04 February 2015

படித்ததில் பிடித்தது!!!!!!!

இணையத்தின் வருகை வாசிப்பை மேம்படுத்துகின்றதா? சீரழிக்கின்றதா ,என்ற விவாதம் சூடாக வரும் காலத்தில் .



இணையத்தில் எழுதுவோரும் வேகம் அதிகரிப்பது சந்தோஸசம் என்றாலும்  அவர்களின் உழைப்பு நிலைத்து இணையத்தில் நிற்கின்றதா?, இல்லை வந்தார்கள், வென்றார்கள் ,சென்றார்கள்,  என்றுதான்  அமையப்போகின்றதா ?,என்ற கேள்வி மனதில் . !


ஆனாலும் இன்று வலையில் எழுதும் பலர் தம் எழுத்தினை மின்நூல் வடிவில் அடுத்த கட்ட வளர்ச்சி நோக்கி நகர்த்தும் செயலை இணையம் வரவேற்கின்றதை பாராட்ட வேண்டும்.




 அந்த வகையில்  வலையில் மூத்த படைப்பாளி ஒருவர்தான் தேவியர் இல்லம் ஜோதிஜி .அவரின் 5 படைப்பு இதுவாகும்.



அவரின் பல பதிவுகள் அவரின் படைப்பாற்றலை, வாசிப்பு அனுபவத்தை ,வாழ்வியல் அனுபவத்தை  ,இணையத்தில் கொட்டிச்செதுக்கி வைத்து இருக்கின்றார்.


 அதனை தொகுத்து இப்போது புதிய எழுச்சியுடன் மின்நூல்களாக கச்சியதமாக தொகுத்து வருவதை அந்த மின்நூல்களை இணையத்தில் பரவ விட்ட நிலையை வரவேற்கும் பலரில் தனிமரமும் ஒருவன்.


  காலத்துரிதகதியில் இணையத்தின் துணையுடன்  பகிர்வை வாசிக்கும் வாசகர்கள் பலர் .

கால ஓட்டத்தில் மனதை ஒருகணம் நின்று நிதானித்து .அழுது. புலம்பி ஆற்றாமையில் .வெதும்பி. புழுகும் நிலையை வாசகர்கள்.உள்வாங்குவார்கள் எனபதை வார்த்தையில் சொல்லத்தான் வேண்டுமா.?,

 ஜோதிஜி சில மின்நூல்களை முன்னர் வெளியீடு செய்து இருந்தாலும் என்னைக் கவர்ந்தது வாசிக்கத்தூண்டிய நூல் பயத்தோடு வாழப்பழகிக்கொள்!


 .331 பக்கம் கொண்ட இன்நூலினை பார்த்தும் படிக்கத்தோன்றும் முகப்பு அட்டைப்படம்  ஒரு புறம் என்றாலும் இன்று திருப்பூர் ஜோதிஜி மீது பலரின் சிந்தனை வர இவரின் கடின உழைப்பு பாராட்ட வேண்டியது தனிப்பதிவாக எழுத வேண்டியது.
 எடுத்தவுடன் ஏனோ முழுவதையும் வாசிக்க வேண்டும் என்ற ஆதங்கத்தை தந்தாலும் !என் தனிப்பட்ட பொருளாதார ;ஆன்மீகசூழல் கொஞ்சம் கொஞ்சமாக வாசிக்க வைத்தாலும்!


 ஓவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு பாடத்தை படிக்கும் அனுபவத்தை இன்நூல்  தந்தது வஞ்சகப்புகழ்ச்சி அல்ல !காரணம் ஜோதிஜிக்கு  தனிமரம் ஒரு பதிவரா ?,என்று கூட அறிந்து இருக்கமாட்டார்.


அவரின் பள்ளிக்காலம் முதல் பதவி வரை அவரின் எண்ணதை, நெகிழ்ச்சியை, அனுபவ வழிகாட்டுதலை, தன்சமூக  கோபத்தினை .சமூகம் நோக்கி திருப்பி ஒரு காட்டாறு போல ஓடவிட்டு இருப்பதை இன்நூல் வாசிப்பில் உணர முடியும் .


திருப்பூர் உலகின் நிஜமுகத்தை இதில் அறியமுடிவதுடன் ஜோதிஜின் அனுபவத்தையும், கால ஓட்டத்தில் திறந்த மனதுடன்  . தமிழ் வலையுலகுக்கு அறிமுகமான நிலைமுதல் திரட்டியின் செயல்கள் வரை அவர் இணையத்தில் செலவிட்டு பெற்ற அனுபவத்தையும் ,நட்பு வட்டத்தையும் இன்நூலில் வாசிப்பின் ஊடே அறிக முடிகின்றது. அவரின் நூலினை தரயிறக்கம் செய்ய இங்கே-.http://freetamilebooks.com/ebooks/live-with-fear/


 படித்த நேரத்தில் இணையமும் அனுபவமும் ஒவ்வொருத்தரின் குணத்தினையும், சூழலையும் இங்கே சிலர்  கேலியும் ,ஆட்சிசார்பு நிலையையும்  குத்தி ஓதுக்க நினைத்தாலும் !ஒவ்வொருத்தர் மனவுறுதிக்கு திரட்டியும் அதன் செயல்ப்பாடும், ஒருவரின் திறமைக்கு மூடுதிரை போடமுடியாது என்பதே வரலாறு !

நீங்களும் வாசியுங்கள்  மீண்டும் அந்த கிராமத்தில் வாழ்ந்து கொஞ்சம் இன்றைய  நாகரிக உலகை மறப்போம்!ம்ம்ம் பயத்தோடு வாழப்பழகிக்கொள் மின்நூலில் ஒரு பதிவு தனிமரம் பற்றியும் பேசுகின்றார்!ஹீ ஐயோ தனிமரம் நான் இல்லை!ஹீ!

 வயசு, அனுபவம் அறியாதமரம் போலும்!ஹீ.

இன்று ஏனோ அவர் பதிவை எழுதும் போது இந்த பதிவை நீங்களும் படியுங்கோ-http://deviyar-illam.blogspot.com/

6 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

தேவியர் இல்லம் வலைப் பூவினைத் தொடர்ந்து படித்து வருபவ்ர்களில் நானும் ஒருவன்.
அவரது எழுத்துக்கள், அனுபவத்தின் வெளிப்பாடு, படித்து பிரமித்த எழுத்துக்கள் அவருடையவை
அருமையான பதிவு நண்பரே நன்றி
தம +1

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் பல தொடர்களையும் மின் நூல் ஆக்கலாம்... எப்போது செய்யப் போகிறீர்கள்...?

Thulasidharan V Thillaiakathu said...

னண்பர் ஜோதிஜி அவர்களின் பதிவுகளும் சரி, தொடர்களும் சரி அனைத்தும் அவரது அனுபவ உணர்வுகள். நாங்கள் தொடர்ந்து வாசிப்பவர்கள் அவரது எழுத்தை. பயத்தோடு வாழப் பழகிக் கொள் வாசிக்கவில்லை. வாசிக்க வேண்டும்.அவரது எழுத்தைப் பற்றிய அவரது இந்தப் பதிவு அருமை நண்பரே!

தனிமரம் said...

தேவியர் இல்லம் வலைப் பூவினைத் தொடர்ந்து படித்து வருபவ்ர்களில் நானும் ஒருவன்.
அவரது எழுத்துக்கள், அனுபவத்தின் வெளிப்பாடு, படித்து பிரமித்த எழுத்துக்கள் அவருடையவை
அருமையான பதிவு நண்பரே நன்றி// வாங்க கரந்தை ஐயா முதல் வருகைக்கு ஒரு பால்கோப்பி குடியுங்கோ.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

உங்களின் பல தொடர்களையும் மின் நூல் ஆக்கலாம்... எப்போது செய்யப் போகிறீர்கள்..// இனி மேல் சிந்திக்கின்றேன் தனபாலன் சார். நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

னண்பர் ஜோதிஜி அவர்களின் பதிவுகளும் சரி, தொடர்களும் சரி அனைத்தும் அவரது அனுபவ உணர்வுகள். நாங்கள் தொடர்ந்து வாசிப்பவர்கள் அவரது எழுத்தை. பயத்தோடு வாழப் பழகிக் கொள் வாசிக்கவில்லை. வாசிக்க வேண்டும்.அவரது எழுத்தைப் பற்றிய அவரது இந்தப் பதிவு அருமை நண்பரே!//நன்றி துளசிதரன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்