19 September 2014

இளவரசிக்கு வாழ்த்துக்கள்.

கலாய்ப்பதில் கருவாச்சி
 கனிவானவள்
 கற்றுத்தேர்ந்தவள் 

கல்லாதவன் தனிமரம் என்னையும்
 கபடம் இல்லாத
 கதையுடன் அண்ணா என்பாள்!
கடல்கடந்து.
 கவிதையும். கதையும். 
கலந்து எழுதுவதில் என் தங்கை 
கலையும் ஒரு வித்தகி.
http://www.thanimaram.org/2012/04/blog-post_19.html


காகம் போல பறப்பாள் 
கடும் பணி என்று!
 கானத நேரத்தில்
 கடல்கடந்து
 கடிதம் போல கொசுவலையில்
 கருவாச்சி ஏங்கே?? என்றால் 
கருக்குமட்டை எடுத்து வருவாள்!
 கதையில் எத்தனை வழு.
 கணனியில் திருத்தவில்லையோ ??
கடும் தூக்கமோ ?,
கனவில் சினேஹா நினைப்போ??
 கலாப்பாட்டியின்
 கறுப்பு பட்டி காத்து இருக்கு
 கத்தி போல என்றெல்லாம்
 கடிந்து பேசினாலும், 
கங்கை போல பாசத்தில் தங்கை
 கலையும் ஒரு ஆலமரம் .


! கனிதரும் தனிமரம் இவன் 
கண்ணியமான கதை 
கட்டாயம் எழுதணும்
 கற்றவர் சபையில். தனிமரமும்
 கற்றவன் என்று சொல்லணும் என்று
 கதையளப்பாள் முகநூலில்!


 கதை என்று தொடங்கி
 கனியின் முடிவு(நிரோஷாவின்) 
கடைசிவரை சொல்லாமல்
 கருவாச்சி காணவில்லை

 கதையின் முடிவு!
 கண்ணீரில் உருகும் காதலியோ?
 கட்டையில் போனானோ 
காத்திருந்த மாமன்? என்றெல்லாம் 
கற்பனை சிறகடிக்கு! 
கருவாச்சி தொடர் முடிக்காவிட்டாள்.
http://kalaicm.blogspot.fr/2014/05/7.html

கட்டாயம் கருக்குமட்டை 
கடல்கடந்து வந்துவிடும்
 கலைக்கு இன்று கடக்கின்றது
 இன்னொரு ஆயுள்.


! கடல்கடந்து தங்கையை 
கருவாச்சியை அன்போடு
 வாழ்த்துக்கின்றேன் .


எல்லாச்செல்வமும் பெற்று
 இனிதே வாழ்க! 


என்றும் அன்புடன் தனிமரம் ! 
எங்கே கலைக்கு பாட்டு இல்லையா...?,..
என் தேர்வில் இது-

11 comments :

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நேசன்...
தங்கைக்கொரு கீதம் படைத்தீர்கள்...
நலமோடும் வளமோடும்
எந்நாளும் பொன்னாள் கண்டு
இன்புற்று வாழ்ந்திட
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்கைக்கு...

பால கணேஷ் said...

எல்லா வளங்களையும் பெற்று என்றும் மகிழ்வுடன் வாழ்ந்திட என் இனிய இளவரசியை மகிழ்வுடன் வாழ்த்துகிறேன். (எனக்குத்தான் கவிதை எழுத வராதே. .‘ஹி... ஹி... ஹி...)

அம்பாளடியாள் said...

இனியயென பேசி மகிழ்ந்திடும் பெண்ணை
இறைவனும் வாழ்த்திட இன்பமே சூழ்க !கனியென விளைந்த கவிதை போல் நாளும்கண்டிடும் வாழ் நாள் இனித்திட வாழ்கவே !

நூறு வருஷம் நோய்நொடி இல்லாமல் மகிழ்வாய்
வாழ அன்பு வாழ்த்துக்கள் தோழிக்கு !உங்களுக்கும்
என் வாழ்த்துக்கள் சகோ .

இராஜராஜேஸ்வரி said...

கடல்கடந்து தங்கையை
கருவாச்சியை அன்போடு
வாழ்த்துக்கின்றேன் .


எல்லாச்செல்வமும் பெற்று
இனிதே வாழ்க!

Yarlpavanan said...

எல்லாச் செல்வமும் பெற்று
நீடூழி வாழ
நானும் வாழ்த்துகிறேன்!

kingraj said...

இனிய நன்நாள் வாழ்த்துக்கள்

இளமதி said...

கலையரசிக்கு உளமார்ந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்!

தனிமரம் said...

வாழ்த்தியோர்களுக்கு தங்கையின் சார்பிள் நன்றிகள்.

Anonymous said...

அண்ணா அழகிய கவிதையில் உங்க மனசுல இருக்குறத சொல்லிட்டிங்க ....வாழ்த்துக்கும் அன்புக்கும் என்ன சொல்ல ...கண்ணீர் தான் அண்ணா சில நேரம் முன் ஜென்ம தொடரோ ...

Anonymous said...

அண்ணா அழகிய கவிதையில் உங்க மனசுல இருக்குறத சொல்லிட்டிங்க ....வாழ்த்துக்கும் அன்புக்கும் என்ன சொல்ல ...கண்ணீர் தான் அண்ணா சில நேரம் முன் ஜென்ம தொடரோ ...

Anonymous said...

வாழ்த்திய அனைவருக்கும் என் அன்பு நன்றிகள்