17 February 2015

முகம் காண ஆசையுடன் --1

வாழ்வில் தனிமனிதன் ஒருவரின் வெற்றி என்பது தனக்கு என ஒரு தொழில் .தனக்கென ஒரு வாழ்க்கை .தனக்கொரு குடும்பம் அதன் வழியாக தனக்கொரு வம்சம் இப்படித்தான் வாழவேண்டும் என்ற ஒரு சமூகம் முன்னம் வகித்த காலமாற்றம் புரியாத ஒரு கட்டுப்பாடு எல்லாம் ஈழம் கேட்டு ஏதிலியானவர்களுக்கு ஓத்து வருமா?,


 ஒரு நாட்டில் ஏதோ பிறந்து காலச்சூழ்நிலையில் புலம்பெயர்ந்து;  அந்த நாட்டை விட்டுப்பிரிந்து அகதி என்ற கப்பலில் ஈழம் கடந்துபோனவர்கள் எல்லாம் இந்திரலோகத்தில் ராஜ வம்சம் போல வாழ்பவர்கள் அல்ல !

அடுத்த வேளை என்னாகும் தம்நிலை  என்ன கடன் கட்ட வேண்டும் என்ன செலவு இருக்கும் என்று எல்லாம் சிந்திக்க மாட்டோம் அது போலத்தான் இலங்கைக்கு தோட்டத் தொழிலாளியாக வந்தவர்களின் முதல்த்தலைமுறை வாழ்க்கை  பற்றி பேசாமல் அவர்களை இன்றும் கள்ளத்தோணி என்று பேசும் நம் மூத்த தலைமுறை எல்லாம் இதே ஐரோப்பிய தேசம் எங்கும் அகதி என்ற முகவரியில் வந்த தனிக்கதை எல்லாம் ஏன் வெளியில் சொல்லவில்லை?,

 இது ஒரு கெளரவமா இல்லை யாழ் வெள்ளை வேட்டி அரசியல் சாதுரியமா ?,நாம் இழந்தவை என்ன உணர்வுகளும் இடமும் ;உயிர்களும்; ஆட்சிக்கதிரைகளும் என்று மட்டுமா ?,

இன்னும் மற்றவர்களுக்கு சொல்லப்போறம்!!


 ஒரு நாடு விட்டு வந்து இன்னொரு நாட்டில் நாம் முகவரி தேடுவது என்பது என்ன சினிமாவில் வெற்றிக்கொடிகட்டு என்று ஒரு பாட்டில் எல்லாசுகமும் பெறுவதா?,

 அதுக்கு வந்தேறு நாட்டின் சட்டங்கள் எல்லாம் ஆசியா போல காசுகொடுத்தால் வளைந்து கொடுக்குமா??


  அப்படி என்றால் சிறிமா ஆட்சியில் நாடுகடந்தோர் இன்னும் இந்திய கேரள எல்லை வண்டிப்பெரியாரில் வாழும் அவலம் எல்லாம்  !  இணையத்தில் எழுத முடியுமா?,


 அப்படி எழுதினாலும் எத்தனைபேர் டாலர்தேசம் போல படிப்பார்கள் என்ற சிந்தனையில் ஐரோப்பிய  நாட்டின் குளிர்காலப்பொழுதில்  சிந்தனையோடு பாரிஸ் வீதியில் அதிகாலை துப்பரவு வேலை முடிந்து அடுத்த பணிக்கு போகமுன் ஆலயம் செல்லும் வேகத்தில் ஓடும் அசுரன் ஒரு பதிவாளர் என்று  தமிழ்ப்பதிவாளர் சிலர் அறிந்தாலும்!


 நடிகன் வலைப்பதிவின் அசுரன் சிலநாட்களாக பதிவு எழுதவில்லை ??ஏன் அவன் போலி முகமான முகநூல் மலைமகன் முகநூலும் முடக்கியிருக்கும் நோக்கம்!

 அசுரன் ஆன்மீகம் என்ற தனிப்பாதையில் போவது சில நட்புக்கள் அறியாத ஒன்று. அது போல அக்கரையான இலங்கையில்   இருந்து ஒரு பதிவாளினி அதிகாலை பனிக்குளிரையும் அறியாது அவன் தனியுடமையான கைபேசிக்கு அழைப்பு எடுத்தால் !

அவள் பெயர் நிவேதா என்று அசுரன் கையில் இன்னொரு உறுப்பு போல இருக்கும் ஐபோன் காட்சிப்படுத்தியது.

 காதினை இனவாத இராணுவம் பிடித்து இழுப்பதைவிட மோசமாக பனிக்குளிர் காதை வருடியது கைபேசியை எடுப்பதா,? இல்லையா என்ற மனப்போராட்டத்தினை இந்தியா வரும் இலங்கை ஜானாதிபதிக்கு கறுப்புக்கொடி காட்டு`ம் அரசியல்வாதிகள் போல அல்லாமல் தொடர்பினை உள்வாங்கினான் அசுரன் .

ஹலோ நிவேதா சொல்லுங்க இப்ப அவசரமாகஒரு முக்கிய வேளையாக குருவைத்தேடி  கோயில் போறன்.

 இன்னும் சில நேரத்தில் நானே அழைக்கின்றேன் ஸ்கைப் ஊடாக ! சரி காத்து இருக்கின்றேன்  அசுரன்!!






 வானொலியில் அடுத்த பாட்டுக்கு காத்து இருக்கும் நேயர் போல.

முகம் காண   ஆசையுடன்   தொடரும்.......

 அறிமுகம் இங்கே---http://www.thanimaram.org/2015/02/blog-post_1.html..

10 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

வானொலியில் அடுத்தப் பாட்டிற்குக் காத்திருக்கும் நேயர் போல, நானும் காத்திருக்கிறேன் நண்பரே ,அடுத்த பதிவிற்கு
தம 2

திண்டுக்கல் தனபாலன் said...

டாலர் தேசம் போல.... சிறப்பித்து விட்டீர்கள்...

ரசிக்கும் பாடல்கள்...

காத்திருக்கிறேன்...

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அண்ணா

பதிவை அசத்தி விட்டீர்கள் நன்றாக சொல்லியுள்ளீர்கள் அடுத்த பதிவுக்காக காத்திருக்கேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான உவமைகளுடன் தொடர் ரசிக்க வைக்கிறது! வானொலியில் அடுத்த பாடலை கேட்க காத்திருக்கும் நேயர் போல! என்ற உவமை ரசிக்க வைத்தது! நன்றி!

தனிமரம் said...

வானொலியில் அடுத்தப் பாட்டிற்குக் காத்திருக்கும் நேயர் போல, நானும் காத்திருக்கிறேன் நண்பரே ,அடுத்த பதிவிற்கு
தம 2//நன்றி கரந்தை ஐயா முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

டாலர் தேசம் போல.... சிறப்பித்து விட்டீர்கள்...

ரசிக்கும் பாடல்கள்...

காத்திருக்கிறேன்...//நன்றி தனபாலன்சார் வருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டுக்கும்.

தனிமரம் said...

வணக்கம்
அண்ணா

பதிவை அசத்தி விட்டீர்கள் நன்றாக சொல்லியுள்ளீர்கள் அடுத்த பதிவுக்காக காத்திருக்கேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-//நன்றி ரூபன் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

சிறப்பான உவமைகளுடன் தொடர் ரசிக்க வைக்கிறது! வானொலியில் அடுத்த பாடலை கேட்க காத்திருக்கும் நேயர் போல! என்ற உவமை ரசிக்க வைத்தது! நன்றி!//வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி சுரேஸ்.

Anonymous said...

ஓ.கே முதலாவது வாசித்திட்டேன் அடுத்தது வாசிக்க ஆசை....
புரட்டுகிறேன்.
வேதா. இலங்காதிலகம்.

Thulasidharan V Thillaiakathu said...

எப்படி விடுபட்டது என்று தெரியவில்லை.....

பாடல்கள் ஆஹா! பதிவில் உவமைகள் அழகு....இதோ ஒவ்வொன்றாகத்..தொடர்கின்றோம்...வாழ்த்துக்கள்....