26 March 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் --12

கொள்கைப் பிரகண்டத்துக்கும் ,கொள்கை நடைமுறைக்கும் இருக்கும் இடை வெளி பற்றிய அரசியல் முரண்பாடு பற்றி பிரெஞ்சுப் புரட்சி அரசியல் விஞ்ஞானம் படிக்க நினைக்கும் உனக்கு !


அரசியல் பொய்ப்பின் ஆகுதியாவேன் அது மகன் என்றாலும் தேர் ஏற்றுவேன் என்ற  மனூநீதி சோழன் வரலாறு எல்லாம் முன்னம் படித்த நீ காதல் அறியாமல் போகலாம் !


நடை முறைச் சூழலில் அவர் ,அவர் விருப்பம் தான் ஐநாவில் எந்த வீட்டோ அதிகாரத்தையும் தாக்கும் ஆயுதம் போல என்றாலும் சொல்லுகின்றேன் நண்பா !


நீ தான் இந்த ஊரில் நான் அறிந்த நட்பு முதல்வன் உன்னை மீறி எந்தக்காலத்திலும் கட்சியை மீறி ஆதரவு கொடுக்கும் சட்டமன்ற உறுப்பினர் போலவோ?

 மாகாண  சபை உறுப்பினர் போலவோ நான் இல்லை !!


நான் என்பது அகங்காரமோ ?உயர்திணையோ இல்லை?


ஆனாலும் என் காதலுக்காக உன்னையோ ?
உன் குடும்பத்தையோ பலிகொடுக்கும் நட்பும் நான் இல்லை !


பரதன் எனக்கும் கொள்கை இருக்கு நானும் மரணங்கள் மலிந்த பூமியில் இருந்து வந்தவன்!

எனக்கு ஜீவனி  மீது ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு!அது காதலா ?இல்லைக் காமமா ?

இல்லை ஒரு இனக்கவர்ச்சி ஈர்ப்பா என்று இந்த நிமிடம் வரை என்னால் உணரமுடியவில்லை !


என் காதலை இன்னும் அவளிடம் சொல்லவில்லை !



அதுக்குள் கட்சியை மீறிப்போனால் அனாதை ஆகிவிடுவாய் என்பது போலவும் முகநூல் குழுமத்தை மீறிப்போனால் ஈழப்போராட்டாத்தில் எனது சாட்சியம் எழுதிய ஐய்ர் போலவும் தனிமரம் ஆகிவிடுவாய்  என்று பயமுறுத்தும் செயல் வேண்டாம் மச்சான் !


ஏன் தெரியுமா அவள் மனசில் யாரோ??அந்த காதல் லீலை நீ அறியாய்!



தொடரும்!..

4 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

உடனே சொல்ல விடாத இந்த தயக்கம் தான், பல பிரச்சனைகளுக்கும் காரணமாகிறது... தொடர்கிறேன்...

Unknown said...

எனக்கு ஜீவனி மீது ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு!அது காதலா ?இல்லைக் காமமா ?

இல்லை ஒரு இனக்கவர்ச்சி ஈர்ப்பா என்று இந்த நிமிடம் வரை என்னால் உணரமுடியவில்லை !
////சிந்திக்க வேண்டிய விடயம் தான்,அதற்காக ............................

தனிமரம் said...

உடனே சொல்ல விடாத இந்த தயக்கம் தான், பல பிரச்சனைகளுக்கும் காரணமாகிறது... தொடர்கிறேன்...//வாங்க தனபாலன் சார் முதல் வருகைக்கு பரிசாக ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

எனக்கு ஜீவனி மீது ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு!அது காதலா ?இல்லைக் காமமா ?

இல்லை ஒரு இனக்கவர்ச்சி ஈர்ப்பா என்று இந்த நிமிடம் வரை என்னால் உணரமுடியவில்லை !
////சிந்திக்க வேண்டிய விடயம் தான்,அதற்காக .....!!ம்ம் நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.