01 March 2017

காற்றில் நீண்ட மூச்சு கவிதை)))

நினைவுகள் தாலாட்டும்
நீ தந்த நிறைவான
நம்பிக்கையை இன்னும்
நிஜத்தில் கிடைக்கும்
நல்லாட்சி போல என்னியே
நானும் நிதமும்
நாம் பேசிய
நம்பூமி எங்கும்
நிழல் போல
நீலப்படையின்
நீங்காத பார்வை அம்புகள்
நிலத்தில் தேடுவது போல
நீண்டு தொடை எங்கும்
நீட்ட நினைக்கையில்
நிஜமான நல்லாட்சிக்கு
நீட்டி முழங்கும்
நம்பிக்கைவாசகம் எல்லாம்
நாற்றம் காணும் மீன்கள் போல
நாளைசெய்தியில்
நம் கதை பேசினாலும்
நான் காத்திருக்கின்றேன்
நல்லாட்சி தரும் தீர்வு போலவே
நாளை என்றாலும்
நம் கனவு
நிஜமாகுமா?

///



3 comments :

M0HAM3D said...

அருமையான கவிதை

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

ஆஹா நேசன் எப்போ கவிஞர் ஆனார்??? நீண்ட இடைவெளியின் ஆரம்பமே புரட்சிக் கவிதையில் ஆரம்பிக்கிறீங்க ... தொடருங்கோ நேசன் .

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

எப்பவுமே மனதை உருக்கும் பாடல்.