01 September 2015

முகம் காண ஆசையுடன் -18

முகம் முதலில் இங்கே-http://www.thanimaram.org/2015/08/17.html

இனி...


இரங்கி நின்றோம் ,இழந்து நின்றோம், இகழ்ந்த போதும்,  இன்னும் ஏனோ இந்த உயிர்கொண்டு இன்னும் ஏந்தி நிற்கின்றோம்??


 இன்னும் விடிவுகிடைக்கும் !என்ற ஒரு இறைவன் போல அவன் பார்ப்பான் என்ற நம்பிக்கையில்! ஆனால் இங்கே எல்லாம் பதவி ஆசைக்கு அடிக்கும் கூத்து பாவாடை கட்டிய வேஷம் போல யாருடன் நோவது ?,.நமக்கான விடுதலை பற்றி இன்னும் இனவாத தலைவர்கள் எல்லாம் ஏனோ ?,இன்னும் இந்த பொது மன்னிப்பு என்று பேச மறுக்கின்றார்கள்.?,


 ஆனால் பொது நிகழ்ச்சி நிரல்; பொதுவான நாடு; என்று புலூடாவிடும் வேதங்கள் ஓதுவதுக்கு வந்து போகும் வேடதாரிகள் கூட்டத்தில் விசில் ஊதி நாமும் ஒரு நடிகர் போல என்று மல்லு வேட்டியை கோடியில் போட்டுவிட்டு மாடாதிபதிகள் போல நாடக மேடையில் நாமம் போடும் இவர்களை எந்த நாட்டில் அந்தமான் போல  சிறைவைப்பது ?,,


சிங்களவன் கூட தேசிய உடையில் வரும் போது இந்த கமடியங்கள் மட்டும் ஹீரோ வேசம் போடுவதை அந்தக்கால உணர்ச்சி அரசியலில் தீக்குளித்தோர் நம்பலாம் !உயிர் தமிழுக்கு  உடல் தமிழ் மூச்சுக்கு என்று!  இன்றைய அவசர உலகில் முகநூலில் காய்ச்சி தொங்கப்போடும் வசதியை செல்பியும் சொல்லும் கதை என்று  இன்னும் புதிய தொடர் எழுத முடியும்?,

 என்ன அரசன் பத்திரிக்கைக்கு கடிதம் எழுதுகின்றாயா?, கட்டுமரம் போர்க் கப்பல் அனுப்பாத என்பதைப்போல!

 இல்லை அகிலன்!

 இன்று ஒரு முகநூல் நட்பு என்னை முகநூலில் கிழித்த வேட்டிக்கு பதில் எழுதிக்கொண்டு இருக்கின்றேன் மத்திய பாதுக்காப்புச்  செயலரின் பதில்க்கடிதம் போல !

போடா லூசா?, உன்னை முகநூலில் காணவில்லை என்று சுமா என் முகநூலில் உள்ளடப்பிள் கேட்டிருந்தால்?, ஆமா உன் முகநூலில் ஏன் தேவையில்லா விடயத்துக்கு பொங்குகின்றாய்?,

 .ஒரு வாரம் முகநூல் வரவில்லையாமே?, எங்க போனாய் ?,ஐரோப்பா வசந்தகால விடுமுறையில்  ஜீவனுடன் ஏதாவது கடல்ப்பக்கம் நீயும் போனாயா என்று கேட்டாள் ?,நான் என்ன சொல்ல?,

  நானும் இன்று தான் தாய்லாந்தில் இருந்து திரும்பி வந்தேன்!

நீயும் யார் யாரையோ முகநூலில் நட்பு என்று சேர்க்கின்றாய்! அதனால் வரும் சினம் ஊட்டலில் உன் முகநூல் போக்கே பிடிக்கவில்லை அசுரன் .

ஆமா உன் வலையுலகு எப்படி இருக்கு ?,தேவையில்லாத விடயத்தை பேசாத! ஜாலியாக அல்லது மொக்கையாக எதையாவது எழுது!

ஆமா இந்த வாரம் வீட்டில் கூடஇல்லை  நாடோடி போல   பலதடவை வீட்டு தொலைபேசிக்கு அழைத்தேன் ! ஏன் போலி விளம்பர அரசியலுக்கு ஆசைப்பட்டாயா பாலகுமார போல !ஆமா உனக்கு யாராவது பன்னாடை போர்த்தி அழைதார்களோ?,

இல்லை மச்சான் அகிலன் !

என் முதலாளி இந்தவாரம் கடையில் இல்லை .அதனால் அங்கேயே தங்க வேண்டிய சூழல். பொறுத்த நேரத்தில் கைபேசி செயல் இழந்த நிலை உனக்கு துண்டு எழுதி குசினியில் வைத்துவிட்டுப் போனேன் நீ  கடந்த வாரம் வருவாய்  என்று !ஆனால் சுற்றுலா போன  மின்னல் போல காலம் தாழ்த்தி வந்தால் நான் என்ன செய்வேன்! நான் ஏதிலி! பள்ளிக்கூடம் போகாத மாணவன் !என் நேசிப்பு உனக்கு புரியாத ஒன்று சொல்ல வைக்காத அகிலன்!

 ஏன் சுமா உனக்கு செய்தி போட்டாள் ?,ஓ அதுவா ?,அவளின் வீட்டை புலனாய்வுத்துறை அவளின் கணனிமுதல் ;கடைசியில் அழைத்த கைபேசி வெளிநாட்டு அழைப்பு வரை எல்லாவற்றையும் ஆராய்ந்து அன்பாக அடித்து பதிவு செய்து தொங்கவிட்டாச்சாம்!

அதனால் உனக்கு அவள் கடைசியாக அனுப்பிய செய்திகள், காட்சிப்படங்கள்  எல்லாம் பொக்கிஷமாக வந்து சேர்ந்தா?, என்று அறியும் ஆவலில் படபடப்புடுடன் எங்கே அவள் கலியாணம் இந்த ஊடக ஆசையால் நான் பேச நினைப்பதெலாம் மோகினி போல வீதிக்கு வந்திடுமோ,, என்று பயப்புடுகின்றாள்!


 நீ சும்மா வெளிநாட்டில் நல்லாக இருந்து கொண்டு சும்மா காசை ஒரு நாடு இருதேசம் என்ற வெற்றுக் கோஷத்துக்கு  வீனாக இறைத்த தேர்தல் நிதி போல எங்கே அவளின் சுய செய்திகள்  யாவும் வெற்றுகோஷம் போல  வீனாகி அதனால் அவளையும் ஊடகத்துறையில் இருந்து விலக்கி/காணாமல் போனோர் பட்டியலில் சேர்த்துவிடுவார்களோ,,,,?? என்று ஜோசிக்கின்றாள்!

 ஒரு சில மாதம் வரவிட்டாள் .முகநூலில் யார் யாரை தேடப்போகின்றார்கள் ?,குறைவது லைக்கு மட்டும் தானே! உண்மையான நட்பு முகம் எப்போதும் தேடிக்கொண்டே இருக்கும் அன்பில் !அண்ணாச்சி நலமா ?,அக்காச்சி நலமா ?,
என்று!

போடா எல்லாத்தையும் மூடிவிட்டு சிறைக்குப்போன  பூஜாவுக்கு உன்னை எதுக்கு பிடிச்சது என்று நான் அறியேன் !

ஆனால் இந்த முகநூல் நட்பு உனக்கு வேண்டாம் ,வலைப்பதிவும் வேண்டாம் ,நடிகன் தளம் மூடினால் ஆவது ஒன்றும் இல்லையே!

 இனி குளிர்காலம் வரபோகுது உனக்கு வேலை அதிகமாக இருக்கும்! இனி ஓய்வு எடுமச்சான்!

 இது ஏனோ இன்று சொல்லத்தோன்றிச்சு! அதுக்காக என் முகநூல் நட்பை பிளாக் செய்தாலும் எனக்கு கவலை இல்லை!

என் வீட்டில் குடியிருக்கும் ஒரு சாமானியன் நீ என்பதை மறந்திடாத அசுரன். ஆமா இந்த மாச சமரிக்காசு எப்ப தாராய்,,?,

 மச்சான் இப்ப கொஞ்சம் இறுக்கம். என் நட்புக்காக கொஞ்சம் காசு கடன் பட்டு அனுப்பிவிட்டேன்   நம் நாட்டுக்கு.

அது வருமா?, வராத என்பதை விட அவன் எனக்கு உதவுவதாக சொல்லி இருக்கின்றான் !

வரும் மாதம் இன்னொரு நண்பனின் விடுமுறை வேலைக்கு ஓம் என்று இங்கு சொல்லி விட்டேன்! உதவாக்கரை நாயே!! நீயே  தொடர்ந்து 15 மணித்தியாளம் சமையல் அறையில் வேகும் வலி புரியாதா ?,


அதைக்கடந்து இன்னும் 3 மணித்தியாளம் துப்பரவுப்பணிக்கு போனால் நீ தூங்கும் நேரம் எத்தனை?,

 ஏண்டா இப்படி முதலில் நீ திருந்து!! போலி வாழ்க்கை வாழாத! எனக்கு சமரிக்காசு தராவிட்டாளும் பரவாயில்லை, இன்னொரு வேலைக்கு போக வேண்டாம் !

ஆனால் ஒன்று செய்! முகநூல் போகாத; நடிகன் வலையுலகை மூடிவிடு உனக்கு பிரபல்யம் தேவை என்றால் ஒரு நடிகனுக்கு சாமரம் வீசு. ஆயிரம் பதிவு போடு நோ டென்ஷன்! வலையுறவு/முகநூல் நட்பு என்று நீ நேசித்து  அதனால் தனிப்பட்ட  உன் நட்புக்களுக்கு அனுப்பும் பணம் ஒரு நாளும் திரும்பாது !

நீ போடும் ஸ்டேச்சுக்கு லைக்கும்  வராது!முடிவை இப்ப சொல்லு என்று சினேஹா போல ஒருத்தி  என் நண்பனிடம் கேட்டதைப் போல நான் ஏதும் உன்னிடம் கேட்கவில்லை!


 நாளை ஜோசித்து சொல்லு !அசுரன் எழுதுகின்றேன் என்று யார் வாழ்வையும் கெடுக்காத பாவம் அப்பாவி சுமா!

நடிகன் வலையும் தேவையில்லை. உன்முகநூலும் தேவையில்லை !எல்லாம் மூடுவதாக இருந்தால் என் வீட்டில் இரு!! இல்லையோ வெட்டிப்பயல் வீட்டை விட்டு ஏதிலியாக எங்கும் போகலாம்!  உன் வேலை நேற்றுடன் தேர்தலில் தோற்ற முன்னால் அமைச்சர் போல  வீதிக்கு வந்ததும் நான் அறிவேன் அசுரன்! அவங்களுக்கு சரி தேசியல் பட்டியலில் மீண்டும் பாராளமனறத்தில் போய் அமைச்சுப்பதவி ஏற்க ஆயிரம் வசதி இருக்கு ஆனால் உனக்கு சொந்த முகவரியும் இல்லை சொந்த உழைப்பும் இல்லை சொந்த வலை உருவாக்கித்தரும் தகுதியும் எனக்கில்லை  இல்லை, தேவையும் இல்லை தேடு உன் பாதை எது என்று !

அதிர்ச்சியில் அயர்ந்தான் அசுரன்!




தொடரும்.

20 comments :

கரூர்பூபகீதன் said...

வணக்கம் சகோ!! தங்கள் அனுபவம்!
அழகான. எழுத்து நடை!! தாங்கள் சொன்னது போல ஜாலியாக எழுதலாமே!! நன்றி

அன்பூடன் கரூர்பூபகீதன்!!

கரந்தை ஜெயக்குமார் said...

தொடருங்கள் நண்பரே
தொடர்கிறேன்
தம +1

balaamagi said...

நல்லாதானே இருக்கு,,,,
ம் எழுதுங்கள்,

தனிமரம் said...

வணக்கம் சகோ!! தங்கள் அனுபவம்!
அழகான. எழுத்து நடை!! தாங்கள் சொன்னது போல ஜாலியாக எழுதலாமே!! நன்றி

அன்பூடன் கரூர்பூபகீதன்!!// வாங்க சகோ முதல் வருகைக்கு பரிசாக ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ[[! தொடர் என் அனுபவம் இல்லை என்பதை தாழ்மையுடன் சொல்லிக்கொள்கின்றேன்.தொடர் ஜாலி இல்லை என்பது என் கருத்து!நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

தொடருங்கள் நண்பரே
தொடர்கிறேன்
தம +1//நன்றி கரந்தை ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும் வாக்கு இட்டமைக்கும்.

தனிமரம் said...

நல்லாதானே இருக்கு,,,,
ம் எழுதுங்கள்,// நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் மகேஸ்வரி!

Thulasidharan V Thillaiakathu said...

நிகழ்வுகளின் அடிப்படையில் அருமையாகப் பயணிக்கின்றது...அது சரி இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதே....மாற்றங்கள் உண்டா நண்பரே?

KILLERGEE Devakottai said...


நல்லதொரு அலசல் நண்பரே...
தமிழ் மணம் 3

Unknown said...

நடைமுறைப் புலம்பெயர் வாழ்வியலின் நகர்வுகளை சொல்லியிருக்கிறீர்கள். நன்று தம்பி!

”தளிர் சுரேஷ்” said...

அருமையாகச் செல்கிறது! தொடர்கிறேன்!

ஸ்ரீராம். said...

ஒரு உரையாடலாகவே அமைத்துச் செல்கிறீர்கள். தொடருங்கள்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நடைமுறை வாழ்வியலை யதார்த்தமாகப் பகிர்ந்துகொள்ளும் விதம் நன்று.

இளமதி said...

மனதிலுள்ள மாற்ற முடியாத வேதனைகளின் வெளிப்பாடு!
மாற்ரம் கிட்டுமா?.. காத்திருப்போம் சகோதரரே!

தொடருங்கள்!..

த ம. 5

தனிமரம் said...

நிகழ்வுகளின் அடிப்படையில் அருமையாகப் பயணிக்கின்றது...அது சரி இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதே....மாற்றங்கள் உண்டா நண்பரே?// இன்னும் பல மாற்றங்கள் மாறவில்லை `மாறாது ஆணிவேரில் பல விஷமங்கள் இருக்கு துளசிதரன் சார்! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நல்லதொரு அலசல் நண்பரே...
தமிழ் மணம் 3// நன்றி கில்லர்ஜீ வருகைக்கும் கருத்துரைக்கும் வாக்கு இட்டமைக்கும்.

தனிமரம் said...

நடைமுறைப் புலம்பெயர் வாழ்வியலின் நகர்வுகளை சொல்லியிருக்கிறீர்கள். நன்று தம்பி!// நன்றி கீதா ரவி அக்காச்சி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

அருமையாகச் செல்கிறது! தொடர்கிறேன்!// நன்றி சுரேஷ் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

ஒரு உரையாடலாகவே அமைத்துச் செல்கிறீர்கள். தொடருங்கள்.// நன்றி ஸ்ரீராம் வருகைக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

நடைமுறை வாழ்வியலை யதார்த்தமாகப் பகிர்ந்துகொள்ளும் விதம் நன்று.//நன்றி ஜம்புலிங்கம் ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

மனதிலுள்ள மாற்ற முடியாத வேதனைகளின் வெளிப்பாடு!
மாற்ரம் கிட்டுமா?.. காத்திருப்போம் சகோதரரே!

தொடருங்கள்!..

த ம. 5//நன்றி இளமதி வருகைக்கும் கருத்துரைக்கும் வாக்கு இட்டமைக்கும்.