03 March 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்..-6

எதிர்பார்க்கின்ற விடயங்கள் எல்லாம் ஏனோ ?என் ஜீவன் பாடுது படத்தின் ஹீரோ நிலமை போலத்தான் இரண்டும் கெட்டான் நிலை .

இன்று இரவு பஜனைக்கு வருவான் என்று நினைத்த தனிமரம் வரவில்லை !எப்போதும் என்னை நன்கு அறிந்தவன் ,இப்போது எல்லாம் என்னை விட்டு அதிகம் விலகிச்செல்கின்றான் விஜயகாந் கட்சியில் இருந்து பிரிந்து செல்லும் சட்டமன்ற உறுப்பினர்கள் போல..!

இதில் கடந்தகால விடயங்களில் அவனின் கருத்துக்கள் என்னையும் பிழையாக நடக்க வழிவிட்டது என்று நினைக்கும் நிஷாவின் குற்றச்சாட்டு மோடிக்கு ஒரு குஜாராத் கலவரம் போல நம் நட்புக்கிடையில் ஒரு முக்கிய நெருடலாக இன்றும் இருப்பது !

எல்லாம் மாறும் உக்ரேன் அரசியல் போலத்தான் நம் ஆசைகளும் எண்ணங்களும் ..இதில் அவன் கணக்கு எப்படியோ?



 இன்று தனிமரம் வராதது பஜனை களைகட்டவில்லை. என்னோடு சேர்ந்து குரல் கொடுப்பதில் அவன் எப்போதும் பாடலுக்கு ஏற்ற பக்க வாத்தியம் போல குரலை நவீன இசைக்கருவிகள் கொன்றுவிடாமல் எப்போதும் மெல்லிய சாரலில் பஜனை ஜொலிக்கும் ஐயன் முகம் போல!

ஆனால் பாவி இன்று பாரிஸ் குசினியில்
பலருக்குச் சாப்பாடு!
பலவகை ஏற்பாடு என்று குருவுக்கு கூறிவிட்டான் .

கூப்பிட்டுப்பேச இப்போது ஐபோனும் இல்லை அவனிடத்தில் . எப்படியும் என் வரவை நம் குருநாதர் சொல்லி இருப்பார்

.சரி எப்படியும் யாத்திரையில் சந்திப்போம் .என்ன பரதன் சாமி முகத்தில் இப்ப எல்லாம் தேர்தலில் தோற்ற எதிர்க்கட்சிபோல ஒரு சோகம்?
அப்படி ஒன்றும் இல்லை ஜீவன் சாமி .

இன்று உங்க பிரென்டு வரவில்லை எனக்கும் ஒரு கை உடைந்தது போல என்று குருவும் சொன்னார் .

என்ன செய்வது வந்த இடத்தில் பிழைப்பு முக்கியமே ,?ஓம் அதுவும் சரி! யாத்திரை முடிய சிறிலங்கா போறன் ஜீவன் சாமி.

 ஏன் ,என்ன விடயம் ?பரதன் சொல்லக்கூடியது என்றால் சொல்லுங்க தணிக்கை இல்லாத செய்தி போல !

 இல்ல ஜீவன் சாமி இப்ப நாடு நல்லா இருக்காம். அதுதான் போய் வரலாம் என்று .

ஓ வெளிநாட்டுக்கு எல்லாம் இப்படித்தான் சொல்லுகின்றனர் ஆனா சுற்றுலாவிசாவில் போய் !சில்லறை அரசியலில் மாட்டி சீரழியாத பரதன் .


ஏற்கனவே கடந்தகாலம் எனக்கு எல்லாம் நல்ல பாடம் .
அப்படி ஏதும் துர்திஸ்ரமாக நடக்காது !முக்கியமான ஒரு முடிவுடன் போறன் !


முதலில் உங்களுக்குத்தான் சொல்லுகின்றேன் ஜீவன் .

காத்திருப்புக்களும் ,கவிதைகளும் ,வெறும் வார்த்தைகளில் வடிக்கும் கடிதம் போல அல்ல.  காதல் இதயம் நெருடி நெஞ்சு உருகும் உங்கள் கதை கொஞ்சம் படித்திருக்கின்றேன் பிளாக்கில் :))) !

குருவுக்கு கூட ஏதும் தெரியாது ஜீவன் சாமி !நிச்சயம் பரதன் சாமி நான் ஏதும் சொல்ல மாட்டன்  தைரியமாக இலங்கை போய் வாங்க சாமி.


யாத்திரையில் பலர் வருவார்கள் .நாங்கள் யாத்திரை முடிய வேகமாக ஐரோப்பா திரும்பிவிடுவோம் எப்போதும் போல .

சரி நான் உத்தரவு வாங்கிறன் பரதன் சாமி  .இப்ப இரவு லண்டனுக்கு வெளிக்கிட்டாள் தான் காலையில் போய்ச் சேர முடியும் !

தனிமரத்துக்கு சொல்லு பாரிஸ் வந்து தேடினதை ..நிச்சயம் ஜீவன் சாமி பத்திரமாக போங்க .

ஜீவனின் கார்  பாரிசில் இருந்து லண்டன் நோக்கி மும்பை எக்பிரஸ்போல வேகம் எடுத்தது !!

8 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

கடந்தகாலம் அனைவருக்கும் ஒரு நல்ல பாடம் தான்...

கரந்தை ஜெயக்குமார் said...

கடந்த காலம் ஓர் ஆசான்

அம்பாளடியாள் said...

நாட்டு நிலைமையைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாமல் ஏமாரும் சில
உறவுகளின் இலங்கைப் பயணம் மீண்டும் ஒரு முறை அதே கண்ணுக்குள் எட்டிப் பார்த்துச் சென்றது .இயல்பான எழுத்து நடையில் உருகும் பிரஞ்சுக் காதிலி பல உண்மைகளை உருக்கமாகச் சொல்லிச் செல்லும் விதம் அருமை !வாழ்த்துக்கள் சகோதரா மேலும் சிறப்பாகத் தொடரட்டும் .

Unknown said...

நல்லது.புலம்பெயர் தேசத்தில் கனவுலகில் வாழ்வோர்,ஒரு தடவை தானும் பிறந்த மண்ணைத் தரிசிக்க ஆவலுடன் காத்திருப்பது உண்மை தான்.ஆனால்.................................!

தனிமரம் said...

கடந்தகாலம் அனைவருக்கும் ஒரு நல்ல பாடம் தான்...//வாங்க தனபாலன் சார் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

கடந்த காலம் ஓர் ஆசான்//நிஜம் தான் கரந்தை ஐயா! நன்றி வருகைக்கும் வாக்கு இட்டமைக்கும்.

தனிமரம் said...

நாட்டு நிலைமையைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியாமல் ஏமாரும் சில
உறவுகளின் இலங்கைப் பயணம் மீண்டும் ஒரு முறை அதே கண்ணுக்குள் எட்டிப் பார்த்துச் சென்றது .இயல்பான எழுத்து நடையில் உருகும் பிரஞ்சுக் காதிலி பல உண்மைகளை உருக்கமாகச் சொல்லிச் செல்லும் விதம் அருமை !வாழ்த்துக்கள் சகோதரா மேலும் சிறப்பாகத் தொடரட்டும் .//நன்றி அம்பாளடியாள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நல்லது.புலம்பெயர் தேசத்தில் கனவுலகில் வாழ்வோர்,ஒரு தடவை தானும் பிறந்த மண்ணைத் தரிசிக்க ஆவலுடன் காத்திருப்பது உண்மை தான்.ஆனால்..................//ம்ம் நிஜம் தான் பார்ப்போம் யோகா ஐயா.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.