05 July 2016

யாசிக்கும் ஏதிலி-14





முன்னம் கதை இங்கே-http://www.thanimaram.org/2016/06/13.html!

இனி....



 ஒரு பெண்ணுக்கு காதல் வரும் போது! குடும்பம் என்ற நூல்வேலிகள் வேலி தாண்டாத வெள்ளாடு என்று ஆர்பரிக்கும்!! தாண்டினால் அறுந்து போகும் உறவு முறை. அதன் காதல் வெற்றி சில ஆண்டுகளில் பேரன் பேர்த்தி என்று சொந்தங்கள் சேர்ந்துவிடும் இலங்கையின் இனவாத கூட்டாச்சி போல !இதுதான் நம் சமூகத்தின்  நிதர்சன நிலை !


இதை நேரில் பார்த்தவன்  நண்பர்கள் மூலம்! முன்னர் !!

இப்ப நிதமும் முகநூலில் கண்டுகளிக்கின்றேன் குடும்பத்தின் வைபவங்களை  நட்புக்கள் ஊடாக !ஆனால்!!

  ஒரு ஆணுக்கு காதல்  வரும் போது அவமானங்களும், அட்வைஸ்களும் என்று தேர்தலில் போட்டியிடும் பல கட்சிகள் போல திடீர் திடீர் என்று தோன்றும் அதன் தாக்கம் குடும்ப உறவுகளைக்கூட சீர்கெட்ட இலங்கை இனப்பிரட்ச்சனை போல ஒட்டவும் முடியாது ,சேரவும் முடியாத, இடியப்ப அரசியல் இது எல்லாம் உனக்கு புரியுமா யாழினி?




உன்னைப்பார்த்த பின்பு நான் நானாக இல்லையே !உனக்கென உனக்கெனப்பிறந்தேனே !!உன்னோடு வாழத வாழ்வென்ன வாழ்வு !!!சொல்லத்தான் நினைக்கின்றேன், சொல்லாமல் தவிக்கின்றேன் என்று எல்லாம் சினிமா போல பாட என்னால் முடியாது !




சித்திரம் போல உன்
சிரித்த முகம் நெஞ்சில்!
சினேஹா போல
சிலேடையாக
சிந்தை மயக்கிய
சிலோனில்  பிறந்த
சிங்காரியே!! காதல்
சிக்னல் நீ கொடுத்தாள்!!
சிறுகொடியில் சேர்திடலாம்!
சித்திரை பிறக்கமுன் !!!
சில்லறை வியாபாரி வம்சம் இவன்!



என்று எல்லாம் கவிதை எழுத எனக்குத்தெரியாது    யாழினி !

சிலோனில் இருந்து வந்தவன், என்ற என் தூய சிந்தனை எல்லாம் உன்னோடு உயிரிலே கலந்தது போல ,காதல் கொண்ட என் வாலிப காதல்! காதல்கோட்டை போல ஜொல்லு என்ற  உனக்கும் !உன் உறவுகளுக்கும் புலம்பெயர் வாழ்க்கைக்கு குடியுரிமை அனுமதி கேட்க குறுக்கு வழியான சிந்தனை இது என்று எண்ணத்தேன்றியதா?




 ?? ஏன் என் போல இடைப்பட்ட வயதில் புலம்பெயரும் பொடியன்களுக்கு எல்லாம் புலம்பெயர் தேசத்தில் காதலே வரக்கூடாதா! ?,தியாகங்களும்,வேதனைகளும், வருமான இழப்புக்களும், வந்து போகலாம்!! ஆனால் காதல் வந்து போக இது என்ன வடமாகாண பொருளாதார மைய அரசியலா ?,





 என்னால் உனக்கு அதிக மனத்துயரம்தான்!! நான் தந்த காதல்ப்பரிசு உனக்கு இது என்று இப்ப புரியுது யாதவன்!!




 என்ன செய்ய !!யாருக்கு மாப்பிள்ளை யாரோ ,,என்பது விதியின் நிலை என்று இப்ப என்னைத் தேற்றிக்கொள்கின்றேன்!



 வேற என்ன நான் சொல்ல !ஆனால் ஒன்றுமட்டும் சொல்லு யாதவன் ?,

5 வருடம் என் காதலுக்கு காத்திருந்த நீ எப்படி மனம் விரும்பி மாயாவை கைபிடித்தாய்?


 ஒருவன் வாழ்க்கையை தீர்மானிக்க குடும்ப அரசியல் ஒரு பாராளமன்றம் போல இங்கே எதிர் தரப்பு அணி போலஎத்தனை உறவுகள் என்று நீ அறியமாட்டாய் கூட்டுக்குடும்பம் பற்றி !


இது பிரெஞ்சு போல அல்ல ஈழ /இலங்கை வாழ்க்கை முறை !அதை உன் கூட இன்றைய அப்பா பட சினிமா போல சொல்லி இருக்க மாட்டார் தம்பி ராமையா போலத்தானே அவரும் எல்லாம் அவர் முடிவு தானே !அவர் கூட என்ன படித்தார் !!இலங்கையில் சாமானிய கிளாக்! இங்க வந்த புதுப்பணக்காரன்[[[

என் அப்பன் .என் மாமா. என் வம்சம். படித்த பட்டதாரி பட்டங்கள்  கூட படிக்காதவர் ஆனால் எங்க அரசியல் பின் வழி ஊடாக பிரபல்யம் ஆக வழிகாட்டியது என் தாத்தா!


 ஆனாலும் நாங்க விபாரிகள் தான் !!அது எங்க சொத்து !!!இப்ப நீயும் ஒரு பட்டதாரி ஆனால் உன் சொத்து என்ன இன்னும் உன்   வேலைகூட நிச்சயம் இல்லை![[[ !நானும் பட்டதாரிதான் நம் நாட்டில் இங்க ஏதிலி இதைச்சொன்னால் உலகம் நம்பாது அதனால் தான் என்றும் நான் படிக்காதவன் என்று எங்கும் சொல்லுகின்றேன் சிரிப்புடன்[[[!


தொடரும்....








3 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

தொடர்கிறேன்நண்பரே

Thulasidharan V Thillaiakathu said...

தொடர்கின்றோம்.....சினேகா இல்லாமல் பதிவு இல்லை போலும் ஹஹஹஹ்

putthan said...

[quote]இது என்ன வடமாகாண பொருளாதார மைய அரசியலா [quote]


அரசியல் அங்க நிற்கின்றது தல.....தொடரட்டும்