06 September 2015

கொஞ்சம் நினைப்பும் கொஞ்சம் குறும்பும்[[[ !

சில கவிதைகள் வலையில் வாசிக்கும் போது கொஞ்சம் ஜாலியாக என் பார்வையில் எழுதலாம் என்றால் ஏனோ  ?,மூலப் படைப்பு சிதைந்துவிடும் என்ற பயம் இன்னும் இருக்கு. !ஆனாலும் கொஞ்சம் சிரிப்போம்[[[

--http://santhyilnaam.blogspot.com/2012/04/blog-post.html.

இப்ப வலையில் ஹேமா  கொஞ்சம் ஓய்வில்!


 அவர் இல்லாத படியால் கருக்கு மட்டை வராது [[  ஹேமா வலைக்கு வந்தால்  புதிய அக்காச்சியும்!

விரைவில் அக்காவும் ,தங்கையும் ,ஆகிவிடுவார்கள்  கீர்த்தனா,  ஹேமா அப்புறம் கலை என்று  இனி நம்பாடு தனிமரம்  அதே கதியாகிவிடும்[[

இந்தவாரம் அக்காச்சி கீர்த்தனா அவர்களின் கவிதை  வாசிக்க இங்கே -http://iniya-kavithai.blogspot.fr/2015/09/blog-post_4.html
 இவரின் வலையில் சுட்ட படம் கீழே[[


இனி  ஜாலிக்காக[[[

பிழை எனில் அக்காச்சி  மன்னிச்சு படிக்காதமரம் தனிமரம்!
--

நேசத்துடன் நெலும் மலருடன்
நேற்றும் காத்திருந்தேன்
நேத்திரா !
நேசம் பொய் என்று
நோர்வே போனதாய்
நேற்றைய காற்று
நெஞ்சில் எழுதியது!!



நேசம் எல்லாம்!
நெருஞ்சி முள்ள போல
நெலும் மலர் வாடுது
நோண்டாத தெப்பக்குளம் தான் போலும்
நெசமாக சொல்லு என் அன்பு
நெஞ்சத்தைக் கிள்ளாதே
நெருஞ்சிமுள்ளா[[[
நேசத்துடன்
நேற்றைய வீதியில்
                         
      பழைய பதிவில் இந்தப்பாடல் இல்லாமல் போய்விட்டது[[ இசைக்கு மொழி ஏது எல்லாம் இரசிப்போம்!

இங்கேயும் வீசலாம் [[ http://www.thanimaram.org/2011/08/blog-post_26.html

///

நெலும் மலக்- -சிங்களமொழியில் தாமரைப்பூவைச் சொல்வார்கள் .
நோண்டாத- கிலறாத அல்லது ஆராய்யாத என்பது வட்டாரச்சொல் இலங்கையில்.
 தெப்பக்குளம்- நீர்த்தாடகை மதுரை மீனாட்சி ஆலயத்தில் இன்றும் கானலாம் [[!

நேற்றைய காற்று -இலங்கை தனியார் வானொலி  சூரியன் பண்பலையில் இரவு நேர நிகழ்ச்சி!1994-முதல் இப்போது நான்  அறியேன் இணையத்தில் [[[[


------------------------------------------------------------





ஐயாவின்  பல பதிவுகளில் மனதை குடைந்து விடுவார் ஆனாலும் எங்கே உணர்ச்சி வசப்பட்டு விடுவோனே தனிமரம் என்பதால் பல நேரம் பம்முவதுடன் சரி ஆனால் இந்த விடயம் கொஞ்சம் ஜோசிக்க  இங்கே-http://tthamizhelango.blogspot.com/2015/09/blog-post.html

இனி

...

கையெழுத்துப்போட்டேன்
கைநிறைய நானும் ஒரு
கைவேலை செய்யும்
கையுடையை காளை என்று!



கைகாட்டு இது உன்
கையெழுத்தா ?,
கைதியாக விசாரணையான போதும்
கைகாட்டவில்லை!
கையெழுத்து என் பிழை என்று!!
கையூட்டு கொடுத்து
கைதி தப்பியோட்டம்
கைதியை தேடும் படலம் தொடரும்[[[
கைதானால் !
கைக்குண்டுடன் கைது என்று
கைப்பட கைகாட்டுவார்கள் ஊடகத்தில்[[
கையில் ஏதும்மில்லை  கடல்கடந்த பின்னும்!
கையுறைகொண்டு
கைகூசும் குளிரிலும்
கையுடன் நம்பிக்கையுடன்
கைக்காட்டும்மரம் இது[[


கைநாட்டுதான் ஐயா நான்![[
கையொப்பம் எதில் இட?,
கைகாட்டும்மிடத்தில்
கை தமிழிலா?,
கைதி சிங்களத்திலா?,
கைநாட்டு ஆங்கிலத்திலா?,,?,
கை நம்பிக்கை ஐயா!
கை தும்பிக்கை யானை போல
கையமுகன் என்றும் பாடலாம்[[[
கையெழுத்தும் மாறும்
கைதி நிலை மாறுமோ
கைவிரலும் போகும்
கைவிட்ட வழக்கு என்றால்!!!


கையில்லாமல் மிதக்கும்
கைதியானோர் உடல்!
கைகாட்டி கதை எழுத
கையில் இல்லை
கையிருப்பு நேரம் !
கைதிகள் கதை
கையில் பல படிவங்களா!
கை வீசுவோம்
கைதிகள் வெளிவர
கைக்குண்டு போல எழுத்தை!


--

ஜாலிக்காக எல்லாம் யாவும் கற்பனையே!

11 comments :

Nagendra Bharathi said...

அருமை

Yarlpavanan said...

"நோண்டாத தெப்பக்குளம் தான் போலும்
நெசமாக சொல்லு என் அன்பு
நெஞ்சத்தைக் கிள்ளாதே" என்ற
அழகான கவிதை வரிகள்

"ஐயாவின் பல பதிவுகளில்
மனதை குடைந்து விடுவார்" என்ற
உண்மையை
அவரது 'தமிழ்இளங்கோ' தளத்தில் கண்டேன்

திருமலை அருளர் எழுதிய
"லங்கா ராணி" நூலைப் படித்தவர்களுக்கு
இலங்கை நிலைமையை அறிவார்கள்

சிறந்த அறிமுகங்கள்
தொடருங்கள்

கரந்தை ஜெயக்குமார் said...

அறிமுகங்கள் அருமை
தொடருங்கள் நண்பரே
தம +1

திண்டுக்கல் தனபாலன் said...

விழாவில் நடக்கும் கவிதைப் போட்டியிலும் நீங்கள் கலந்து கொள்ளலாம் தோழர்...

http://thillaiakathuchronicles.blogspot.com/2015/09/BloggersMeet-2015-Information.html

கரூர்பூபகீதன் said...

வணக்கம்! சகோ!
இங்கும் அறிமுகங்கள் அருமை!!
தங்கள் கவிதையும் அழகு!!
அசத்துங்க!! நன்றி!!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள். நன்றி.

இளமதி said...

அறுமுகங்களோடு அழகுக் கவிதை!
அசத்துகின்றீர்கள் சகோ!

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

த ம +1

Unknown said...

தம்பி :) அக்கா ரொம்ம்ப சாது கண்டீங்களோ.;) குறும்பு கலந்த கவிதைகளுடன் அனைவரின் சுவையான அறிமுகத்துக்கு மிக்க நன்றி தம்பி! கைதிகள் கவிதை நெஞ்சில் பாரம்! அருமை தம்பி!

balaamagi said...

வணக்கம்,
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
தங்கள் தொகுப்பு அருமை.

வலிப்போக்கன் said...

நன்றாக இருந்தது..தங்களின் அறிமுகக் கவிதை....

KILLERGEE Devakottai said...


பதிவு அருமை நண்பரே தமிழ் மணம் 6