இந்தியாவும் ,இணைத்தலமையும்
இன்னும் சில அரேபிய நாடுகள் போலவும்
இறையாண்மை மீறி
இயக்குவது போலவும் தான்
இந்த நட்புக்களும்!
இடைவிடாது ஆலோசனை உள்குத்தில்
இவளைவிட்டாள் !


இல்லையா இன்னொருத்தி?
இந்தா பார்
இந்த நாட்டில் விசா என்ற முகவரி

இன்னும் வாழ
இங்கு ஒரு குடியிருப்பு
இல்லறத்திற்கு இது போதும்.

இனியும் என்ன ஜோசனை

இந்தக் காதலும் தாண்டிவாடா
இனவாத தேசத்தை கடந்தது போல
இல்லை எங்களை இத்தோடு
இலங்கையில் செம்பனி போல
இன்னும் தீர்ப்பு இல்லாமல்
இப்படியே இருந்து விடு!!

இனியும் நீ முடிவில்
இந்தியா போல மதில் மேல் பூனையாக
இருந்து கழுத்தறுக்காதே!

இதுதான் நம் நட்பின் கடைசி வருகை
இருந்து ஜோசி இனி
இணைப்பில் மட்டும் வருவோம்
இங்கும் பல வேலை இருக்கு !!
இலங்கைக்கு உறுத்தும் நாடுகடந்த அரசாங்கம் போல
இத்தோடு முடி !

இதய  சுயபுலம்பலை
இந்த சினேஹா போனால்
இன்னொரு இனியா
இப்போது கார்த்திகா
இல்லை இருக்கவே
இருக்கா கோவைசரளா.!

இல்லையோ ஹான்சிஹா பாட்டிபோல
இவங்களையும் இன்னும்
இயம்பவா இனிய நண்பனே.

இன்னொரு பாட்டு கேளு
இமையும் இசையில் !!!


தொடரும்....

8 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

ந்த முறை நல்லா இருக்கு...! என்னது ஹன்சி பாட்டியா...?

தனிமரம் said...

இந்த முறை நல்லா இருக்கு...! என்னது ஹன்சி பாட்டியா...?// வாங்க தனபாலன் சார்.வாழ்த்துக்கு நன்றி.என் கண்ணுக்கு பாட்டி போல!ஹீ நன்றி முதல் வருகைக்கு பரிசாக பால்க்கோப்பி குடிச்சிட்டுப்போங்க.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

அம்பாளடியாள் said...

லொள்ளு முத்திப் போச்சு :))))) அதனால கவிதைப் புயல் அடிக்குது போல ?..:)))

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

Unknown said...

நன்று!///ஹன்சி க்கு ரசிகர் மன்றம் இல்லாததால்............என்ன கொழுப்பா?

தனிமரம் said...

லொள்ளு முத்திப் போச்சு :))))) // ஏன் இந்த கொலவெறி!ஹீ

அதனால கவிதைப் புயல் அடிக்குது போல ?..:))) சும்மா ஒரு பொழுது போக்குத்தான்! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.அம்பாளடியாள்

தனிமரம் said...

அருமை//நன்றி கரந்தை ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்று!///ஹன்சி க்கு ரசிகர் மன்றம் இல்லாததால்............என்ன கொழுப்பா?//ஹீ சும்மா ஒரு ஜொல்லுத்தான் யோகா ஐயா.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.