27 July 2016

கவிதை போல கிறுக்கல்!!!

நினைவுகளுக்கு மட்டும்
நினைவில் ஒரு கல்லறை இருக்கும் எனில்
நீங்காத  உன் நினைவுகளையும்
நிச்சயம் அதில் புதைப்பேன்
நீ பிரிந்த அந்த நொடிகளை!//


/////

யாரோடும் நீ  சென்று வாழ்ந்தாலும்
என் யாசகம்
என்றும்  வாழ்த்தும் அன்பே!
யாசிப்பது உன் அழகையல்ல
யாதுமாகிய உன் நேசத்தை!
யானோ ஏதுமற்ற ஏதிலி!





//////////////////////////////////

இதயத்தில் நுழையும் காதல் போல
இமையும் இசையும்  இருவாசல் திறக்கின்றது!
இருண்டுபோன நம் இருவர் கைதிபோல,
இனியும் வசந்தம் என்று
இணைந்துபாடுவோம் இந்த
இனிய நாட்களை





//////////////////////

அடுப்படி வெப்பத்திலும் 
அனல்போல என் காதல்
அகதி உன்னைத்தேடியே
அலைந்து திரிகின்றது
ஆயுள்ச்சிறையில் என்றாலும் 
அணைத்துக்கொள்

முன்னம் கிறுக்கல் இங்கே-http://www.thanimaram.org/2015/03/blog-post.html

4 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

மன ஓட்டம் புரிகிறது
ஆயுள் சிறை விரைவில் கிடைக்கட்டும்

Yarlpavanan said...

சிறந்த பாவரிகள்
தொடருங்கள்

KILLERGEE Devakottai said...

இரசித்தேன் நண்பரே விரைவில் நலமாகும்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

உணர்வுகளை சிறப்பாக கவிதைகளை வடிக்கும் தங்களின் பாணி அலாதி.