முன்னர் கவிதைகள் இங்கே-http://www.thanimaram.com/2017/03/11.html
------------------------------
மதிப்பு எண்கள் மட்டும்
மாற்றங்கள் தருவதில்லை வெற்றி என்று
மாறாத திறமைக்கு !
மல்லுக்கட்டும்
மானிடம் வென்றது என்று
மரணிப்பது அழகல்ல
மறுதேர்வு மறுபடியும்
மலரும்!///
---/
வந்து போகும் வாழ்வியலில்
வடிகட்டின முட்டாள் என்று!
வதைத்த நட்புக்களை வணங்கி
வரவேற்க இது வணக்கஸ்தல
வரவேற்பு பீடம் அல்ல நட்புக்களே!
வழிதவறாது வாழும்
வழிப்போக்கன் சாலை
வழிகேட்டு யாசகம் நட்பு
வழி கேட்க மட்டும் இங்கே
வாழும் துறவி இவன்!---/
///::
விடைபெற்ற உன் காதல் இருப்பிடத்துக்கு
விடையாகி வந்தாள் நேசத்தில்
விடுகதை போல ஒருத்தி
விடுதலையான கைதி போல
விரும்புகின்றது மனம்
விரைந்து மணம் முடித்த மனைவி என்ற
வீரமகள்!----
//:நல்லாட்சியின் கொடிப்பறக்க,
நம்மவர்கள் வெளியேறு ,வெளியேறு
நல்லவேஷம் இது .
நம் கலையும்
நம்ம நிலமையும் மாறவில்லை
நாம் போராடத்தயார் என்று
நாலுபேர் குடைபிடிக்க!
நம்நாட்டில் இது வாடிக்கை
நாம் கைகுழுக்குவோம் வாருங்கள்
நல்லவனுக்கு நல்லவன் என்று
நம் முதல்வரும்
நாளைய வருங்கால முதல்வரும்
நயமாக கைகுழுக்க விழாவில்
நடுநாயகமாக வீற்று இருந்தார்
நம் தேச சூப்பர்ஸ்டார் ரஞ்சன் ராமநாயக்க
நாளைய தலைப்புச் செய்தி இது!..
.//////////////
என்னைப்போல நீயும் கைகட்டகூடாது
என்று தானே எல்லா மொழியும்
ஏனோ கற்க வைத்தேன்!
என் மனம் கல்லாக
ஏண்டா என் வாரிசாக !
என்னை எல்லாரிடமும்
ஏதிலி போல
ஏன் கையேந்த விட்டாய்!!
எல்லாம் பாழாப்போன
ஏதோ மோகம் என்றால்!
என்னைக்கொன்று விடு!
என் மூச்சு வியாபாரம்
எனக்கு வெற்றிலை போல சிரிக்கவும்
எதுவென்றாலும் கொட்டப்பாக்கு போல
ஏனோ கோபத்தில் சிவக்கவுகம் மட்டும் தான்
என்னால் முடியும்!
ஏனோ பிச்சை கேட்க
என்னால் முடியுல!
எங்கு இருக்கின்றாய்!
விரைவில் !!!!!!!!
1 comment :
அடடா ஒரு எழுத்தை வைத்து ஒன்பது வரிக் கவிதையா.. நல்ல முயற்சி நேசன் தொடருங்கோ.. ஆனா முதலிரண்டும் எனக்குப் புரியவில்லை..
Post a Comment