24 March 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் -11

ஜீவனி கண்கள் காய்ந்து உலர்ந்த மிளகு போல .நெற்றி அன்று கொய்த ஏலம் போல .காது நேற்றுப் பறித்த சாதிக்காய் போல .முகம் அதிகாலை மலர்ந்த கொழுந்துத் தளீர் போல .கைகள் ஆணை வாழைப்பழம் போல .கால்கள் தாமரைக்கீரை போல ,.





இடையோ உலராத கறுவா பட்டை போல .!
பார்வையோ கொழுந்து பறிக்கும் பெண்களை குறுகுறு என்று நோக்கும் கங்காணி போல


,நேரில் பழகினால் அரசியல் ஓட்டுக்காக எப்போதும் ஏழை வீடு தேடும் இந்திராவின் பேரன் போல, பேச்சில் ஒரு திமிர் அது பண்டாரநாயக்கா வம்சத்தின் சமாதான தேவதை போல,

 இன்னும் சொல்ல ஆசை இந்த கடிதம் யார் கையில் சிக்குமோ எழுதிக் கிழிக்கும் பரீட்சைப் பேப்பர் போல !

அவளின் அடுத்த கட்டம் அப்பன் கட்சியில் மகளீர் அணித்தலைவி  என்று போய் அடுத்த தலைவி ஆகும் எண்ணம் இருக்கும் .

இவளுக்கு யார் ராசையா பிரவுதேவா போல ஆவர்கள் அராய்ச்சி செய்யும் உயர் தர இரண்டாம் ஆண்டு மாணவர்கள் பற்றி எல்லாம் உனக்கு தெரியுமா ?பரதன்!

எங்கள் பள்ளியில் மாணவத் தலைவியாக ஜீவனி போட்டியில் நின்றாள் ராஜீவுக்கு விழுந்த அனுதாப ஓட்டுப் போல மோக ஆசையில் ஓட்டுப்போடும் மாணவர்கள் அவள் பக்கம் தான் அதிகம் .

இது எல்லாம் விட்டுத் தள்ளு படிக்க வந்தவளிடம்!
நீ காதல் ஓலை நீட்டினால் உன்னை சேது படம் போல ஆக்க காத்திருக்கும் கல்லூரி மணவர்கள் பற்றி ஜோசித்தாயா ??

முன்னம் பலர் ஜீவனி மேல் மிட்டாய் மீது சுற்றும் ஈ போல ஜொல்லுவிட்டு சுற்றித் திரியும் காதல் காளைகள் கண்ட இடத்தில் உன் மேல் காதல் அசிட் வீசு வார்கள் !

அன்பாக மலையக வீதியில் ஆட்டோவில் அடிதடிக்கு வருவார்கள் மாலையில் கேப்டன் போல குடித்துவிட்டு .
வேண்டாம் மச்சான் அடங்கிப்போ !

 அதுவும் கடந்து காதல் என்றால்!
நீ  வடக்கில் இருந்து வந்தவன் இவனும்  புலிக்கு உளவாளி என்று பொறாமையில் இனவாத சந்தேக தீயை மூட்டினால் !

புலனாயவுத்துறை இருட்டறையில் முத்தமிட இருகரம் கொண்டு பள்ளிக்கும் வரும் மலையகத்தில்!

இது எல்லாம் நிஜமாக இப்படி நடந்தது !
இந்த ஊரில் என்று இலக்கியம் வரலாற்றில் படைக்க இந்த நாட்டில் சாத்தியம் இல்லை நண்பனே !

எதிர்காலம் என்ற பாதை இனவாத பூமியில் எப்படி இருக்குமோ ??

இந்த காதல் வலையில் போய் இன்னொரு உனக்காவே பிறந்தேன்  படம் போல ஆகிவிடாதே !!.அதில் சரி இந்திய சினிமாவுக்காக பாதி பொய் உன் வாழ்வில் நிஜம் சொல்ல ஒருத்தனும் உனக்கு வெளிநாட்டில் பேனா நட்பு இல்லை!!எந்தன் உயிரே பாடல் கேட்டாயா என்று மொக்கை எழுத!

இது எல்லாம் கேட்க மறுத்தால் இந்த நண்பன் ஈசனையும் இன்றோடு மறந்துவிடு குட் பாய் மை பிரெண்டு!


தொடரும்....

6 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

என்னவொரு வர்ணனை...!

இமா க்றிஸ் said...

நேசன்ன்ன்ன்... டாஷ்போட்ல வர்ணனையெல்லாம் தெரியவே மயக்கம் வாற மாதிரி இருந்துது. இங்க வந்து மிச்சத்தை வாசிக்க... இமா 'டொம்ம்ம்'. ;)) சுட்டாறின தண்ணி தெளிக்கவும் ஆளைக் காணோம். ;)

Unknown said...

இந்த உவமானங்களைப் பார்க்கும் போது,யார் படிக்காத பாமரன் என்று புரிகிறது,புலவரே!///இமா வுக்கு சுட்டாறின தண்ணி தெளிக்க பூசார்/அஞ்சு இங்க வர மாட்டினம்,ஹ!ஹ!!ஹா!!!

தனிமரம் said...

என்னவொரு வர்ணனை...!ஹீ நன்றி தனபாலன்சார் முதல் வருகைக்கு பால்க்கோப்பி குடித்துவிட்டுச் செல்லுங்கோ!

தனிமரம் said...

நேசன்ன்ன்ன்... டாஷ்போட்ல வர்ணனையெல்லாம் தெரியவே மயக்கம் வாற மாதிரி இருந்துது. இங்க வந்து மிச்சத்தை வாசிக்க... இமா 'டொம்ம்ம்'. ;)) சுட்டாறின தண்ணி தெளிக்கவும் ஆளைக் காணோம். ;)// ஆஹா இமா அக்காள் வருகைக்கு முதலில் நன்றி வர்ணனை அவ்வளவு கொலை வெறியா!ஹீ நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் இமா அக்காள்.

தனிமரம் said...

இந்த உவமானங்களைப் பார்க்கும் போது,யார் படிக்காத பாமரன் என்று புரிகிறது,புலவரே!//ஹீ யோகா ஐயா விட்டுக்கொடுக்க மாட்டாரே!தனிமரம் பாமரன் தான்!


/இமா வுக்கு சுட்டாறின தண்ணி தெளிக்க பூசார்/அஞ்சு இங்க வர மாட்டினம்,ஹ!ஹ!!ஹா!!!ஹீ !நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.