06 March 2017

காற்றில் வந்த கவிதைகள்-9

இது வரை இங்கே--http://nesan-kalaisiva.blogspot.fr/2017/02/8.html

கடும் பணி என்று
களைத்துச்சாய்ந்த போது
கல்லிலும் சிலை செய்யலாம்
கலங்காத நீ காளை என்றவளை
காணாமல் தேடுகின்றேன்
கடும்பணி தந்த பரிசு
கல்லுப்பதித்த வைர மோதிரத்துடன்!/




////////////////


புனிதனாக வாழ ஆசைதான் !
புழுதிவாரித் தூற்றும்
புறந்தள்ளி இவன் மோசக்காரன் என்று
புலம்பெயர்ந்தவன்
புண்ணியமாக சில லட்சங்கள்
புண்ணியம் செய்யாத போது!///:

//:
இழந்த போகவில்லை நம்
இருப்பிடம் இன்னும்
இருக்கக்கூடாது என்றுதானோ?
இடித்துவிட்டார்கள் ஆலயம் முதல்
இடுகாடுவரை .என்றாலும்!
இன்னும் நம்மூர்
இலங்கை முதல்
இந்த உலகம் எங்கும்
இதோ விடுவித்த கதை பேசுகின்றது
இனியும் ஒரு விதி செய்வோம்!///


//////////////





5 comments :

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

அருமை! வார்த்தைகளுக்குள் ஒளிந்து கிடக்கும் யதார்த்தம சுடுகிறது

Angel said...

மோதிரத்தை கொடுத்திட்டீங்களா ?


அந்த பாடல் ஆண் குரல் கணீரென ஒலிக்குது

முற்றும் அறிந்த அதிரா said...

கதை சொல்லும் படங்கள் அருமை. பாட்டுக் கேட்க முடியவில்லை, படம்தான் தெரியுது .

முற்றும் அறிந்த அதிரா said...

பெரும்பாலும் வீடியோக்கள் மொபைல்களில் பார்க்க முடிவதில்லை என நினைக்கிறேன்.

வலிப்போக்கன் said...

அருமை......