ஒலியும் ஒளியும் இந்த வார்த்தையை அறிமுகம் செய்து தந்தது சிங்கப்பூர் தொலைக்காட்சி .அவர்களின் நிகழ்ச்சியை இலங்கையில் ஒலி/ஒளிபரப்பி செய்தது அரச ஊடகமான ரூபவாஹினி 80 இன் பின்னும்90 முற்பகுதியிலும் இந்த நிகழ்ச்சிக்கு பல்லாயிரம் ரசிகர்கள் இலங்கை எங்கும் இருந்தார்கள்.
இன்று போல தனியார் ஊடகம் பல இல்லாத அந்த நேரத்தில் ரூபவாஹினியின் தமிழ்ச்சேவையின் ஊடாக சிங்கையின் கலை பண்பாட்டினை அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது.
பிரதி வெள்ளி தோறும் இலங்கை நேரப்படி மாலை 5.00 இருந்து 5.30 வரை ஒலியும்/ஒளியும் நாடு விட்டு நாடு தாண்டி வந்த நிகழ்ச்சியை ஏனோ அரச ஊடகம் இடைநிறுத்தியது திடீர் என்று!.
அந்த நிகழ்ச்சிக்கு பதிலாக நம்மவர் பாடல்கள் என்ற ஒரு நிகழ்ச்சி அறிமுகம் இலங்கையில் மீண்டும் மெல்லிசைக்கு புதிய பாதை போட்டது ஒலி/ஒளியாக ரூபவாஹினி தமிழ்ச்சேவை.
அதே போல ஒலியாக இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் சந்தமேடை என்ற நிகழ்ச்சியை தொடங்கியதும், இலங்கையின் மெல்லிசை வரலாறு.
இந்த நிகழ்ச்சிக்கு ஆரம்பத்தில் பாடல்கள் எழுதியவர்கள் இலங்கை வானொலி அறிவிப்பாளர்கள் வெளியில் பல கவிஞர்கள் இருந்தாலும் ஏனோ சந்தர்ப்பம் அவர்களுக்கு முதல்மரியாதை செய்தது.
நல்ல கவிதைகள் பல பாடல்களாக நம்மவர் பாடல்களாக ஒலியும் ஒளியுமாக தமிழ்ச்சேவையில் தோன்றிய போது புதியவர்கள் பலரும் இந்தக்கலைஞர்களின் பெயர்களையும் அவர்களின் முகத்தையும் முகவரியையும் தேடத் தொடங்கினார்கள்.
அந்த வகையில் வானொலியில் நேயர்களுக்கு அறிமுகமானவர்கள் புனைபெயரில் நம்மவர் பாடல்களிலும் பட்டையைக் கிளப்பினார்கள் இறைதாசன்( B.H அப்துல்ஹாமீத்) எஸ்.எழில்வேந்தன்,ராஜேஷ்வரி சண்முகம்,ஜெய்கிருஸ்ணா,ஜோசப் ராஜேந்திரன்,நாகபூசனி கருப்பையா,அருந்ததி சிறிரங்கநாதன் ,மலர்வேந்தன்,சில்லையூர் செல்வராஜன்,கமலினி செல்வராஜன்,சிறிதர் பிச்சையப்பா,நிலாமதி பிச்சையப்பா இரட்டைப்பாதை சேகர் , கார்மேகம் நந்தா,மலரன்பன், முத்தையா ஜெகன்மோகன் சீத்தாராமன், கலீஸ்ரா லூக்கஸ் என பலர் இந்த நிகழ்ச்சி மூலம் இலங்கை இசைமேடையில் பாடல் எழுதுவோராக முத்திரை பதித்தார்கள்.
இவர்களின் பெயரும் புகழும் நாட்டின் பல பாகங்களில் இசை மேடைநிகழ்ச்சியில் விளம்பரங்களாக மின்னியதை! ஏனோ இனவாத யுத்த வெறி இலங்கை மெல்லிசையை மீண்டும் நலிவடைய வழிசெய்ய !
பல கலைஞர்கள் வருயாய் தேட அரபுலகம்,புலம்பெயர் என்று நாட்டை விட்டுச்செல்ல இலங்கை மெல்லிசையும் காணமல் போனோர் பட்டியலில் சேர்ந்து கொண்டது .
ரூபவாஹினியும் தமிழ்நிகழ்ச்சிக்கு ஊக்கம் கொடுக்கவில்லை இந்திய திரைப்படங்களை ஒலியும் ஒளியுமாக தமிழ்மக்களிடம் சேர்த்துவிட்டது.
இந்த நம்மவர்கள் பாடலில் பல இசையமைப்பாளர்கள் புதியவராக வலம் வந்தார்கள் மோகன் -ரங்கன்,பாயஸ்- ரட்ணம்,கேசவராஜன், திருமலை பிரபா, சிறிதர் பிச்சையப்பா ,சாரங்கன் சிறிரங்கநாதன் என இன்னும் பலர் இவர்களுக்கு முகவரியை தந்த இலங்கை மெல்லிசையை இவர்கள் இன்று மறந்தாலும் இவர்களை மறக்காத நேயர்கள் பலர்..
எஸ் எழில்வேந்தன் இலங்கை வானொலியில் பிரபல்யமான அறிவிப்பாளர்.
இவரின் தந்தை துறைநீலாவணன் ( சின்னத்துரை ) ஈழத்து மூத்த கவிஞர் அவரின் கவிதை இலங்கை உயர்தர பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டிருந்தது. மட்டக்களப்பு வாழ்வியல்லை கருவாக கொண்டது கவிதை.
தந்தை போல எழில்வேந்தனும் கவிதை புனைவதில் வல்லவர் இவரின் பல பாடல்கள் இன்றும் இலங்கை கலைக்கூடத்தில் இருக்கின்றது.
பின் வந்த காலகட்டத்தில் தனியார் வானொலிக்கு எஸ். எழில்வேந்தன் இடம் மாறினாலும் அவரின் வழிகாட்டலில் தனியார் வானொலியில் தடம்பதித்தோர் இன்று பலர் எனலாம் அவரின் கற்பனைக்கு இந்தப்பாடல் ஓர் எடுத்துக்காட்டு.
மற்றும்மொரு பாடலுடன் ஊர்வலம் தொடரும்.....

11 comments :
காணொளிப் பாடல் மிகவும் ரசித்தேன் நண்பரே
ஆஹா!மறக்கக்கூடிய காலங்களா அவைகள்.
தொலைக்காட்சி அனைவர் வீட்டிலும் இல்லாத அக்காலத்தில் ஒவ்வொரு வாரமும் இந்த நாளில் இந்த நிகழ்ச்சி என பக்கத்து வீட்டில் சரியாக போய் அமர்ந்து விடுவோம், ஒலி, ஒளி உதயகீதம் என தமிழ் நிகழ்ச்சிகள் வாரத்தில் சில நாட்கள் சில மணி நேரங்கள் மட்டுமே என ஒலிபரப்பாகிய காலங்கள் அவை.
அறியாதத்தகவல்கள்...
சிறந்த பகிர்வு
அருமையான தகவல் சுமை
அருமையான தகவல் சுமை
சிறந்த பகிர்வு
அறியாத பகிர்வு....
நன்றி நட்பே...
மறக்க முடியுமா?
தனிமரம் நேசன் கை கொடுங்கள்! அருமையான மிக மிக அருமையான பதிவு!!! பதியப்பட வேண்டிய ஒன்று!
கீதா: அருமை அருமை... ரூபவாஹினி ஒலி ஒளியும் நாங்கள் மிகவும் ரசித்திருக்கிறோம். நாகர்கோவிலில் மட்டும் எடுக்கும். பிற பகுதிகளில் எடுக்காது. அதற்காகவே நாங்கள் எங்கள் வீட்டு ஆன்டெனாவை இலங்கை நோக்கி வைத்து வைத்து இதை ரூப வாஹினியைப் பார்க்கவே செய்ததுண்டு. பல சமயங்களில் கிடைக்காது இருந்தாலும் முயற்சி செய்து பார்த்துவிடுவோம்..
இலங்கை வானொலி ரூபவாஹினி எல்லாம் எங்கள் மனதிற்கு நெருங்கிய உறவுகள். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அனைவருமே...குறிப்பாக அப்துல் ஹமீது, ராஜேஸ்வரி ஷண்முகம் அவர்கள் ....இனன்னும் எனது மனதில் இலங்கையில் இருந்த காலங்களின் இனிய நினைவுகள் பசுமையாக காட்சிகளாக இருக்கிறது. மீண்டும் அந்தக் கால நினைவுகளுக்கு அழைத்துச் சென்றுவிட்டீர்கள்...ரசித்தோம் பதிவை. இன்னும் பதியுங்கள்...
சிறு வயதில் இலங்கை வானொலியில் பாட்டுக்குப் பாட்டு கேட்டு மகிழ்ந்தது மறக்கமுடியாதது
Post a Comment