12 July 2014

சின்னவன் வாழ்த்துக்கள்

சிற்பியே உன்னைச்செதுக்கின்றேன்!
சின்ன வயதில் படித்தேன் உன்
சிறு நெருப்பு.  சில நேரம் உன் பாடல்
சில் என்று சீண்டியது!
சில நாவல்  வரிசையில் தண்ணீர் தேசம்
சிற்பியே உன்னைச்செதுக்கின்றேன்
சிவஞாணம் சிந்தையில் இன்றும்!

சிரிப்பில் நீ கிழிந்த பனையோலை
சினிமா பாட்டில் வில்லோடு வா நிலாவே
சிகரமாக பலபாடல் என் ஜன்னலின் வெளியே
சீடியில் இன்றும் நீ வானம் தோட்டுவிடும் தூரம்
சிலநேரம் உன் கோபம் பிடிக்காது என்றாலும்
சினிமாவில் நீயும் ஒரு சிங்கம் தான்!
சினிமா தாண்டி கிராம்த்துக்கருவாச்சி
சிகரங்களை நோக்கி அதன் பின்
சிந்திய எல்லா நதியிலும் என் ஓடம்
சிறப்பில் பல பாடல் சிந்த இங்கு
சிலோன் வானொலி போல இல்லை
சிலோன் தாண்டிய இதுவரை நான் உங்கள் போல இல்லை !
சின்னவன் என் வாழ்த்து
சிறப்புடன் இன்னும் சில ஆயிரம்
சினிமா பாடல் சிந்தவேண்டும் வைரமுத்து ஐயாவே!
சிறப்பான இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

சினிமாவில் இந்த வரி எப்பிடிப் பிடித்தாய்
சிந்திக்கின்றேன் இன்றுநானும்!


10 comments :

Yaathoramani.blogspot.com said...

கவியரசருக்கு அற்புதமான கவி மூலம்
சொல்லிய பிறந்த நாள் வாழ்த்து
அருமையிலும் அருமை
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 1

கரந்தை ஜெயக்குமார் said...

கவியரசருக்கு
அருமை
கவி படைத்தீர்
நன்றி நண்பரே
தம 2

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கவி சிறப்பு...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கவிப் பேரரசுக்கு அற்புதமான கவிதார்ப்பணம். கண்ணதாசனுக்குப் பின் தமிழ் உள்ளங்களில் நிலையான இடம் பிடித்த கவிஞர் அவர்.காலம் அவர் பெருமையை சொல்லும் .

முன்பு அவர்பற்றி எழுதிய கவிதை
கவிதைச் சூரியன்-வைரமுத்து

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
வாழ்த்துக்கவி கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
த.ம 4வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Yarlpavanan said...

வாழ்த்து
சிறப்பாக அமைந்திருக்கிறது

kingraj said...

உங்களின் வாழ்த்துக்களுடனும் எங்கள் வாழ்த்துக்களும்.

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country said...

வலைச்சரத்தில் மைதிலி கஸ்தூரி ரெங்கன் தங்களைப் பற்றி விவாதிக்கிறார்.வாழ்த்துக்கள்.
www.ponnibuddha.blogspot.in
www.drbjambulingam.blogspot.in