29 June 2014

அண்ணிக்கு வாழ்த்து!

பதிவுகளில் பின்னூட்டம் இட்டு தனிமரத்தின் நெஞ்சில் இடம்பிடிக்கும் அன்பான உறவுகள் பலரில் இன்று ஒரு பாட்டிக்கு இன்னொரு சிறப்பு நாள் .30/6/...

யார் அந்த பிரபல்யம் என்று நீங்கள் அங்கலாய்ப்பது புரிகின்றது :)))என்றும் பதினாறு வயதில் பவணி வரும் எங்கள் கலாப்பாட்டிக்குத்தான்  இன்று பிறந்தநாள்

.சிங்கையின் சிரிப்புத்திலகம் கலாப்பாட்டி என்று அன்புடன் நான் அழைத்தாலும் அண்ணி எப்போதும் உரிமையுடன் கறுப்பு பெலிட்டினால் கூட அடிக்கும் கலை தெரிந்த கவிதைத் தென்றல் இப்போது முகநூலிலும் .

என் வலையில் மலையகத்தில் முகம் தொலைந்தவன்  தொடரில்தான் முதன் முதலில் தனிமரத்தின் பக்கம் பார்த்துப் பேசினாங்க :))

ஹேமாவின் தளத்தில் தான் அறிமுகம் கலாப்பாட்டி  என்றாலும் யோகா ஐயாவையும் கலாய்க்கும்  அளவுக்கு எங்களுடன் நட்பிள் சிங்கப்பூர் காந்தி விலாஸ் உணவு போல அறுசுவை ராணி எங்கள் அன்பின் கலாப்பாட்டி அண்ணிக்கு கடல் கடந்து இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

தனிமரம் தோப்பின் வாழ்த்துச்செய்தி !நூறாண்டு காலம் நோய் நொடியின் வாழ்க!
கவிதையும் அறுசுவைச்சமையலையும்
கலைநயத்துடன் முகநூலில்
கலைத்தென்றல் என்று
கருத்துப்பகிரும் கார்மேக தென்றலே
கடல் கடந்து சிங்கையில் இருந்து
கருத்துரை பின்னூட்டத்தில்
கலாப்பாட்டி என்றும் நேசத்தில்
கலங்கரைவிளக்கம் போல
கடல்தாண்டி பாரிஸ் வந்தால்
கண்டிப்பாக எங்கள் மாளிகையில்
கலைத்தென்றல் கால்பதிக்க
காத்து இருக்கின்றோம் அன்புடன்.



கலாப்பாட்டி வருக வருக என்று!

 கலாப்பாட்டிக்கு  இன்று சிங்கை அம்மனின் ஆசியும்

கலாப்பாட்டியின் கைவண்ணத்தில் கோமதி விலாசில்

இன்று பிறந்தநாள்  கொண்டாட்டத்துக்கு உறவுகளுக்கு கலாப்பாட்டியின் கைவண்ணத்தில் கோமதி விலாசில் தேடியும் கிடைக்காத
சுவையூட்டி இது:)))




9 comments :

Angel said...

நேசன் ..
வணக்கம்
அருமையான வாழ்த்து மடல் கலா அவர்களுக்கு
உங்க பக்கத்தில்தான் ஒருமுறை இருமலுக்கு கைவைத்தியம் அப்புறம் ஆப்பம் செய்முறை பின்னூட்டத்தில் பகிர்ந்தாங்க :)
அப்போ எல்லாம் இங்கே ஒரே அட்டகாச கும்மி !

Angel said...

இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் கலா அண்ணி :)

Yaathoramani.blogspot.com said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

கரந்தை ஜெயக்குமார் said...

மனமார்ந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்

பால கணேஷ் said...

கலகலன்னு எப்பவும் சிரிச்சுக்கிட்டே சந்தோஷமா இருக்க கலாக்காவுக்கு இந்த இனிய நாளில் மகிழ்வுடன் என் நல்வாழ்த்துகளை தெரிவிச்சுக்கறேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

Unknown said...

முக நூலில் இல்லாத போதும்,என் அன்பு மச்சினிச்சிக்கு பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல களம் அமைத்துக் கொடுத்த நேசருக்கு முதற்கண்,நன்றி!/////இன்று போல் என்றென்றும்,சகல நலன்களும் பெற்று இனிதே வாழ்ந்திட மச்சினிச்சிக்கு வாழ்த்துக்கள்,இறைவன் அருள் கொண்டு!

unmaiyanavan said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள். அதை நீங்கள் சொன்ன விதம் அருமை

kingraj said...

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.