20 September 2014

வாழ்த்துவோம் வாரீர்............

வலையில் வரும் பல வாசிப்பில்
வசந்தமண்டபம் வாசகன் யான்!
http://ilavenirkaalam.blogspot.fr/2014/09/blog-post.html
 வரிக்கு வரி வடிவான தமிழின்பால்
 வார்த்தைக்கோர்வையில் பாவில்
 வசியம் வைக்கும்
 வள்ளல் வாழ்வது பல தேசங்களில்
 வாழ்வாதாரத்தில் !



வாசகனாக பலரை 
வாழ்த்துவதிலும் ,பலகூத்துக்கட்டும்
 வடிவான அன்பர் என்பேன் மகியை. !


வாடும் போதெல்லாம் 
வாழ்க்கையின் பாதையில் 
வாடாதே வளர்பிறை மரமே 
வாருங்கள் தனிமரம்
 வலைப்பக்கம் என்று
 வஞ்சனையில்லாமல்
 வருடிக்கொடுக்கும் வாழ்த்துப்பாக்கள் பல
 வந்துகொண்டே வரும்.
 வழியெங்கும் வலைவீசி. 
வாயில்க்காப்போன் போல நட்பில் 
வாஞ்சிநாதன் போல 
வற்றாத தென்மாங்கு பாடும் மகேந்திரன் 
வாழ்வில் இன்று வருடம் ஒன்று 21/9/..
 வயதாககூடினாலும்




!
 வாலிபன் போல வருகிட்டு
 வளித்துச்சீவிய தலைமுடியும், 
வாசணைத்திருநீறும் 
வஞ்சியரை வம்பளக்க வைக்கும்
 வண்ணத்தில் மகியின்
 வண்ணமுகம் அதில் இல்லை
 வஞ்சினம்.


. வாழ்த்த வயதில்லை அண்ணா என்பதால்!
 வணங்கி நிற்கின்றேன் 
வழிகாட்டும் அன்பில் 
வழிப்போக்கன் என் 
வாழ்த்துக்களை .
வாசம்வீசும் தனிமரத்தில்
 வாழைநார் கொண்டு 
வாழ்த்துப்பாவாக வழுக்கில்லாமல் 
வழியனுப்புகின்றேன்!!



 வரும் வருடத்தில்
 வழிகிடைத்தால் சந்திப்போம் ! 

13 comments :

மகேந்திரன் said...

சொல்ல வார்த்தையில்லை சகோதரர் நேசன்...
விக்கித்து நிற்கிறேன்...
வெறும் வழியில் சென்றுகொண்டிருந்த எனக்கு
வலைப்பூ தந்த சொந்தங்கள் ஏராளம்...
அப் பாசமிகு அன்புச் சகோதரர்களுள் நீங்கள்
முக்கியமானவர்...
உங்களின் பதிவுகளில் மூழ்கி தொலைந்து போனவன் நான்..
எனக்கே எனக்கான வாழ்த்து பாடலை படிக்கையில்
மனம் கொண்டாடுகிறது...
எனையாளும் இறைவா...
என் இச்சொந்தங்களை எந்நாளும்
என்னுடன் இருக்க அருள்புரிவாய்...
===
என் சிரம் தாழ்த்தி ஏற்கிறேன் உங்கள் வாழ்த்து பாடலை நேசன்...
நெஞ்சார்ந்த நன்றிகள் பல...

Yarlpavanan said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

பால கணேஷ் said...

என் இனிய நண்பர் கவிஞர் மகேந்திரனுக்கு மிகமிக மகிழ்வோடு என் இதயம் நிறைந்த இனிய பிறந்ததின நல்வாழ்த்துகள்.

கரந்தை ஜெயக்குமார் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இளமதி said...

இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள் சகோதரர் மகேந்திரன்!

கற்ற கல்வி கமழ்ந்திடவும்
கலைகள் வாழ்வில் உயர்ந்திடவும்
உற்ற நண்பர் உறவுகளும்
உயிராய் உன்னோ டிருந்திடவும்
பெற்ற பேறும் கீர்த்தியெல்லாம்
பெருகி மேலும் ஓங்கிடவும்
சிற்ச பையோன் சிவனருளால்
சிறந்து வாழ்க மகேந்திரனே!

வாழ்க வளமுடன்!

Anonymous said...

''..வழியெங்கும் வலைவீசி.
வாயில்க்காப்போன் போல நட்பில்
வாஞ்சிநாதன் போல
வற்றாத தென்மாங்கு பாடும் மகேந்திரன்
வாழ்வில் இன்று வருடம் ஒன்று 21/9/..
வயதாககூடி vaalka valamudan Mahi....
Vetha. Langathilakam.

Anonymous said...

இனிய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா .....

நேசன் அண்ணா வின் அன்புகளில் ஒன்று மகி அண்ணா ....

முத்தரசு said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

சீராளன் said...

பாடி மகிழும் பண்பாளன்
பாரில் பூத்த நன்நாளாம்
கோடிப் பூக்கள் வாசனையை
கொட்டிக் கொடுக்கும் நட்புகளே
மாடி மனைகள் மகிழ்செல்வம்
மகியை நாளும் சேர்ந்திருக்க
தேடி வந்து வாழ்த்துங்கள்
தெய்வ அருளே கிடைக்கட்டும் !

நேயம் மிக்க நெறியாளன்
நேசன் வலையாம் தனிமரத்தில்
காயம் மகிழத் தந்திட்ட
கனியாய் வாழ்த்தில் ஒன்றாவோம்
ஆயர் கூட்டம் அன்பொழுக
அணைத்து வளர்த்த மாதவனாம்
மாயக் கண்ணன் அருளாலே
மகிழ்வே என்றும் கொள்ளட்டும் !

மூலம் எங்கள் முத்தமிழில்
முறையே கற்று வலைப்பூவில்
தாலம் இனிக்கும் சொற்சுவைகள்
தந்தே பாடும் மகேந்திரனை
சீலம் போற்றும் இந்நாளில்
சிறக்கும் வாழ்க்கை பெற்றிடவே
ஆலம் பாலை உண்டவரின்
அடிகள் தொட்டு வணங்குகிறேன் !

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் மகி
இன்றுபோல் என்றும் மகிழ்ந்திருக்க நெஞ்சார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்

அம்பாளடியாள் said...

என் அன்புச் சகோதரனுக்கு மீண்டும் மீண்டும் என் இனிய பிறந்த நாள்
வாழ்த்துக்கள் !

தமிழ்வாசி பிரகாஷ் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவரே....

மகேந்திரன் said...

எனதன்பு சொந்தங்களே..
மகிழ்ச்சியில் திளைக்கிறேன்...
என் மீது நீங்கள் கொண்ட அன்புக்கு
என் வாழ்நாள் முழுதும் நன்றிகள் சொல்லிக்கொண்டே
இருந்தாலும் தீராது...
வழிதோறும் வழிதோறும்
வாழ்நாள் முழுதும் உங்கள் அன்பும்
அரவணைப்பும் எனக்கு கிடைத்திட
இறைவனிடம் என் பிரார்த்தனைகள்...
அன்பன்
மகேந்திரன்

Iniya said...

கால தாமதத்திற்கு வருந்துகிறேன்.
இருந்தும் உம்மை வாழ்த்துகிறேன்.

வரும் நாளெல்லாம் வளமாக
உடலும் உளமும் நலமாக-மேலும்
நல்ல பதிவுகள் வலமும் இடமாக
வார்ப்பாய் என்றும் சிலையாக ...!