20 February 2017

காற்றில் வந்த கவிதைகள்--8

முன்னர் கவிதைகள் இங்கே-http://nesan-kalaisiva.blogspot.fr/2017/02/7.html

வடிவென்பது வாழ்க்கையில்
வந்து போகும் நட்புப்போல தாலி
வரம் என்பது இயல்பில்
வரலாறு போல
வார்த்தை கொண்டு
வடிவமைக்கமுடியாத
வானவில் போல
வா அன்பே சேர்ந்தே
வரைவோம் இல்லறம்!
///

///தொழில்நுட்ப வளர்ச்சியின் 
தொடர் பரிமானம் போலத்தான்
தோன்றினேன் தாயின் கருவில்!
தொப்புள்க்கொடி உறவாய் 
தொலைக்கின்றார்கள் என்னிடம்
தொலைபேசியை தோண்டுவதால்!
தோன்றாமல் இருந்து இருக்கலாமோ?
தொடரும் கேள்வி நெஞ்சில்!///



//வேண்டாம் நீ என்று 
வெறுத்துபோனவன் இப்போதும்
வேண்டும் நீ என்று காத்திருப்பது
வேறுயாரும் காட்டாத 
வேசமில்லாத பாசம் தந்த
வேங்கையே!
/////

எத்தனை இடர்கள் வரும் போதும்
என்னால் முடித்து வைக்க 
எப்போதும் தயாரானவன்
என்ற நம்பிக்கையே!
எந்த அரசியல் வெற்றியையும்
ஏற்றிவைக்கும் மகுடம்!


1 comment :

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

காற்றில் வந்த கவிதைகள் மனதை நிறைத்தது