13 March 2015

முகம் காண ஆசையுடன் ...-4


முகம் காண ஆசையுடன் -3

இனி.......

உள்நாட்டு சுதந்திர வேட்கையில் ஊர்விட்டுப்போன  உறவுகளையும் , இடம்பெயர்ந்த உடன் பிறப்புக்களையும். உற்ற நட்புக்களையும் .கூடப்படித்த பள்ளிக்கூட உறவுகளையும். மீண்டும் சேர்க்கும் பள்ளிக்கூடம் படம் போல இன்றைய  நவீன ஊடக வருகையான முகநூல் ஒன்றினைக்கும் ஒரு பொது மேடை எனலாம்.

 என்றாலும் இந்த முகநூல் பலருக்கு தகவல் பகிரும் ஊடகம் என்றால் சிலருக்கு முகம் தொலைந்த நட்பு  உறவை மீண்டும் தேடும்  பைவ்ஸ்டார் படம் போல இன்று !

எனினும் குடும்பத்தில் எற்படும் நவீன புரட்சியின் இன்னொரு முகம் இந்தப்படம் போல ,



 இந்த முகநூலின் வருகையில் முகம் தேடும் காதல் கதை காதலர் தினம் படம் போல ஒவ்வொரு இளம் நெஞ்சங்களின் புதிய தேடல் என இந்த புதுப்பிறவி போல முகநூலின் வருகை பல செய்திகள் சமூகத்துக்கு சொன்னாலும் !

நாட்டின் இன்றைய நிகழ்வுகளை சொல்லும் விளம்பரப்பலகை போலஒரு பக்கம் என்றால் !

அன்றைய பாரதிராஜா படத்தின் தின்னை வெட்டிப்பேச்சுப்போல  இன்று சிலரின் கும்மியின் ஜோதிலட்சுமி இந்த முகநூல்  என்றால்  நீயா ?நானா ,என்பது போல அடுத்தவரிடம் ஒலிவாங்கியை கொடுங்க கருத்து அறிய என்பது போல புகைப்படக் காட்சியின் கருத்துக்கள் மூலம் சிரிக்கவும் சிந்திக்கவும் சேரும் ஒரு ஆலமரம் இன்னொரு பக்கம் !

முகநூலில் தனிப்பட்டவர்களின் வேட்டியின் அழகு முதல் சேலையின் நிறம் வரை கரைத்து   ஊத்தும் திருப்பூர்  சாயப்பட்டரை போல பலரின் அரசியல் ,சினிமா ,ஆன்மீகம் , என இந்த நவீன பொழுதுபோக்கு கருவி இன்றைய புதியபாதை  வழிகாட்டி என்றாலும் இங்கும் பல கதைகள் அச்சு  ஏட்டில் எழுதுவது போல எழுதும் புதிய படைப்பாளிகளின் வருகைக்கு இன்னொரு கணையாழி போல  ஒரு தீவு முகப்புத்தகம்.

 .இப்படிச் சிந்தனையில் பாரிசின் புறநகர்சாலையில் இயங்கும் ஒரு இத்தாலியன் உணவகத்தில்   சமையல் தொழிலில் இரண்டாவது சமையல் தொழிலாளியாக   இருக்கும்  அசுரன் கைபேசிக்கு.!


 தனிப்பட்ட செய்தி ஒன்றின் வருகை உற்சாகத்தினை கொடுத்தது  மாலையில் நீண்ட நாட்களாக முகநூலில் அவனின் சிந்தனையோடு ஓத்துப்போகும் ஒரு முகம் தெரியாத முகநூல் உறவு அவனை ஸ்கைப் மூலம் பேசமுடியுமா ?என்று கேள்வியினை தொடுத்து இருந்தது.

தன்னிடம் நடிகன் பதிவாளர் அசுரன் பற்றி பேசாத சுமா என்று என் நண்பி நிவேதா கோபித்த பதிவாளினிதான் இப்போது என்னுடன் முதன் முதலாக பேசும் ஆசையில் அழைப்பு எடுக்கச்சொல்லி விட்ட தூது போ செல்லக்கிளியே போல செய்திக்குறிப்பு.


 நாளைய பொழுது ஞாயிறு மாலை அழைப்பில் வருகின்றேன் என்று உடனே பதில் கொடுத்தான் அசுரன்.வேடிக்கையாக!

தொடரும்.....

6 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

அசுரன் மனதில் தான் எத்தனை சிந்தனைகள்....!

கரந்தை ஜெயக்குமார் said...

எத்தனை
எத்தனை சிந்தனைகள்
தம 3

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
சிந்தனை நல்லாத்தான் இருக்கு அடுத்த சிந்தனை என்னவாகும் காத்திருக்கேன்... தொடருங்கள் த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

முகநூலை நல்ல முறையில் பயன்படுத்தனால் நிறைய நன்மை உண்டு

yathavan64@gmail.com said...

அன்பின் அருந்தகையீர்!
வணக்கம்!

இன்றைய...
வலைச் சரத்திற்கு,

தங்களது
தகுதி வாய்ந்த பதிவு
சிறப்பு செய்துள்ளது!

வருக!
வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.fr/
கருத்தினை தருக!

நட்புடன்,
புதுவை வேலு

Thulasidharan V Thillaiakathu said...

ம்ம்ம்ம் சுமாவுடன் அசுரன் ஸ்கைப்பிங்க்!!!?? அடுத்து என்ன என்ற ஆவல்....