26 March 2015

முகம் காண ஆசையுடன் -5


முகம் காண ஆசையுடன் -4
/////////////////
 இனி......
-----------------

இணைய நினைக்கும் போதெல்லாம்
இசைக்கும் பாடல் போல நீயும்
இல்லறத்தில் இணைய வேண்டிய ஆசையில்
இவன் இசைக்கும் பாடல்!

இங்கும் கேட்குமோ உன் குரல்?,


 என்று கவிதை எழுதிக்கொண்டிருந்தான் அசுரன் . இன்று எப்படியும் சுமாவுடன் ஸ்கைப்பில்  நேரடியாக பேச வேண்டும் சந்தித்தவேளை நாயகன் போல காத்து இருந்தான் ஆவலுடன் பாரிசில்.!



 விரும்பிய நட்புக்களுடன் நேரில் பேசும் வசதியை ஸ்கைப் என்ற புதிய வருகையின் தொழில்நுட்பம் உதவி செய்தாலும் இலங்கையில் இணையத்தொடர்பு என்பது நினைத்த நேரத்தில் உதவாத ஒரு அயல்தேசம் போல இழுத்தடிக்கும் தந்திரம் கொண்டது!


!உடனே கைபேசியில் இருந்து தூரதேசம் அழைத்தால் மாதமுடிவில்  அதிக கட்டணம் போடும்  இலங்கைக்கு உதவி செய்த  சீனா போல!


 என்ன செய்வது தொடர்பு அவசரம் என்றால் உதவி நாடிப்போவதில் என்ன குறை வந்துவிடப் போகுது அயல்நாட்டிடன் இன்னும் அடிமை போல இருந்த காலம் இப்போது இல்லை!

 நமக்குத்தேவை இப்போது அவசரமாக என்ற பின் ஏன் அவதிப்படுவான் என்றாலும் அசுரனின் கைபேசி இலக்கத்தை வாங்கி வைத்து இருக்கவில்லை மத்திய வங்கியில்  இருக்கும் தங்கநாணயம் போல!

 என்றாலும் இப்போது நிவேதாவிடம் கேட்களாம்!

 ஆனாலும் அவளிடம் ஏதும் காரணம் சொல்ல வேண்டும். பேசாமல் இணைப்புச்சதி செய்கின்றது நம் ஆட்சிக்கு எதிராக என்பது போல ஒரு ஸ்டேஸ்ச் போட்டாள்  நாளை அசுரன் முகநூலில் அறிந்து கொள்வான் என்ற சிந்தனையில். கொழும்பு  14 கிராண்பாஸ் வீதியில் இருந்த தொலைத்தொடர்பு சேவை மையத்தில் இருந்து வெளியேறினாள் சுமா.


இப்பவே  இப்பவே  என்ற பாடல் போல இதோ அழைப்பாள் என்று இணையத்தில் காத்து இருந்தான் ஜனாதிபதியை சந்திக்கக் காத்து இருக்கும் வெளிநாட்டு ஊடகவாதி போல அசுரன் !


 சிலரின் அழைப்பு சிலருக்கு சிலநேரத்தில் போதையூட்டும் இது பருவத்தின் சித்து விளையாட்டுப்போல என்று நினைத்துக் கொண்டான் அசுரன் வாடகை கொடுத்து  தங்கியிருக்கும் அறையில் இருக்கும் இன்னொரு நட்பு அகிலன் .

அந்தி  பூத்திடும்  இந்த நேரத்தில்
அக்கரையில்  இருந்து
அன்பில் யாரின் அழைப்புக்காய்
 அலைகின்றான் அகதியான
அன்பு நண்பன் அழுத்தினான்
அடுத்த பாட்டுக்கு கவிதை ஒன்று
அக்கரையில் இருக்கும் வானொலிக்கு


அதில் ஒலித்த பாடல் இதுவோ  [[[[[[[




தொடரும்.......



14 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

பாடல் இனிமை...

S.P.SENTHIL KUMAR said...

அடக்குமுறை நிறைந்த நாட்டில் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும் என்பதை விவரமாக சொன்னது பதிவு.
த ம 3

MANO நாஞ்சில் மனோ said...

வாழ்கையின் வேதனைகள் எழுத்தில் தெரிகிறது.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

வாழ்வின் யதர்த்தம்... சொல்லிய விதம் நன்று... இறுதியில் பாடலும் நன்றி த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வலிப்போக்கன் said...

ஜனநாயகம் என்று மார்தட்டிக் கொள்கிற நாட்டிலே அடக்குமுறைகள் கோலோச்சும்போது..அடக்குமுறையே ஆட்சியாக ஆளும் நாட்டில்..ஜனநாயகம் என்ற காற்று எங்கிருந்து வீசும்...

வலிப்போக்கன் said...

ஜனநாயகம் என்று மார்தட்டிக் கொள்கிற நாட்டிலே அடக்குமுறைகள் கோலோச்சும்போது..அடக்குமுறையே ஆட்சியாக ஆளும் நாட்டில்..ஜனநாயகம் என்ற காற்று எங்கிருந்து வீசும்...

வலிப்போக்கன் said...

த.ம5வது

வலிப்போக்கன் said...

இந்த நாடும்“ நாட்டு மக்களும் நாசமா போகட்டும் என்றால்.... நானும் நீங்களும் அதில் சேர்த்தி தானே....

தனிமரம் said...

பாடல் இனிமை//வாங்க தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

தனிமரம் said...

அடக்குமுறை நிறைந்த நாட்டில் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும் என்பதை விவரமாக சொன்னது பதிவு.//நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் செந்தில் சார்.

தனிமரம் said...

வாழ்கையின் வேதனைகள் எழுத்தில் தெரிகிறது.// நன்றி நாஞ்சில் மனோ அண்ணாச்சி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

வணக்கம்

வாழ்வின் யதர்த்தம்... சொல்லிய விதம் நன்று... இறுதியில் பாடலும் நன்றி த.ம 4
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-// நன்றி ரூபன் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

ஜனநாயகம் என்று மார்தட்டிக் கொள்கிற நாட்டிலே அடக்குமுறைகள் கோலோச்சும்போது..அடக்குமுறையே ஆட்சியாக ஆளும் நாட்டில்..ஜனநாயகம் என்ற காற்று எங்கிருந்து வீசும்...//நன்றி வலிப்போக்கன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

த.ம5வது// நன்றி வாக்கு இட்டமைக்கு வலிப்போக்கன் சார்