22 March 2017

காற்றில் வந்த கவிதைகள்-11

முன்னர் இங்கே-http://www.thanimaram.com/2017/03/10.html
---------------------------------------------------
கண்ணீருடன் கடதாசி தந்து
கவிஞன் நீ என்று
காதில் சொல்லி
கடல்கடந்தாலும்  ,அன்பின்
கவலைமறந்த காளை இவன் என்று
கவிதை தீட்டுவேன் !
காற்றலையில் வந்து
காதோடு
கவிபேசும்  என் கவிதை
கண்ணீர்விழிகளுடன்!
காணமல் போனவன்!


-----


கருவில் சுமக்கும் போது
கண்ணீர்விட்டவளில்லை கன்னே!
கரையில் சேரும் ஓடம் போல
கையில் தவழ்ந்த போதும்
கலங்காதவள் !கண்மணி என்று
கண்ணுக்குள் நிலவாக
கடைசிவரை இருப்பாய் என்ற
கனவை கலைத்தது இனவாத
கண்ணோட்டம். கானமல் போன
கைதிகளில் நீயும் ஒருவனா ?
கதறும் என் நிலை காவிகளுக்கும்,
கடவுளுக்கும் கேட்கலயா?
காணமல் போனவனை
கண்டு பிடிப்போர் யார்?////

--------------------------------

----அருகில் இருப்பாய்
அணைத்துக்கொள்வாய் என்றெல்லாம்
அனுதினமும் கனவுகண்டேன்!
ஆத்திரத்தில் அடித்த கரங்களுக்கு
அத்துமீறல் என்று
அரசபீடத்தில் அழுத்தி உரைத்தாய்!
அதிகபட்ச தண்டனையாக
ஆனாதைபோல் ஆக்கிவிட்டாயே
ஆவி பிரிந்து சென்று
அன்புக்காதலியே!!!!


////


---/வேடதாரிகள் வருகின்றார்கள்!
வேட்டி கட்டி, வேஷம் போட்டு!
வேண்டும் வாக்கு என்று!
வேடம் களைப்பீர்களோ?
வேண்டும் பணத்துக்கு
வேட்டுவைப்பீர்களோ?
வேதனையுடன்
வேற்றுப்பார்வையாளர்கள்!






11 comments :

முற்றும் அறிந்த அதிரா said...

ஆஆஆ நேசன் கவிதைகள் படிச்சு மனம் கனத்து விட்டது. ஒவ்வொருவரின் உணர்வையும் மிக அழகாக வெளிப்படுத்தியிருக்கிறீங்க.

முற்றும் அறிந்த அதிரா said...

கவலையைத் தாண்டி, நேசன் கவிஞராகிட்டார் என்பது கன்போமா தெரியுது... ஹேமா தான் றீச்சரா நேசனுக்கு?:),

முற்றும் அறிந்த அதிரா said...

வீடு கட்டி கிளீனிங் வேலை எல்லாம் முடிஞ்சுதோ? ஐ மீன்ன்ன் புளொக்கை கேட்டேன்.

Angel said...

நேசன் ஒவ்வொருமுறையும் உங்க பிளாக் என்னை உள்ளே விட மாட்டேங்குது .அதுகிட்ட சொல்லி கொஞ்சம் :)
கவிதையெல்லாமே நல்லா இருக்கு ..கையில காசு வாயில தோசை பாட்டு ரொம்ப ஆழமான கருத்துள்ள பாடல்
நீங்க மட்டுமே இப்படிப்பட்ட பாடல்களை சலிக்காம தேடி பகிர்கிறீர்கள் ..அரசியல் வியாதிகளை துகில் உரிப்பாங்க அந்த அக்காலத்து பாடல் மற்றும் படங்களில் ..

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அரசியல் வாதிகளின் சாயம் வெளுப்பது மக்கள் கையில் இருக்கிறது. ஆனால் பணம் கண்ணை மறைக்கிறது

தனிமரம் said...

கவலையைத் தாண்டி, நேசன் கவிஞராகிட்டார் என்பது கன்போமா தெரியுது... ஹேமா தான் றீச்சரா நேசனுக்கு?:/ஹேமா போல என்னால் எழுத முடியாது ஆனாலும் உணர்ச்சி பூர்வமான கவிதை எழுத ஹேமாவும் ஒரு உந்து சக்தி! இப்போது ஹேமா வலையில் இல்லாவிட்டாலும் என்றும் நினைவில் இருக்கும் ஒரு நல்ல தோழி/பின்னூட்டவாதி/கூட்டுக்களவானிகள் இப்ப ஒய்ந்துவிட்டார்கள் அதிரா!ம்ம்

தனிமரம் said...

வீடு கட்டி கிளீனிங் வேலை எல்லாம் முடிஞ்சுதோ? ஐ மீன்ன்ன் புளொக்கை கேட்டேன்./கூகில் ஆண்டவ்ர் ஆடும் கூத்து அது விரைவில் இந்த தடையை மாற்றி தனிமரத்தை பலரிடம் சேர்த்தாலே போதும்! இல்லையோ விரைவில் கட்டின காசு சினேஹாவுக்கு கொடுத்த சீதனம் போல நினைத்து மீண்டும் பழைய நேசன் -கலை/வலையாக மீண்டும் வருவேன்[[நன்றி அதிரா வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நேசன் ஒவ்வொருமுறையும் உங்க பிளாக் என்னை உள்ளே விட மாட்டேங்குது .அதுகிட்ட சொல்லி கொஞ்சம் :)/
/நானும் பலரிடம் கேட்கின்றேன் அஞ்சலின் அக்கா பதில் இன்னும் முகநூல் ஊடாக/தனிமெயில் ஊடாக கை சேரவில்லை!அதுவரை ஏற்படும் உங்களின் அருமையான நேரச்செலவுக்கு மன்னிப்புக்கள் ..கோருகின்றேன்!

தனிமரம் said...

..கையில காசு வாயில தோசை பாட்டு ரொம்ப ஆழமான கருத்துள்ள பாடல்
நீங்க மட்டுமே இப்படிப்பட்ட பாடல்களை சலிக்காம தேடி பகிர்கிறீர்கள் ..அரசியல் வியாதிகளை துகில் உரிப்பாங்க அந்த அக்காலத்து பாடல் மற்றும் படங்களில்/பிடித்த பாடல் இப்ப எல்லாம் இப்படிப்படம் வருவதில்லை மனம்கவர் வண்ணம் என நினைக்கின்றேன் முன்னர் போல சினிமா மோகம் இப்ப இல்லாமல் போய்விட்டது ஒரு வேளை வயசு போச்சு போல[[நன்றி அஞ்சலின் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

அரசியல் வாதிகளின் சாயம் வெளுப்பது மக்கள் கையில் இருக்கிறது. ஆனால் பணம் கண்ணை மறைக்கிறது/மாற்றம் வரட்டும் முரளி அண்ணாச்சி! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

வலிப்போக்கன் said...

ஒரு நாள் மாற்றம் வந்தே தீரும் அன்று நம் கவலைகள் கலையும்....